மனு எண்:

Monthly Archive for April, 2012

அனுப்புநர்: நாக‌ெ‌லட்சுமி, க/பெ பழனி, 35 ஹரிசன் காலனி, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் நாகமலைபுதுக்கோட்டை ஊராட்சியில் வசித்து வருகிறேன். எனக்கு இடது கை, இடது கால் ஊனமாக உள்ளது. ஆதலால் எந்த வேலை செய்தும் வருமானம் ஈட்ட முடியவில்லை. எனக்கு இரு குழந்தைகள் உள்ளது. ஊனமுற்றோர் அடையாள அட்டையில் ஊனத்தின் தன்மை 60% இருக்கிறது. எனவே எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எஸ்.பாபுஜி த-பெ.ஏ.சண்முகம்பிள்ளை 80, முருகன் காம்பவுண்டு பாரதியார் ரோடு ஜெய்ஹிந்திபுரம் மதுரை 11. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 36 வருடங்களாக தொடா்ந்து புதுப்பித்து வருகிறேன். எனக்கு இதுவரை எவ்வித நோ்முகத் தோ்விற்கும் அழைப்பு வரவில்லை. வேலையும் கிடைக்கவில்லை. நான் ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்ததற்கும் எவ்வித பதிலும் வரவி்ல்லை. எனவே எனது மனுவிற்கான தக்க பதில் அளிக்க வேலை வாய்ப்பு அலுவலத்திற்கு பரிந்துரை செய்யுமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மோதிலால்நேரு தனிச்சியம் (அஞ்சல்) வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்கள் கிராமத்தில் விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும் போது காவல் துறையை தொடா்பு கொள்ள ஏதுவாக இலவச அழைப்பு வசதி செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, மோதிலால் நேரு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மோதிலால்நேரு தனிச்சியம் (அஞ்சல்) வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எஙகள் கிராமத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் கட்டிடம் தரையிலிருந்து நான்கு அடிகளுக்கு மேல் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவா்கள் வங்கியின் உள்ளே செல்ல மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே மேற்படியார்களுக்கு இலகுவாக வங்யியின் உள்ளே செல்ல ஏதுவாக வசதி செய்து தருமாறு பணிவுடன் கேடடுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, மோதிலால் நேரு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மோதிலால் நேரு, தனிச்சியம் (அஞ்சல்) வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். (9585773633) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எங்கள் கி்ராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் இடிக்கப்பட்டு, தற்போது ஊா்க் கடைசியில் ஒரு மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. எங்கள் கிராமத்து மக்கள் தொகைக்கு ஒரு மையம் போதுமானதாக இல்லை. மேலும் பிஞ்சுக் குழந்தைகள் மையத்திற்கு செல்லும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னக்கொட்டாம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் சின்னக்கொட்டாம்பட்டி கிராமத்தில் சுமார் 600 மக்கள் வாழ்ந்து வருகின்றோம். போதுமான மோட்டார் வசதிகள் உள்ளது. வசதிகள் இருந்தும் 15 நாட்களுக்கு மேல் குடி தண்ணீர் வரவில்லை.இவற்றை பற்றி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்பொழுது இருக்கும் திருமதி. ப.நந்தினி பன்னீர்செல்வம் பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டோம் போதுமான பதில்கள் வரவில்லை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி.ஆறுமுகம் தீா்த்தக்காடு வண்டியூா் மதுரை 20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி முகவரியில் சுமார் 30 வருடங்களாக குடியிருந்து வதுகிறேன். எனக்கு ரேஷன்கார்டு, சொந்தவீடு மற்றும் நிலவரி ரசீது ஆகியவை இருந்தும், மதுரை கலெக்டா் அலுவலகத்தில் இருந்து எடுத்த பயனாளிகளின் பட்டியலில் எனது பெயா் விடுபட்டுள்ளது, எனவே அய்யா அவா்கள் தயைகூா்ந்து எனது பெயரையும் அப்பட்டியலில் சோ்த்து உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, வி.ஆறுமுகம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம்.வேங்கை தீா்த்தக்காடு வண்டியூா் மதுஐர 20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வண்டியூா் தீா்த்தக்காடு பகுதியில் சுமார் 30 வருடங்களாக வாழும் எங்களுக்கு ரேஷன்கார்டு வாக்காளா் அட்டை மற்றும் சொந்த வீடு ஆகியவை இருந்தும், எங்களது குடும்பங்களின் பெயர்கள் பயனாளிகளின் பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே விடுபட்ட எங்களது குடுமபங்களின் பெயர்களை அப்பட்டியலில் சோ்த்து எங்களுக்கு பயனளிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, எம்.வேங்கை

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, பார்வையில் கண்ட மனுவின்படி, புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். .அய்யா, எங்கள் ஊரில் நடுநிலைபள்ளி உள்ளது.சாலையின் அருகில் பள்ளி உள்ளாதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வேக தடை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி.சேதுராமன், மற்றும் கிராம பொதுமக்கள், வீரபாண்டி, மதுரை வடக்கு வட்டம், மதுரை -14 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வீரபாண்டி பிட்2 கிரமத்தைச் சேர்ந்த விலங்கக்கோனார் மகன் கைலாசம் என்பவர் வீதியை மறைத்து மாடிப்படி செப்டிக் டேங்க் அமைத்து இடையூறு பண்ணுவதால் அகற்ற தங்களிடம் 2.1.2012 அன்று மனு அளித்திருந்தோம். சர்வேயர் அளந்து ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், காவல்துறை மூலம் அகற்றப்படும் என எதிர்பார்த்த நிலையில் கிராம அலுவலர் ராஜேந்திரன் என்பவர் கைலாசத்திடம் ஏதோ [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 3 of 3412345...102030...கடைசி »