மனு எண்:

'செங்கப்படை' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:7  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர் :இ. முத்துக்குமரன் தஃபெ. எஸ். இருளப்பன் 1ஃ166, கிழக்குத் தெரு, செங்கப்படை திருமங்கலம் வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் இரண்டு கால்களும் நடக்கு முடியாத நிலையில் உள்ளேன். எனவே மாற்றுத் திறனாளியான எனக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பெட்டிக்கடைக்கான நிதியுதவி வழங்கி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு இ. முத்துக்குமரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செங்கப்படை கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது ஊரில் சுமார் ஒரு வருடங்களாக தெருக்களிலும்.பள்ளியின் முன்பும் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது.‌மேலும் பன்றிகள் இறந்து துர்நாற்றம் வீசிக்கொன்றிருக்கிறது.பன்றிகளின் உரிமையயாளர் யாரும் முன்வரவில்லை.இதனால் நோய் பரவும் நிலை உள்ளது .ஆதலால் உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு கானும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :செங்கப்படை கிராம அனைத்து மகளிர் குழுக்கள், மற்றும் பொதுமக்கள், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. செங்கப்படை கிராமத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு அரசின் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், தாய்மார்களின் ஒருமித்த கருத்தாகும். ஏனென்றால் இதனால் ஏற்படும் இன்னல்களும் பொருளாதார சீரழிவும் சொல்லெனா துயரத்திற்கு தினம் தினம் ஆளாகி கொண்டுவருகிறோம். தினம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் குடும்பங்களில் குடித்துவிட்டு வரும் வருவாய் ஈட்டாளர்களா் அவர்களின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வே.லட்சப்பன் வேலுச்சாமி வார்டு என்1 கதவுஎண்.90 செங்கப்படை திருமங்கலம் தாலுகா மதுரை மாட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாட்டம் திருமங்கலம் தாலுகா செங்கப்டை கிராமத்தில் வசிக்கும் வேலுச்சாமி மகன் லட்சப்பன் ஆகிய நான்இ நான் வசிககும் வீட்டின் மேற்கு பகுதியில் வசிக்கும்.பெருமாள் என்பவர் வீட்டிற்கும் இடையே பொது களிமன் சுவர் மீது ஒரு கதவு நிலையும் பொருத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு உள்ள கதவு நிலையை தற்சமயம் திருட்டுத்தனமாக [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பெ.துரைப்பாண்டி 7-144 தெற்கு தெரு செங்கப்படை திருமங்கலம் வட்டம். மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதிப்பிற்குரிய அய்யா, திருமங்கலம் வட்டம், நேசநேரி எல்லைக்குட்பட்ட ஆதி திராவிடர் இலவச வீட்டுமனையினை 2001ல் வழங்கியதற்கு இன்று வரை நில அளவை செய்து கொடுக்கவில்லை. இதற்காக உசிலம்பட்டி தனி வட்டாட்சியர் அவர்களிடம் பலமுறை முறையிட்டும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தயவு கூர்ந்து எங்களுக்கு இந்த மனையிடத்தினை சர்வே செய்து கொடுத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள் செங்கப்படை கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது ஊரில் சுமார் 1258 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.ஆனால் ஒரே ஒரு நியாயவிலைக்கடை கடைதான் உள்ளது.அக்கடையில் ‌அனைவரும் சென்று குடிமைப்பொருள் வாங்குவதஙற்கு மிகவும் சிரமமாக உள்ளது ஆதலால் கூடுதலாக ஒரு நியாய வி‌லைக்கடை அமைக்க உத்திரவு இடுமாரு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு ஊர் பொதுமக்கள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமானுஜம். சீ, தலைவர், ‌செங்கப்படை ஊராட்சி, கள்ளிக்குடி ஊ.ஒ, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. ஐயா, ஊராட்சிகளில் காண்ட்ராகடர்கள் மூலம் போடப்படும் சிமெண்ட் சாலைகள் ஓரிரு ஆண்டுகளில் சிமெண்ட் மேற்பரப்பு பெயர்ந்து கற்சல்லிகள் கால்களை பதம் பார்க்கின்றன. ஆகையால் சிறிது செலவு அதிகமானாலும் பேவர்ஸ் ப்ளாக்குகள் மூலம் இடப்பட்டால் உறுதியாகவும் பார்ப்பதற்கு ‌நேர்த்தியாகவும் இறுக்கும் . மேலும் ‌ஏதாகிலும் ஒன்று பழுது பட்டாலும் அதைமட்டும் மாற்றி எளிதாக [...]

முழு மனுவைப் பார்க்க »