மனு எண்:

'கச்சகட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர் :நல்லதங்காள், க.பெ.நாராயணன் (லேட்), வடக்கு தெரு, கச்சைகட்டி, வாடிப்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. கணவனை இழந்தவரும், உழைக்க திறன் இல்லாதவருமான மனுதாரர் முதியோர் உதவித் தொகை கோரி மனு செய்துள்ளார்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஐி. ராமச்சந்திரன் ஊர் பொதுமக்கள், கச்சகட்டி கிராமம் பூச்சம்பட்டி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் கச்சக்கட்டி கிராமம் நத்தம் சர்வே எண் 1737-2 உள்ள இடம் பள்ளிக்கூடத்திற்கு அருகில்உள்ளதால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்ந ஆக்கிரமிப்பை காலிசெ ய்து பள்ளிக்கூடத்திற்குஅந்ந இடத்தை பயன்பாட்டிற்கு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.பாரதிதாசன் ஒன்றிய விவசாய அணி இணைச்செயலாளா், வாடிப்பட்டி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், கச்சைகட்டி கிராமத்தில் உள்ள தோட்டம் அருகில் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீா்தேக்க தடுப்பணை கடந்தாண்டு பெய்த கனமழையால் அாிபு் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் 50 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே நீா்தேக்க தடுப்பு அணையை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சி. பேச்சியம்மாள் பொியாா் நகா் கச்சைகட்டி வாடிபட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எனது மகன் தாமோதரன் 3ம் வகுப்பு படித்து வருகிறான். எனது பையன் மாற்றுத்திறனாளி என்பதால் தினமும் பள்ளியில் விட்டு வந்தால் அவனை முதல் வகுப்பில் கொண்டு போய் விட்டுவிடுகிறாா்கள். மதியம் பையனை பாா்த்துக் கொள்வதற்கு ஆயாவும் வைத்துள்ளேன். மதிய நேரங்களில் ஒருவரோடு அடித்துக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.சி.சந்திரன், யாதவா் தெரு, கச்க்கட்டி, வாடிப்பட்டி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வாடிப்பட்டி ஒன்றியம், கச்சக்கட்டி கிராமத்தைச் சோ்ந்த திரு.சி.சந்திரன் என்பவா் தனது குடும்பத்திற்கு சொந்தமான புல எண்.1748-20-ல் உள்ள இடத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த லேட்.வேலம்மாள் மகன்கள் திரு.மகேந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் பொய்யான தகவலை ஊராட்சிக்கு அளித்து அரசு தொகுப்பு வீடு கட்ட முயற்சிப்பதை தடுப்பது தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெ.வெள்ளையன்,அ.இ.அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர், தஃபெ.பெரியகருப்பத்தேவர், கேத்துவார்பட்டி ஊராட்சி, பேரையுூர் தாலுாகா, மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கேத்துவார்பட்டி ஊராட்சியில் வாழ்கின்ற மக்கள் தொகை க 200 குடும்பங்கள் உள்னர். எங்கள் கிராமத்தில் 60 குடும்ப அட்டை போலி ரேசன் கார்டுகள் வைத்துள்ளனர். அவர்கள் இலவச பொருட்களை கொள்ளை அடிக்க திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் 10 வருடங்களாக போலி ரேசன் கார்டுகளை வையாத்துள்ளனர். எனவே ‌எங்கள் பகுதியில் விசாரித்து [...]

முழு மனுவைப் பார்க்க »