மனு எண்:

'வேடர்புளியங்குளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :எஸ்.மணிமேலை, க-பெ.எம்.சுரேஷ்பாபு, 4, ஜி.எஸ்.டி.ரோடு, மேலபச்சோி, திருப்பரங்குன்றம், மதுரை-5. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வணக்கம். என் கணவா் கூலிவேலை செய்கிறாா். மூத்தபெண் மூளை வளா்ச்சி இல்லாதவா். நான் தையல் பயிற்சி கற்றுள்ளேன். எனவே தயவுசெய்து தையல்மிஷன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள, எஸ்.மணிமேலை, க-பெ.எம்.சுரேஷ்பாபு, 4, ஜி.எஸ்.டி.ரோடு, மேலபச்சோி, திருப்பரங்குன்றம், மதுரை-5.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பா. கருப்பாயி க.பெ ஆர். பாண்டி(லேட்) 1ஃ53, மந்தைதெரு வேடர்புளியங்குளம், திருப்பரங்குன்றம் ஒன்றியம் மதுரை-6 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் ஏழைக் குடும்பத்தை சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த கணவனை இழந்த விதவை ஆவேன். நான் சொந்த வீடு இன்றி கஸ்டப்பட்டு வருகிறேன். எனக்கு தமிழக முதலமைச்சாின் சூாிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஆவண செய்யுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் உாிய ஆவணங்கள் சமர்ப்பிக்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழகர்சாமி, த-பெ.பெருமாள் 1-170, பாரதி நகர், வேடர்புளியங்குளம் தனக்கன்குளம் (அஞ்சல்), மதுரை-6 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது. எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, அழகர்சாமி.

முழு மனுவைப் பார்க்க »