மனு எண்:

'விராலிபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: ரா.ரங்கன் த‌/பெ.ராமன் டி.விராலிப்பட்டி,கிழக்கு தெரு, டி.வாடிப்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.75 எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ரா.ரங்கன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம். சின்னப்பொன்னு, க/பெ.வி.பி.மாரியப்பன், ‌டி.விராலிப்பட்டி கிழக்குத்தெரு, ‌டி.வாடிப்பட்டி-625218 மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். எனது மகன் சுதந்திரம் என்பவர் கடந்த 17/10/2010ம் தேதி அன்று விபத்தில் இறந்து விட்டார். அரசு வழங்கும் விபத்து உதவித்தொகை வேண்டி வட்டாச்சியர், வாடிப்பட்டி அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அதற்கான உதவித் தொகையும் வட்டாச்சியர், வாடிப்பட்டி அலுவலகத்திற்கு வந்துவிட்டது. முறையான [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், விராலிபட்டி கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, ‌எங்கள் ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இதுநாள் வ‌ரை ‌எங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் தினசரி வேலைக்கு செல்‌வோரும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் எங்கள் ஊருக்கு செல்லும் வழியில் நான்கு வழிச்சாலை உள்ளதால் அதைக்கடக்க வயதானவர்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரியப்பன் த/பெ . வெள்ளையன் தெற்குத்‌ தெரு காலணி விராலிபட்டி கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.75 எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, மாரியப்பன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சி. மூக்கம்மாள் க/பெ சிங்காரம் டி.விராலிபட்டி, தெற்கு தெரு காலனி டி. வாடிப்பட்டி அஞ்சல், தாலூகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கணவனால் கைவிடப்பட்டு எனது மகளுடன் வசித்து வருகிறேன். ‌எனக்கு 75 வயது ஆகிறது என்னால் வேலை எதுவும்‌ செய்ய இயலவில்லை. நான் பலமுறை வட்டாச்சியர் அலுவலகத்தில் ‌நேரில் மனு கொடுத்துள்ளேன் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், விராலிபட்டி கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. விராலிபட்டி கிராமம் சிவனாண்டி தோட்டமுதல் அய்யனார் கோவில் வரை தார் சாலை அமைத்து கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »