மனு எண்:

'குலமங்கலம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர் :ஏ.நவநீதகிருஷ்ணன் த-பெ. ஏ.எம்.ஆதிமூலம் 1ஃ148 காளியம்மன் கோவில் தெரு குலமங்கலம் மதுரை வடக்கு தாலுகா, மதுரை-17. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை வடக்கு வட்டம், குலமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மா.இராமலெட்சுமி அவா்களுக்குச் சொந்தமான குலமங்கலம் 1 பிட்டில் உள்ள விவசாய நிலங்களை சிலா் ஆக்கிரமித்து பிளாட்டுகள் போட்டு வீடுகள் கட்டி வருகின்றனா். ஆகையால் தாங்கள் ஆக்கிரமிப்பைத் தடுத்து, ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டுத்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், குலமங்கலம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குலமங்கலம் முதல் பன்னைகுடி வரை உள்ள கிராமச்சாலை மிக மோசமான நி‌‌ை‌‌லயில் உள்ளதால் அதில் பயனிக்கும் குலமங்கலம் மற்றும் காயாம்பட்டி கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால்இச்சாலையினை சீரமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆர் . ரகுநாத திருச்செல்வம் 1-275 குலமங்கலம் அஞசல் மதுரை 17 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா குலமங்கலம் கன்மாய் பெரிய மடை யிலிருந்து சர்வே எண் 29 ல் உள்ள கன்மாய் மற்றும் சர்வே எண் 58லிருந்து 70 வரை உள்ள பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளது மேற்படி வாய்க்காலை அளந்து சர்வே செய்து துார்வாரி பாசனத்திற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இரா.தினேஷ்குமார், இளநிலை உதவியாளர், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை-2. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை-20 நான் எனது குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சொந்த காரணத்திற்காகவும் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிய முடியாத சூழ்நிலையில் உள்ளேன். எனவே எனது பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு உசிலம்பட்டி உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி மாறுதல் செய்து தரவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், காயாம்பட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குலமங்கலம் உட்கடை காயாம்பட்டி கிராமமக்கள் குடிமைப்பொருட்கள் வாங்குவதற்கு படும்சிரமத்தினை கருத்திற்கொண்டு பகுதி நேரநியாயவிலைக்கடை அமைத்துத் தரக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவருக்குஓராண்டுக்குமுன் மனு செய்திருந்தோம்.இம்மனுகூட்டுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டு பின்குலமங்கலம் ஊராட்சித்தலைவர் அனுமதிபெற்று நாடகமேடையில் கடைஅமைத்து்த்தரக் கோரிகுலமங்கலம் தொ டக்க வேளாண்மைகூட்டுறவுகடன் சங்கம்வழியாகஉரியபிரேரனண அனுப்பப்பட்டு ஓராண்டு கடந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இக்கிராமமக்கள் மிகவும் வரியநிலையில்அரசு [...]

முழு மனுவைப் பார்க்க »