மனு எண்:

'தேனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: லோகசுந்தரி சோனைமுத்து பி.எஸ்ஸி தேனுார் பஞ்சாயத்து தலைவர் தேனுார் ஊராட்சி மதுரை மேற்கு மதுரை 625 402 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா தேனுார் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் இ்ன்றி நெடுச்சாலை யை பயன்படுத்துகின்றனர் அதனால் மகளிருக்கு பெரும் இன்னல்கள் ஏற்படுகின்றன.ஆகவே கிராம மக்களின் கேரரிக்கையினை ஏற்று மகளிர் சுகாதார வளாகம் உடனடியாக அமைத்துத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இரா.செல்வக்குமார் மற்றும் கிராம பொதுமக்கள், வாசுகி தெரு, தேனூர்,மேற்கு ஊராட்சி ஒன்றியம், வடக்கு தாலுகா. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா, மேற்கு ஊராட்சியை சேர்ந்த தேனூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தில் சுற்றுசுவர் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் குடியிருக்கும் தலித் இன மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக ஆழ்குழாய் கிணறு உள்ளது. இப்பணி மேற்கொள்ளப்படுவதால் ஆழ்குழாய் கிணறு மூடப்படும். மக்களுக்கு தண்ணீருக்கு சிரமப்படும் நிலை உருவாகி விடும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மோ.முத்தம்மாள், க-பெ.மோஸஸ், ஆதிதிராவிடா் காலனி, தேனுார் ஊராட்சி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மேற்காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் இந்து-பறையா் வகுப்பைச் சார்ந்தவா்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு குடியிருந்து வருகிறோம். தற்பொழுது எங்கள் வீட்டின் முன்பு சுமார் 11/2 அடி இடம்விட்டு துணை சுகாதார நிலையத்திற்கு சுற்றுசுவா் கட்டப்படுகிறது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.லோகசுந்தரி சோணைமுத்து தலைவர் தேனூர் ஊராட்சி தேனூர்- 625 402 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. தேனூர் பஞ்சாயத்தில் கண்மாய் கரையோரம் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி 500 மரக்கன்றுகளை நட்டு நீர் ஊற்றி பராமரித்து வருகிறோம். மேலும் ஊரணி பரப்பளவு 21ஃ2 ஏக்கர் ச.எண். 6-1 ஹெக்டேர் 17 ஏர்ஸ் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க ஊரணியை அளந்து அத்து மால் செய்ய வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் தேனூரில் சில [...]

முழு மனுவைப் பார்க்க »