மனு எண்:

Monthly Archive for October, 2011

அனுப்புநர்: மோதி லால்நேரு, இ.வ.பொ, இ.ச., தனிச்சியம் அஞ்சல், வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம் அ.கு. எண்: 625 221, அலைபேசி 9585773633 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் கிராமத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு வழித்தட எண்: 94 இயங்கி வந்தது. ஒரு மாத காலமாகி தனிச்சியம் பிரிவிலேயே திரும்பி செல்கிறது. இதற்கான காரணத்தை அரசு போக்குவரத்துக் கழகம் சோழவந்தான் பணிமனை மேலாளரிடம் நேரடியாக சென்று கேட்டேன். அவர் எந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி.முத்துச்செல்வி d/o பிச்சையாசெட்டியார் து.கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் வாழ்கிறேன்.நான் கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறேன்.என்னுடைய தாய் தந்தையரை காப்பாற்றும் பொறுப்பும் என்னிடம் உள்ளது.நான் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்.மேலும் என்னுடைய அம்மா பி.முத்துலட்சுமி என்பவர் சாப்டூர்-அழகாபுரியில் சத்துணவு சமையல்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார்.எனவே அவ்வேலையை எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் ஊராட்சி மன்றம் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி என்பது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பசுமை நிறைந்த தீவாக காட்சி தருகின்றது.எங்கள் ஊராட்சி நல்ல வளர்ச்சி திட்டப்பணியில் செல்ல வேண்டும்,என்பது என்னுடைய கருத்தும் பொதுமக்கள் கருத்தாகும் எனவே அக்டோபர்2 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற காரணத்தினால் தள்ளி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் ஊராட்சி மன்றம்,பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம்,சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி ஏற்றுள்ள p.வீரபுத்திரன் ஆகிய நான் நாட்டுக்காக சேவை செய்ய இந்திய ராணுவப் பணியில் ஈடுபட்டு பல சாதனை செய்து ஓய்வு பெற்றுள்ளேன்,இதே சாதனையை பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய காரணத்தால் தலைவர் பதவி ஏற்றுள்ளேன்.தற்போது என்னுடைய முதல் பணியாக எங்கள் ஊரில் உள்ள ஊ.ஒன்றிய நடுநிலைப் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க‌.சின்னராசு த/பெ கருப்பையா து.கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது65 எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு,சின்னராசு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வ உ சி தெரு குடியிருப்போர் நாகமலைப் புதுக்கோட்டை கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நாகமலை புதுக்கோட்டை என் ஜி ஒ காலனி வஉசி தெருவில் உள்ள இரும்பினால் ஆன மின் கம்பம் துருப்பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளவிபரம் தெரிவித்து நாகமலை புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு ‌அளிக்கப்பட்டது.பின் மாவட்ட ஆட்சியரின் தொடுவானத்தில் மனு செய்யப்பட்டது.மனு எண்7174நாள்9.9.2011.அதன் பின்னர் 22.10.2011ல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இரா.சந்திரசேகர், 56,காந்தி வீதி, பெத்தானியாபுரம். மதுரை(மேற்கு) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. பெருமதிப்புக்குரிய ஆளுனர் அவர்களுக்கு, வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு மிகவும் சிக்கலான நடைமுறைகள் கையாளப் படுகிறது. உண்மையாகப் பார்த்தால் அரசாங்கம்தான் பத்திரப் பதிவுக்கான கட்டணம் வாங்கும் போது அதற்கான கட்டணத்தை வாங்கிக் கொண்டு அவர் பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும். மாநகராட்சி அலுவலகத்தில் பெயர் மாற்ற விண்ணப்பம் வாங்கும் போதே தரகர்கள் 2000ரூபாய் வரை பேரம் பேசுகிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.நாகராஜ் பழையூர் பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அத்திபட்டி உள்வட்டம் பழையூரில் சர்வே எண்534/51.இதை பிரித்து தனி பட்டாவாக வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.பிச்சைநாகு பழையூர்[p.o]பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அத்திபட்டி உள்வட்டம் பழையூரில் உள்ள சர்வே எண்534/51.நத்தம் இதில் குடி இருக்கிறேன் இதை பிரித்து தனிப்பட்டாவாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: துரைபாண்டி த/பெ சோலைமலை பழையூர் அத்திபட்டி[h.o] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை பழையூரில் சர்வே எண்535/2ல் பட்டா எனக்கும் எனது அண்ணன் இருவருக்கும் சேர்ந்து கூட்டாக இருப்பதால் தனிதனி பட்டாவாக இருவருக்கும் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 712345...கடைசி »