மனு எண்:

'சின்னை இலந்தைக்குளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: எஸ். மலர்விழி க/பெ.அற்புதம் ஆல்பர்ட்ராஜ்(லேட்) மரியம்மாள்குளம் அஞ்சல் வாடிப்பட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனது கணவர் இறந்துவிட்டார். இரண்டு பெண்குழந்தைகளுடன் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு ஆதரவற்றோர் விதவை சான்றிதழ் வேண்டி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்‌தேன். வட்டாட்சியர் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து எனது மனுவினை பரிந்துரைசெய்து வருவாய் கோட்டாட்சியர் மதுரை அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னை இலந்தைக்குளம் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தேசிய ‌ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2011-12 ல் ஏற்கனவே 50 நாள்கள் மேல் பணிபுரிந்த ஆதரவற்ற முதியோர் உதவி தொகை ரூ1000 பெறும் பயனாளிகளுக்கு வேலை அளிக்கப்படுமா ? என்ற விபரம் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னை இலந்தைக்குளம் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா மேற்கண்ட ‌ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிய ஏற்கனவே பணிபுரிந்த ஆதரவற்ற முதியேரர் உதவி ரூ1000 பெறும் பயனாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கிராமத்தில் பெரும் சச்சரவுகள் ஏற்படுகிறது. எனவே அய்யா அவர்கள் தக்க நடவடிக்கை மேற் கொள்ள ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆர். சரவணன் த.பெ. சி.கே. ராஜா அழகாபுாி கிராமம் (அலங்காநல்லுாா் வழி) வாடிபட்டி வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அழகாபுாி கிராமத்தில் சின்ன இலந்தை குளம் கிராமம் சா்வே எண் 58/3 0.575 ஏா்ஸ் , சா்வே எண் 59/6B 0060 ஏா்ஸ் நன்செய் நிலங்கள் பட்டா எண் 354க்கு சொந்தமான நிலமாகும். எனது தந்தை கடந்த 25.08.92ல் இறந்து விட்டபடியாலும் நான் சிறுவனாக இருந்ததாலும் விபரம் தொியவில்லை. தற்போது பட்டா [...]

முழு மனுவைப் பார்க்க »