மனு எண்:

உதவி

தொடுவானம் வலைத்தளத்தை பயன்படுத்தும் குறிப்புகள் கீழே:

 1. தொடுவானம் வலைத்தளத்தின் முகப்பில் உள்ள “குறைகள்/புகார்கள்” மூலம் பொதுமக்கள் குறைகளை கூறலாம்.
 2. குறைகள்/புகார்கள் படிவத்தின் இணைய முகவரி http://thoduvanam.com/tamil/grievance/
 3. தொடுவானம் வலைத்தளத்தின் முகப்பில் உள்ள “ஆலோசனைகள்” மூலம் பொதுமக்கள் ஆலோசனைகளை கூறலாம்.
 4. ஆலோசனைகள் படிவத்தின் இணைய முகவரி http://thoduvanam.com/tamil/suggest/
 5. தமிழ் தட்டச்சு செய்ய கற்று கொள்வோருக்கு எளிதாக  http://thoduvanam.com/tamil/practice/ என்ற பயிற்சிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறைகள்/புகார்கள் படிவம் மற்றும் ஆலோசனைகள் படிவம் பயன்படுத்தும் முறை:

 1. படிவத்தில் நேரடியாய் தமிழில் தட்டச்சு செய்ய இயலும். இதற்காக கணினியில் எந்த தமிழ் தட்டச்சு மென்பொருளும் நிறுவத் தேவையில்லை.
 2. “அனுப்புநர்” பெட்டியில் மனுதாரர் தமது முழு முகவரி, தொடர்பு தொலைபேசி முதலிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
 3. “பெறுநர்” பெட்டியில் மனுவுக்கு உரிய துறை அலுவலரின் முழு முகவரி, தொடர்பு தொலைபேசி முதலிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
 4. “பொருள்” பெட்டியில் மனுவின் பொருளை ஒரு வரியில் தெரிவிக்க வேண்டும்.
 5. “புகார் விவரம்” பெட்டியில் மனுவின் புகாரின் விரிவான முழு விவரங்களை கூடிய வரை சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.
 6. “கிராமப் பெயர்” தெரிவுகளில் மனு தொடர்புடைய கிராமப் பெயரை தெரிவு செய்ய வேண்டும்.
 7. “தொடர்புடைய துறை” தெரிவுகளில் மனு தொடர்புடைய துறையின் தெரிவு செய்ய வேண்டும்.
 8. “சரி பார்க்கவும்” பொத்தானை அழுத்தினால் மனுவின் முன்னோட்டம் காண்பிக்கப்படும். திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் செய்து, மறுமுறை “சரி பார்க்கவும்” பொத்தானைஅழுத்தி உறுதி செய்ய வேண்டும்.
 9. “சமர்ப்பிக்கவும்” பொத்தானை அழுத்தினால் மனுவின் விவரங்கள் தொடுவானம் தளத்தில் சமர்ப்பிக்கப்படும்.
 10. சமர்ப்பித்தபின் மனுவுக்கான உத்தேச மனு எண் திரையில் தெரிய வரும்.
 11. மனு சமர்ப்பித்த விவரங்களை “அச்செடுக்க” பொத்தானை அழுத்தி உங்கள் குறிப்புக்காக அச்சிட்டு வைத்துக் கொள்ளலாம்.
 12. மனுதாரர், உத்தேச மனு எண் கொண்டு “தொடுவானம்” வலைத்தளத்தின் வலது உச்சியில் உள்ள “தேடுக” வசதியை பயன்படுத்தி மனு ஏற்கப்பட்டதா, அதன் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற விவரங்களை அறியலாம்.

காணொளி கலந்துரையாடல் முறை:

 1. தொடுவானம் வலைத்தளத்தின் முகப்பில் வலது ஓரத்திலுள்ள “காணொளி கலந்துரையாடல்” என்ற சுட்டியை அழுத்தவும்.
 2. காணொளி கலந்துரையாடலின் இணைய முகவரி http://thoduvanam.com/tamil/videoconf/
 3. பயனாளர் தங்களுக்கு அளிக்கப்பட்ட தொடுவானம் பயனர் பெயர், கடவுச்சொல் பயன்படுத்தி உள்நுழைவு செய்யவும்.
 4. தொடுவானம் பயனர் பெயர் அளிக்கப்படாதவர்கள் தங்களின் Yahoo,Gmail,Facebook,Twitter,WordPress பயனர் விவரங்களை கொண்டு உள்நுழைவு செய்யலாம்.
 5. உள்நுழைவு செய்தவுடன் வரும் திரையில் காணொளி வசதி உள்ளது.
 6. இந்தக் காணொளி வசதியைப் பயன்படுத்தி ஆட்சியருடனும் துறை அலுவலர்களிடமும் முன் அனுமதி பெற்று உரிய நேரத்தில் கலந்துரையாட இயலும்.

காணொளி கலந்துரையாடல் செய்வதில் சிக்கலா?

 1. ஒலிப்பெருக்கி (ஸ்பீக்கர்) பயன்படுத்த வேண்டாம். ஒலிப்பெருக்கி பயன்படுத்தும் போது எதிரொலி ஏற்பட்டு குழப்பம் ஏற்படுகிறது. எனவே ஹெட்செட்/மைக் மட்டும் பயன்படுத்துங்கள்.
 2. மைக்/ஹெட்செட் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கவும்.
 3. மைக்/ஹெட்செட் இணைப்பில் ஏதேனும் லூஸ் கனெக்சன் உள்ளதா என்று பார்க்கவும்.
 4. வெப் காமிரா சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கவும்
 5. கணினியில் இணைய இணைப்பு சரியாக உள்ளதா என்று பார்க்கவும்.
 6. இணைய வேகம் குறைந்தபட்சம்  256kbps இருந்தால் தான் காணொளி கலந்துரையாடல் செய்ய இயலும்.
 7. கணினியில் Adobe Flash மென்பொருள் நிறுவப் பட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.

Comments are closed.