மனு எண்:

'வீரபாண்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :எம்.ஜெயக்குமார் த-பெ.முருகேசன் வீரபாண்டி காலனி திருமால்புரம் அஞ்சல் மதுரை-14 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டி ஊராட்சி ஊராட்சி உதவித் தலைவா் ஏ.பாண்டி த-பெ ஆறுமுகக்கோனார் அவரும் அதே ஊரே சேந்த என்.கோபால் த-பெ நல்லமாடக் கோனார் ஆகிய இருவரும் தனது வீட்டினுள் 6 அடி பள்ளம் தோண்டி அதற்குள் ஊராட்சி குடித்தண்ணீா் குழாயிலிருந்து மின் மோட்டார் மூலம் குடித் தண்ணீரை திருடி டீக்கடைக்கு விற்றும், மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம்.ஜெயக்குமார் த-பெ. முருகேசன் வீரபாண்டி காலனி வீரபாண்டி ஊராட்சி திருமால்புரம் போஸ்ட் மதுரை-14 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டி ஊராட்சியில் பொது மயானத்தில் உள்ள தெரு விளக்கு பலமாதங்களாக எரியவில்லை. பலமுறை சம்பந்தபட்டவர்களிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதைக்கண்காணித்து தெருவிளக்கு பொருத்த உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :செ.முருகன் மற்றும் செல்லையா த-பெ. செல்லமணி 1-113, திலகர் தெரு, திருமால்புரம் அஞ்சல், மதுரை-14. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, நான் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன். மதுரை வடக்கு வட்டம் வீரபாண்டிகிராமம் பிட் 2, புல எண். 75-5ஏ எங்களுக்குரிய இடம், 75-5பி மற்றும் 75-5சி எங்களுடைய பாகத்தை கூடுதலாக மற்றோருவருக்கு இணைக்கப்பட்டுள்ளன. இது தற்போது மாவட்ட வருவாய் அலுவலா் அவர்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ந.க.எண்.22107-2011-ஜி5, தற்போழுது [...]

முழு மனுவைப் பார்க்க »