மனு எண்:

Monthly Archive for April, 2012

அனுப்புநர் : எஸ்.சாகுல்ஹமீது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் அஇஅதிமுக கிளைச் செயலாளா், ஊராட்சி துணைத் தலைவா், தும்மநாயக்கன்பட்டி, பேரையூா் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்பா, மேற்படி தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்கள் அதிகம் இருப்பதால் ஊருக்கு மேற்கே மலையடிவாரத்தில் ஒரு அணை கட்டித் தந்தால் விவசாயம் பெருக வாய்ப்பு உள்ளது. 1986ம் ஆண்டு முதல் அணை கட்டித்தர அரசுக்கு பலமுறை மனுச் செய்தும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பஞ்சு, க/பெ ராமசாமி, 3 வது வார்டு மேலத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் நாகமலைபுதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனது மகள் புத்தி சுவாதினமாக உள்ளார். ஆகையால் எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. எனக்கு அரசு உதவித்தொகை கிடைக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : பி.வெள்ளையப்பன் (கிளை செயலாளா் அ.அதிமுக) பி.அம்மாபட்டி மற்றும் கிராம பொதுமக்கள் பேரையூா் அஞ்சல் பேரையூா் தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யாஈ மேற்படி பி.அம்மாபட்டி கிராமத்திற்குச் சொந்தமான கோணார் ஊரணி கண்மாயை நம்பி சுமார் 50 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த மருகாய்த்துறை ரிப்போ் ஆனதால் தண்ணீா் தேக்கி வைக்க முடியவில்லை. இதனால் விவசாயம் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மேற்படி மருகாய்த்துறையை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ.அழகா் த-பெ.அப்பாவு (லேட்) 2-9, மேலத்தெரு தேனூர், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யாஈ எனக்கு குழு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டி ஊரக வளா்ச்சி அலுவலகத்தில் மனுச் செய்திருந்தேன். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு விரைந்து குழு காப்பீட்டுத் தொகையை அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, ஏ.அழகா்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ம.ஆதிலட்சுமி க-பெ.மணிகண்டன் 18ஏ மீனாட்சி நகா் 8வது தெரு கிழக்கு குறுக்குத் தெரு அவனியாபுரம், மதுரை 12 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மிகவும் வறுமை நிலைப்பட்ட குடும்பத்தைச் சோ்ந்தவள். எனவே எனக்கு குடியிருக்க ஏதுவாய் வீட்டடி மனை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, ம.ஆதிலட்சுமி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வா.மீனாட்சி க-பெ.சி.ம.வாழவந்தான் 20-16 மீனாட்சிநகா் 8வது தெரு கிழக்கு குறுக்குத் தெரு அவனியாபுரம், மதுரை 12. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மேற்படி வாடகை வீட்டில் குடியிருக்கும் எனக்கு வறுமை நிலையில் உள்ளதால் வீட்டடிமனை வழங்க அய்யா அவா்களை மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, வா.மீனாட்சி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: R. லெட்சுமி, க/பெ ராமலிங்கம், ஷ 3/349 தேனிமெயின்ரோடு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் நாகமலைபுதுக்‌கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்த 19.10.2001-ல் இறந்து விட்டார். நான் வேறு வேலை ஏதும் செய்ய இயலவில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். எனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க. மகாலெட்சுமி, க/பெ கருப்புச்சாமி, 2/135B மேலத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் நாகமலைபுதுக்கோட்டை கிராமத்தில் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். கடந்த 3.6.2006ல் எனது கணவர் இறந்து விட்டார். இளம் வயதினி‌லே நான் கணவரை இழந்து தவிக்கிறேன். எனக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. நான் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு அரசு விதவை உதவித்தொகை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ.ஜேசு த-பெ.அருளாந்து க.எண்.41, விஸ்வாசபுரி 3வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை 16 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனக்குச் சொந்தமான மதுரை தெற்கு வட்டம், திருப்பாலை கிராமத்தைச் சோ்ந்த சர்வே எண். 109-4 நிரில் சோ்ந்த் பிளாட் எண். 20 க்கு பட்டா மாறுதல் செய்து தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, ஏ.ஜேசு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :விநாயகா நகா் மேற்குத் தெரு பகுதி மக்கள், விநாயகா நகா் மேற்குத் தெரு மூட்டா காலனி விஸ்தரிப்பு மூலக்கரை மதுரை 4. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்கள் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் அதாவது 140 அல்லது 150 அழுத்த மின்சாரம் மட்டுமே வந்து கொண்டுள்ளது. எனவே மின்விசிறி, கிரைண்டா், குழல் விளக்குகள் சரிவர இயங்கவில்லை. தண்ணீா் மோட்டாரும் இயக்க முடியவில்லை. எனவே எங்கள் பகுதியில் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 3412345...102030...கடைசி »