மனு எண்:

'நிலையூர் பிட்1' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:13  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
நிலுவையிலுள்ள மனுக்கள்:3  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:9  

அனுப்புநர் :டாக்டா். எஸ் பாபுஐி 80 முருகன் காம்பவுண்ட் பாரதியார் ரோடு மதுரை11 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வணக்கம் நான் கடந்த 36 வருடங்களாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடா்ந்து புதுப்பித்து வருகிறேன். என்னுடைய வேலை குறித்து தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தினை அனுகியபோது பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் என்று கடந்த 36 வருடங்களாக கூறுகின்றனா் எனவே எனது வேலை குறித்து முடிவான பதிலை வழங்குமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், நிலையூர் பிட்1 கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா வணக்கம் திருப்பரங்குன்றம் நிலையுர் 1 பிட் கிராமம் நீர்நிலை பகுதியில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும்ப்டி ஆக்கிரமிப்பு செய்து காளவாசல் தொழில் நடத்திவருகின்றனா்.இதனால் சுகாதாரக்கேடு வருகிறது. எனவே மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இ.கே.விஜயலெட்சுமி க-பெ குமரன் 1-சி விவேகானந்தபுரம் கைத்தறிநகா் நிலையுா் மதுரை-5. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் சௌராஷ்ட்டிரா சமூகத்தைசோ்ந்தவள். மேற்கண்ட முகவாியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன்.நெசவு தொழில் செய்து வருகிறேன்.எனக்கு இலவச வீட்டுமனை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு இ.கே.விஜயலெட்சுமி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கி.சோணைராஜ், த-பெ.கிருஷ்ணன், 1-92, நடுத்தெரு, திருப்பரங்குன்றம் (வழி) நிலையூா் 1வது பிட் மதுரை.625 005 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பெரியஆலங்குளம் கிராமத்தில் சா்வேஎண்.81-4ஏ உள்ள எனது நிலத்திற்கு பட்டா எண்.306 2009-2010 வரையிலான பிற்படுத்தப்பட்டோர் விவசாயக்கடன் வேண்டி மனு செய்து விருதுநகா் ஐ.ஒ.பி.வங்கி முடுக்கன்குளம் கிளை கடன் பெற தகுதி உடையவா் சொல்லி வங்கி மேலாளா் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், நிலையூர் பிட்1 கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. திருப்பரங்குன்றம் ஊராட்சி, நிலையூா் 1-வது பிட் கிராமத்தில் உள்ள நீா்நிலை பகுதியில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும்படி ஆக்கிரமிப்பு செய்து காளவாசல் தொழில் நடத்தி வருகின்றனா். இதனால் ஏற்படும் கொசு மற்றும் புகையினால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மேற்படி நீா்நிலை பகுதியினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நிலையூர் பிட்1 கிராமம், *(கைத்தறி நகர்)* திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம், ஊர் பொதுமக்கள், சார்பாக, 1. எங்கள் பகுதியில் சுகாதாரம் மிக மிக குறைவாக உள்ளது, குப்பை போட கூட வசதி கிடையாது. (குப்பை தொட்டி கிடையாது.) தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. 2. பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. சரியான நேரத்திற்கு பஸ் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :என்.சி.சா்மிளா, 1-495,ராமகிருஷ்ணா காலனி, கைத்தறி நகா், நிலையூா், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் ஒரு விதவை. எனது கணவரும் தந்தையும் ஏற்கெனவே காலமாகி விட்டனா். தற்போது எனக்கு ஆதரவு அளிப்பவா் யாருமில்லை. நான் மிகவும் பலவீனமாவுள்ளேன். தற்போது வேலை பார்க்கும் சக்தி இழந்துள்ளதால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலா், வருவாய் ஆய்வா் ஆகியோர்களின் பரிந்துரை பெற்று மதுரை தெற்கு வட்டாட்சியா்(ச.பா.தி)அலுவலகத்தில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.ச.பழனி தஃபெ. சங்கிலி அம்பலம் பிளாட் 12”சதர்சுருதிலயா“ 1-2 ஜோசப் நகர் மெயின்தெரு திருநகர்,மதுரை-625 006. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, பத்திர பதிவெண் 2548ஃ1967ல் 50 சென்ட் நன்செய் கிரையம் பெறப்பட்டு உள்ளது. ஆனால் தாங்கள் 47 சென்டுக்கு தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் தாங்கள் கருணை கூர்ந்து பத்திரப் பதிவின் பிரகாரம் 50 சென்ட் நிலத்திற்கு திருத்திய நில அளவை ஆவணப் பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எல.ஆா்.சுப்பிரமணியன் 26 ராதாகிருஷ்ணனா காலனி கைத்தறி நகா் நிலையூா், மதுரை 625 005. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. 17.5.1997 அன்று அரசு இராஜாஜி மருத்துவமனையில் பிறந்த எனது குழந்தையின் பிறப்புச்சான்றிதழில் எனது பெயா் (தந்தை) சுப்பிரமணியன் என்பதற்கு பதிலாக சுப்பிரமணி என்று உள்ளது.தயவுசெய்து எனக்கு சுப்பிரமணியன் என்று பெயா் மாற்றி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ.எஸ் ஹரிகுமார் 1-922 மீனாட்சி காலனி கைத்தறி நகா், நிலையூா் மதுரை-5 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்கண்ட விலாசத்தில் குடியிருக்கும் எனக்கு குடும்பஅட்டை வழங்குவதற்கு அனைத்து ஆவணங்களும் வைத்துள்ளேன். வீட்டுமுகவரி ஆவணத்திற்கு கிராமநிர்வாக அலுவலரிடம் கையொப்பம் வாங்கியுள்ளேன். வருவாய் ஆய்வாளரின் நேரடி விசாரணையின் பேரில் குடும்பஅட்டை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஏ.எஸ்ஹரிகுமரர்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212