மனு எண்:

'கொடிக்குளம்-மதுரை கிழக்கு' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர் : திரு.வே.முருகன், த-பெ. மு.வேட்டைவில்லான் வௌவால் தோட்டம் கிராமம், ராஜகம்பீரம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் புதிரை வண்ணார் சமூகத்தைச் சோந்தவா். வறுமைக் கோட்டிற்கு கீழே வசித்துவருகிறேன். ஆகவே எனக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நான் ஏற்கெனவே மக்கள் குறைதீா்க்கும் நாளில் 22.12.2010-லும் மற்றும் 03.05.2011 ஆகிய இரு நாட்களிலும் மனு செய்துள்ளேன். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கடிதம் ந.க.217ஃ2011ஃஆதி4-ல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கி. ரமேஷ்குமார் 5/179 மசக்காளிப்பாளையம் ரோடு உப்பிலிப்பாளையம் கோவை 642 015 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். நான் பணி நிமித்தமாக மதுரைக்கு அடிக்கடி பேருந்தில் பயணிக்க நேரிடுகிறது. வார இறுதி நாட்களில் மதுரை ஆரப்பாளயம் பேருந்து நிலையத்தில் கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக நள்ளிரவு 1 மணிக்குக் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருக்கிறார்கள். பேருந்து நிலையம் மட்டுமின்றி பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியிலும் கூட மக்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கொடிக்குளம்-மதுரை கிழக்கு கிராமம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை, கொடிக்குளம் ஊராட்சி, ய. ஒத்தக்கடை, ஐயப்பன் நகர் முதலாம் தெருவில் வசிக்கும் நான், எங்கள் தெருவில் ரோடு வசதி மற்றும் தெரு விளக்கு இல்லாததால், இத்தெருவில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் பேரில் எத்தனையோ மனுக்கள் ஊராட்சி அலுவலகம் மூலம் கொடுத்து பலன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆர். ராஜேந்திரன், 46 கிருஸ்ணன் கோவில் மேற்கு வீதி வேலூர் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். நான் சமீபத்தில் மதுரை மாநகருக்கு வந்திருந்தேன். மிகச் சிறப்பானதொரு நகராக மாற்றி வருகிறீர்கள் ஐயா. மிகுந்த மகிழ்ச்சி. அண்மையில் டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச சில்லரை விலைக்கும் அதிகமாக விற்பனை செய்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த செய்தியை நாளேடுகளில் பார்த்தேன். அருமை. அதே போல மதுரை நகரில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அப்துல்காதா், செல் 98941 01134 ஐயப்பன் நகா் 3-வது தெரு, கொடிக்குளம் பஞ்சாயத்து, யா.ஒத்தக்கடை அஞ்சல் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, ஐயப்பன் நகா் 3-வது தெருவில் வசிக்கும் நாகு என்ற நாகராஜ் பஞ்சாயத்து குடிநீரை முறைகேடாக தான் கட்டும் வீட்டு வேலைக்காக வீணாக பயன்படுத்துவதை தவிர்க்கவும், மேற்படி ஏரியாவில் இவா் அதிகளவு குடிதண்ணீரை முறைகேடாக பயன்படுத்துவதால் குடிதண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுவதையும் தடுத்து நிறுமாறு வேண்டுகிறேன். இப்படிக்கு அ.காதா்.

முழு மனுவைப் பார்க்க »