மனு எண்:

'வரிச்சியூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :த.பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்றத் தலைவா், வரிச்சியூர் கிராமம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வரிச்சியூர் கிராமம் மதுரை-சிவகங்கை சாலையில் அரசு மதுபானக்கடை வரிச்சியூர் பஸ் நிறுத்தத்தில் இருப்பதால் பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் பஸ்ஸில் ஏறமுடியாமல் அவதிபடுகின்றனர். மேலும் சமூக விரோதிகளால் தொந்தரவு ஏற்படுகிறது. இரவுகளில் ரோட்டில் வழிமறித்து கொள்ளையடிப்பதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் செய்வதால் மேற்படி கடையினை அகற்றும்படி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சரவணக்குமரன் தெற்குவாசல் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அன்புள்ள ஐயா, மதுரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பொழுதுபோக்கிற்க்கு இடம் இன்றி தவித்து வருவது உங்களுக்கு நன்கு தெரிந்ததே. விரகனூர் அணை அருகாமையில் அமைக்கப்பட்ட பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் உபயோகிக்க இயலாத நிலையில் உள்ளன. அது மட்டுமல்லாமல், அங்கே சமூக விரோதிகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். நன்றி. இவண் – சரவணக்குமரன் தெற்குவாசல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.ந.சுந்தரராஜன், த-பெ.நரசிங்கம், வரிச்சியுா் போஸ்ட், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை வடக்கு வட்டம், வரிச்சியுா் கிராமத்தில் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை இருந்தது. அதில் தற்போது ஆடு, மாடுகளை கட்டிகொண்டிருக்கிறார்கள். அது தற்போது இயங்கச் செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ந.சுந்தரராஜன், வரிச்சியுர்

முழு மனுவைப் பார்க்க »