மனு எண்:

'ஒத்தக்கடை' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர் :எம்.எஸ்.மூர்த்தி, த.பெ.எம்.ஆா்.சுந்தரம், 552-5 பி, திருவள்ளுவா் தெரு, சதாசிவநகர், மதுரை – 625 020. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. என் வயது 71. நான் 17.8.2011ந் தேதி கொடுத்த மனு ஜி-2 உதவியாளரிடம் உள்ளது குறித்து விசாரணை செய்து நடடிவக்கை எடுக்கும்பொருட்டு பலமுறை நினைவூட்டியும், மனு காணவில்லை என்றதன் பேரில் மீண்டும் மறுமுறை 7-5-2012ந் தேதி மனுவின் நகல் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கூறியும், இதுநாள் வரை எந்தவிதமான பதிலோ [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு. பி. ராமன் கருப்புக்கால் ஒத்தக்கடை மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனக்கு வயது 70 ஆகிறது. எனக்கு ஆதரவிற்கு யாரும் இல்லாததால் நானும் எனது மனைவியும் மிகவும் கஷ்டப்படுகிறோம் வேலை செய்யும் திறனும் இல்லை. எனவே எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு பி.ராமன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு. பி. ராமன் கருப்புக்கால் ஒத்தக்கடை மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, குடும்ப அட்டை வேண்டி பலமுறை விண்ணப்பிததும் எனக்கு குடும்ப அட்டை வழங்கவில்லை. எனவே எனக்கு குடும்ப அட்டை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொளகிறேன். இப்படிக்கு பி. ராமன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அழகா் ராஜீவ்காந்தி நகா் 3-வது தெரு ஒத்தக்கடை மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை வடக்குவட்டம், ஒத்தக்கடை, ராஜீவ்காந்தி 3-வது தெருவின் இறுதிப்பகுதியில் கால்வாய்க்கு செல்லும் வழி ராமசாமி என்பவரது மனைவி பொன்னம்மாள் என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் கால்வாய் பகுதி பக்கம் செல்லமுடியவில்லை. தனிநபா் ஆக்கிரமிப்பு செய்து கதவு போட்டு அடைத்துள்ளார். எனவே, மேற்படி ஆக்கிரமிப்பினை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்திடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு அழகா்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: r elango kumar 308 l i g colony k k nagar madurai cell 9159153678 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. sir, i am a resident of l i g colony k k nagar. for more than a month ud water has stagnated in the canal build for the drainage of rain water. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஜி.கலா க-பெ. கணேசன் 2-170 நரசிங்கம் ரோடு யா.ஒத்தக்கடை மதுரை 625 107 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, மேலூரில் எனக்கு சொந்தமான நிலத்தினை மந்தைவீரன் என்ற போஸ் (கிராமநிர்வாக அலுவலா்) மற்றும் சிலா் சோ்ந்து போலியாக பத்திரம் தயார் செயத வழக்கு 2008 முதல் நிலுவையில் உள்ளதை 25.8.2010 அன்று 90 நாட்களுக்குள் விசாரணை செய்து முடிக்குமாறு மதுரை உயா்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவினை மதுரை வருவாய் கோட்டாட்சியா் அவா்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »