மனு எண்:

'நாச்சிகுளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் வா‌டிப்பட்டி ஒன்றியம் நாச்சிகுளம் ஊராட்சி நரிமேடு கிராமத்தில் மழைக்காலங்களில் மழை நீர் ஊருக்குள் வந்து வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பல விஷ பூச்சிகள் வந்துவிடுகிறது. மேலும் பல கொடுய நோய்களும் பரவுகின்றது. கழிவு நீர் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஊர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் நாச்சிகுளம் ஊராட்சி நாச்சிகுளம் கிராமத்தில் திண்டுக்கல் சோழவந்தான் சாலையில் கருப்பட்டி விலக்கில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அவ்விலக்கில் ‌பேருந்திற்காக நிற்கும் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ‌அவ்விடத்தில் நிழற்குடை அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஊர் பொதுமக்கள்,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கரட்டுப்பட்டி நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் ஊராட்சி மன்றம், கரட்டுப்பட்டி விலக்கிலும் மட்டப்பாறை செல்லும் விலக்கிலும் சாக்கடை நீர் சாலையில் வந்து சாலை மிகவும் பழுதடைகிறது. எனவே அந்த இடத்தில் ஒரு பாலம் கட்டித்தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஊர் பொதுமக்கள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி. லெட்சுமி நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா எங்கள் ஊரில் கழிப்பறை சிமெண்ட் சாலை கழிவுநர் வாய்க்கால் போன்றவை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ம.ஆர்த்தி, த-பெ. வீ.மணவாளன், கதவு எண். 3-26, கீழ நாச்சிகுளம் அஞ்சல், வாடிப்பட்டி தாலுாகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. 18.06.2011-அன்று மாவட்ட வேலை வாயப்பு அலுவலகம், மதுரை பதிந்ததில் வேலைவாயப்பு அட்டை தபாலில் வவருதாக கூறியும், நாளது வரை கிடைக்கப்பெறவில்லை.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீ.மணவாளன், 3-26, காளியம்மன் கோவில் தெரு, கீழ் நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, மேற்கண்ட விலாசத்தில் வசி்த்துவரும் நான், என் தந்தை பெயரில் உள்ள வீட்டை எனது சர்வே எண். 332-15-ன்படி அளந்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, மணவாளன். This post was submitted by madurai.

முழு மனுவைப் பார்க்க »