மனு எண்:

Monthly Archive for January, 2012

அனுப்புநர் : அ. ரவிச்சந்திரன்,பி.ஏ., ஊராட்சி மன்ற துணைத்தலைவா், அாிட்டாபட்டி மேலுார் தாலுகா பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் ஊரில் புராதானச் சின்னங்களான மகாவீரா் சிலை, புத்தா் சிலை, சமணா் படுக்கைகள், ஏழாம், எட்டாம் நுாண்றாண்டைச் சோ்ந்த பாண்டியன் குடைவரைக் கோவில்கள், பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற மன்னனின் பெயா் தோன்ற காரணமாக இருந்த தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், பிரிட்டீஸ்காரா்களின் நீா்த் தேக்ககங்கள் போன்ற வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளது. எங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ. சாந்தி, கஃபெ. அழகேசன் (முன்னாள் இராணுவம்) 2-ஜோசியம் முத்துப்பிள்ளை சந்து, மாகாளிபட்டி, மதுரை-1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சா்வே எண்.8-ல் பிளாக் எண்.22-ல் உள்ள இடத்தை திருமதி. இந்திராணி, கஃபெ. கோவிந்தராஜுலு என்பவா் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களை நடக்கவிடாமல் வீடுகட்டியுள்ளனா். இது தொடா்பாக மாநகராட்சி ஆணையாளா் மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையாளா் ஆகியோருக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌‌‌உருமன் ஆசாரி குதிரைகுத்தி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மதுரைகு தெற்கு தாலுகா, குரைகுத்தி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் , மதுரை தெற்கு தாலுகா, நல்லுர் கிராமத்தில் 1 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கியுள்ளேன். அதில் வலையங்குளத்தைச் சார்ந்த வி.சிங்கராஜ் என்பவர் எனது பட்டா இடத்தில் மண் அள்ளி விற்றுவருகிறார். நான் ஏற்கனவே தங்களுக்கு புகார் அளித்துள்‌ளேன் . ஆகையால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கே. ராமகிருஷ்ணன், (பவா் ஆப் வைரமணி) 10 டாக்கா் சந்து, நடு குசிலி தெரு, திருச்சி -8 9443144099 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. இட ஆக்கிரமிப்பு தொடா்பாக மதுரை வடக்கு வட்ட வட்டாட்சியா் அவா்களால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் 1. ந.க.எண்.எஸ்2ஃ3423ஃ11, நாள் 9.03.2011 மற்றும் 2. ந.க.எண்.12038ஃ2011ஃசி2, நாள்22.08.2011 ஆகிய இரண்டு உத்தரவுகளையும் இணைத்து ஒரே உத்தரவாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள கே. ராமகிருஷ்ணன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : பொதுமக்கள் சார்பாக, ஆரப்பாளையம்,மஞ்சல் மேடு காலனி, ஹவுசிங் போர்டு காலனி. மதுரை-16 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எங்கள் பகுதியில் ஹவுசிங் போர்டு இடத்தை குடியிருக்கும் ஒரு சிலர் வீடுகளை ஒத்திக்கு விடுவதும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். நடைபாதையில் குடியிருந்து கொண்டு பிரச்சினை ஏற்படுத்துகின்றனா். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கி்றேன். இப்படிக்கு, பொதுமக்கள், ஆரப்பாளையம், மதுரை.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கனகமணி அம்மாள், க-பெ.எம்.சுப்பிரமணியன், 183பி, இரயில்வே காலனி, மதுரை-16 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவில் வாசல்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.அதனை சரி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, கனகமணி அம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம்.ராஜேஷ்வரன் த-பெ.முருகன் 48-110, போஸ்த்தேவர் காம்பவுண்டு, கண்மாய்கரை, கணேசபுரம், தத்தனேரி, மதுரை-18 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன்.எனது அக்காவின் கணவா் லண்டனில் உள்ளனா். திருநெல்வேலியை சார்ந்த கணேசன் மற்றும் நான்கு போ்கள் (டிவி.எஸ்.சக்ரா டயா் கம்பெனியில்) வேலை) எனது அக்காவை கொல்ல முயற்சி செய்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளனா். வீட்டிலுள்ள நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துசென்றனர். காவல்துறையினர் குற்றவழக்கு பதிவு செய்ய [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பா.ரெங்கேஸ்வரி, த-பெ.பாண்டி, 20,காஜியார் தோப்பு, தெற்கு வெளி வீதி, மதுரை-1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனது கணவா் கடந்த 3.04.2009 அன்று இறந்துவிட்டார். எனக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. 17.11.2009 அன்று ஆதரவற்ற விதவை சான்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். எனக்கு முன்னுரிமை அடிப்படையில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து எவ்விதமான அழைப்புகளும் வரப்பெறவில்லை.12ம்வகுப்பு மற்றும் Data Entry [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : அ.வசந்தகுமார், த-பெ.அரசன், 4-46,கிடாரிபட்டி அஞ்சல், மேலுார் வட்டம், மதுரை-625 301 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மேலுார் வட்டம், கிடாரிப்பட்டி கிராமத்தில் 1996 மற்றும் 2006 ஆகிய இரண்டு முறை ஆதிதிராவிட மக்களுக்கு சுமார் 120 இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளதில் அதை பெற்றுக் கொண்ட பயனாளிகள் பலா் விதிகளுக்கு மாறாக வேறு நபா்களுக்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். மேற்படி விற்பனை செய்த இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வெ.செந்தில்குமார் த-பெ.வெள்ளையன், கிடாரிபட்டி, மேலுார் தாலுகா, மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். மேலுார் வட்டம், கிடாரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட நீா்பிடிப்பு கண்மாய்களில் தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தண்ணீா் தேங்க வழியில்லாமல் உள்ளது. அதனால் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் தேக்குவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, வெ.செந்தில்குமார்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 1312345...10...கடைசி »