மனு எண்:

'மதிப்பனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:8  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:8  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், எம்.வீரப்பட்டி கிராமம்,மதிப்பனூர் ஊராட்சி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. புதுப்பட்டி முதல் மங்கல்ரேவ் மெயின்ரோட்டில் அமைந்துள்ள‌ எம்.வீரப்பட்டி கிராமத்தில் பேருந்து நிருத்தம் அருகில் குறுகிய பாலம் உள்ளது மழைக்காலங்கலில் அதிகப்படியான தண்ணீர் வருகிறது குறுகிய பாலமாக உள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள பள்ளி மற்றும் ஊருக்குள் நுழைவதால் பாலத்தை அகலப்படுத்தி தருமாறு பனிவுடன் கேட்டுக்கோள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டியம்மாள் க/பெ.முத்துராஜ் மேட்டுப்பட்டி கிராமம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன் எனது கணவர் கடந்தாண்டு உடல் நலகுறைவால் இறந்துவிட்டார் எனக்கு வயது 30,எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது எனது குடும்பத்தில் சொத்துகள் ஏதும் இல்லை எனவே எனக்கு அரசு வழங்கும் விதவை உதவித் தொகை வழங்க உத்தரவு வழங்குமாறு பனிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சரண் த/பெ.ராஜ்குமார் மதிப்பனூர் கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மதிப்பனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன்.எனக்கு வயது 8.எனக்கு பிறவியிலிருந்தே கால் வளர்ச்சி குன்றி ஊனமாக உள்ளது நான் 3ம் வகுப்பு படித்து வருகிறேன் எனவே எனக்கு அரசு வழங்கும் உதவித் தொகை வழங்க உத்தரவு வழங்குமாறு பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் மதிப்பனூர் ஊராட்சி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பனூர் கிராமத்தி கிளை அஞ்சல் அலுவலகம் உள்ளது தற்சமயம் ஊராட்சிக்கு சொந்தமான வாசகசாலை கட்டித்தில் இயங்கிவருகின்றது. தற்போது இக்கட்டிடம் ஊராட்சி நிர்வாகத்திற் தேவைப்படுகின்ற காரணத்தினால்,அஞ்சல் துறைக்கு புதிய கிளைஅஞ்சல் அலுவல கட்டிடம் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், எம்.வீரப்பட்டி, மதிப்பனூர் ஊராட்சி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பனூர் ஊராட்சி எம்.வீரப்பட்டி அங்கன்வாடி மையம் பழுதடைந்து இருப்பதால் குழந்தைகள் உட்க்கார்ந்து சாப்பிடுவத‌ற்கு சிரமாக உள்ளது எனவே அங்வாடிமையத்தை பழுநீக்கம் செய்து தறும்படி கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மதிப்பனூர் கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பனூர் ஊராட்சியில் உள்ள 8 உட்கடை கிராமங்களுக்கு கடந்த ஒரு மாதமாக வைகை கூட்டு குடிநீர் திட்டதின் மூலமாக குடிநீர் வரவில்லை,மேட்டுப்பட்டிலிருந்தாவது குடிநீர் வழங்க கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், எம்.கல்லுப்பட்டி மதிப்பனூர் ஊராட்சி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எம்.கல்லுப்பட்டி கிராமத்தில் (30000)லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல் நிலை நீர்த் தேக்க தொட்டிஅமைத்து தரும்படி கேட்டுக்கொள்கின்றோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மதிப்பனூர் கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பனூர் ஊராட்சி மதிப்பனூர் கிராம நடுத்தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய மண்சாலையை சிமிண்ட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »