மனு எண்:

'அரிட்டாபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர் :திரு.அ.ரவிச்சந்திரன், த-பெ அழகு அாிட்டாபட்டி கிராமம், மேலூா் ஊராட்சி ஒன்றியம் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். அாிட்டாபட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருக்கிறேன். எங்களது நிலத்தில் மழைக்காலத்தில் நெல் அறுவடை செய்கிறோம். கோடை காலத்தில் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே ஆழ்குழாய் இணைப்பு மற்றும் மோட்டாா் பொருத்துவதற்கு விவசாய கடன் உதவி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு அ.ரவிச்சந்திரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.அ.ரவிச்சந்திரன், நகராட்சி மன்ற துணைத்தலைவா், மேலூா் ஊராட்சி ஒன்றியம் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். வருடத்திற்கு நான்கு நாள் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. ஊராட்சி மன்றத்தில் உள்ள உறுப்பினா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொ்ணடு வரும்போது வீடியோ பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் பதிவு செய்யப்படுவது இல்லை. இனி வருங்காலங்களில் வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு அ.ரவிச்சந்திரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க.செந்தில்குமார் த/பெ. கருப்பன் அரிட்டாபட்டி அஞ்சல் மேலுார் தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். மேற்கண்ட நத்தம் சர்வே எண். 264-5, யுடிஆர். சர்வே எண். 479-8ல் உள்ள பட்டாவை எனது தாயார் க.புூமாதேவி அவர்கள், அரிட்டாபட்டி கிராமம் க.சுப்பிரமணியன் மகன் சு.முருகனிடம் இருந்து 1993ம் வருடம் செண்டு 1 1/2 கிரையம் பெற்றுள்ளார். மேலே கூறப்பட்டள்ள நத்தம் சர்வே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வே.இளமன் 64 காலனி அரிட்டாப்பட்டி மேலூர் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். என்னுடைய இடத்தை புமா தேவி என்பவர் மோசடியாக அபகரிக்க நினைக்கிறார். ஆகவே எனக்கு உரிமைய் பாத்தியப்பட்ட இடத்தினை வேறு யாருக்கு பட்டா வழங்கக் கூடாது என பணிந்து கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு வே.இளமன் 64 காலனி அரிட்டாப்பட்டி மேலூர் வட்டம் மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கண்ணகி கஃபெ திருஞானசம்பந்தர் 28 மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது55 எனது உடல் கை/கால்/ஊனமுற்ற நிலையில் எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு,

முழு மனுவைப் பார்க்க »