மனு எண்:

'செம்மினிபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:22  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:4  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:18  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா எங்கள் ஊர் மண்வெட்டு வேலைக்கு போகும் அனைவரும் 12 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். மண் வெட்டில் வேலை செய்வது கிடையாது, அவர்கள் அங்கு தூங்குவதே வேலை. மற்ற கிராமங்களில் கூட வேலை பார்துவிட்டு தூங்குகின்றனர். அதிகாரிகள் வருகிறார்கள் என்றால் அன்று மற்று 3 மணிவரை வேலை எனவே தாங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் எங்கள் ஊர் ரோட்டோரம் மற்றும் கழிவுநீர் போகும் கால்வாய், மற்றும் பொது இடங்கள் ஆகிரமிப்பு செய்து வருகின்றனர். தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும் மாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் எங்கள் பள்ளி அருகில் குப்பையை கொட்டி தீவைபது குறித்து நாங்கள் இருமுறை மனு அனுப்பியுள்ளோம்.அந்த மனுவிற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் மட்டும் தான் வந்தது நாங்கள் அனுப்பிய மனு எண் 6515 8510 25/02/2012 இந்த மனுவவை பார்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம். தங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்து,த‌/பெ அழக‌ர்சாமி முத்துச்சாமிபட்டி,செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா,வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனக்கு வயது 70 ஆகிறது.திருமணம் செய்து கொள்ளவில்லை. என் தங்கை விட்டில் வசித்து வருகிறேன்.உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வருகிறேன்.எனக்கு அரசு உதவி தொகை வழங்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழ.ச‌ந்திர‌ன்,த/பெ அழ‌க‌ப்ப‌ன், முத்துச்சாமிபட்டி,செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். செம்மணிப்பட்டி ஊராட்சி நத்தம் சர்வே எண்717/11ல் கதவு எண் 2/123ல் கூரை வீடு கட்டி குடியிரிந்து வருகிறேன். மேற்படி வீடி மற்றும் வீட்டு மனைக்கு இதுவரை பட்டா இல்லை தொடுவாணம்8811/ 10-03-2012மூலம் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தேன், அதற்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரா.சுப்பையா த/பெ ராமலிங்க சேதுபதி செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா,வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வசித்து வருகிறேன்.எனக்கு வயது 70 ஆகிறது.பிறவியில் இருந்தே இரு கால்களும் ஊனமாக உள்ளது. பலமுறை உதவி தொகை கேட்டும் பலன் இல்லை. உதவி தொகை வழங்க ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மெய்யன் 4/91 சுமதிபுரம் செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு எந்த வருவாயும் இல்லை. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டுமாய் ஆவண செய்ய கேட்டு கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழ‌.ச‌ந்திர‌ன்,த‌/பெ அழ‌க‌ப்ப‌ன், முத்துச்சாமிபட்டி,செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா,வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.சர்வே எண்21/2எ யில் எனக்கு பாத்தியமான நத்தம் புறம் போக்கு இடத்தில் உள்ள காலி மனையில் குடிசை வீடு கட்டி குடியிருந்து வருகிறேன்.மேற்படி எனது மனைக்கு பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். நன்றி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் செம்மினிப்பட்டி ஊராட்சியில் இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகள் பள்ளி மற்றும் சாலையின் இருபுறமும் கொட்டி ஆக்கிரமிப்பு செய்வதாக மனு அனுப்பியிருந்தோம் மனு எண் 6515 இது வரை எந்தவித நடவடிகைகளும் எடுக்கப்படவில்லை ஆனால் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது என மனுதாரருக்கு தெரிவித்துல்ளீர்க‌ள். அதேபோல் ப‌ள்ளி அருகில் தீவைத்து எரிப்ப‌து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சி.அழகுஜோதி, த‌/பெ சின்னத்தம்பி, முத்துச்சாமிப்பட்டி(அஞ்சல்) மேலூர் தாலூகா,மதுரை மாவட்டம் 625102 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.என்னால் வாய் பேச முடியாது.அப்பா இறந்து விட்டார்.அம்மா சிறிது மனநலம் பாதித்தவர்.எனக்கு அரசு வழங்கும் உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212