மனு எண்:

'திருமாணிக்கம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: அரசன் த/பெ சின்னமுனியான்டி , டி.ராமனாதபுரம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம், நான் ஆதிதிராவட வகுபபை சார்ந்தவர், எனக்கு வேலை செய்யும் சக்தி இனி இல்லை, ஆகவே எனக்கு முதியோர் ஒய்ஊதியம் தருமாரு தஙகலை பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள் தி.ராமநாதபுரம் (P.O) திருமாணிக்கம் ஊராட்சி, சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். எங்களது ஊரில் ஆதிதிராவிடர் இனத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து,குடி தண்ணீருக்கும் மற்றும் பிற பயன்பாட்டிற்கும் கடினமாக உள்ளதால் ,குடிநீர் தொட்டியை சரி செய்து தரும்படி தங்களை பாதம் தொட்டு வணங்கி,கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தி.ராமநாதபுரம் (P.O) திருமாணிக்கம் ஊராட்சி, சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். எங்களது ஊரில் ஆதிதிராவிடர் இனத்திற்கு உட்பட்ட பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் மிகுந்த இடர்பாடுகள் ஏற்படுகிறது. ஆதலால் அப்பகுதிக்கு சாலை வசதி செய்து தரவேண்டி தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தி.ராமநாதபுரம் (P.O) திருமாணிக்கம் கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். எங்களது ஊரில் தென்பகுதியில் உள்ள வீடுகளீல் புழங்கும் நீரினை கடத்துவதற்கு சாக்கடை வசதி இல்லாததால் ஒரே இடத்தில் நீர் தேங்கி ,நோய் நொடிகளை உண்டாக்குகிறது. ஆதலால் அந்த பகுதிக்கு சாக்கடை வசதி செய்து தர வேண்டி தங்களை பணீவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஊர் பொதுமக்கள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அய்யாவு த/பெ வருதராஜ் தி.ராமநாதபுரம் PO பேரையூர் TK மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். மேற்கண்ட முகவரியில் வசித்து வரும் நான் வறுமையில் வாழ்ந்து வருகிறேன்.நேர்மையே உருவான தாங்கள் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஆவண செய்யும்படி உந்தன் பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வ.அய்யாவு. நாள்.21.02.2012

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: குருவம்மாள் க/பெ பரமசிவம் தி.ராமநாதபுரம் (P.O) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். மேற்கண்ட முகவரியில் வசித்து வரும் நான் வறுமையில் வாழ்ந்து வருகிறேன். ஆகவே தயை கூர்ந்து எனக்கு முதியோர் உதவித்தொகை தந்தருளும்படி பணிவன்புடன் விழைகிறேன். இப்படிக்கு உண்மையுள்ள குருவம்மாள் நாள்.20.02.2012

முழு மனுவைப் பார்க்க »