மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:22  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:22  

அனுப்புநர்: ம.சுரேக்ஷ், த/பெ மச்சக்காளை, காந்திஜி நகர், வெள்ளலூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் ஐயா, நான்(சுரேக்ஷ்) மேற்கண்ட ஊரில் வசித்து வருகிறேன். இந்து-பறையர் சாதியைச் சேர்ந்தவன் ஆவேன். எனக்கு இடது கால் ஊனமாகி கை கம்புடன் கடந்து சென்று வருகிறேன்.14.12.2011ல் எனக்கு திருமணமாகியுள்ளது.இடது கால் ஊனம் என்பதர்க்கான வில்லாபுரத்தில் சான்று பெற்றுள்ளேன்.வில்லாபுரத்தில் ஊனமுற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு ஏற்பாடு செய்தோம்.ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. ஆதலால் ஏழையாகிய எனக்கு ஊனமுற்றோர் உதவித் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்து,த‌/பெ அழக‌ர்சாமி முத்துச்சாமிபட்டி,செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா,வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனக்கு வயது 70 ஆகிறது.திருமணம் செய்து கொள்ளவில்லை. என் தங்கை விட்டில் வசித்து வருகிறேன்.உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வருகிறேன்.எனக்கு அரசு உதவி தொகை வழங்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரா.சுப்பையா த/பெ ராமலிங்க சேதுபதி செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா,வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வசித்து வருகிறேன்.எனக்கு வயது 70 ஆகிறது.பிறவியில் இருந்தே இரு கால்களும் ஊனமாக உள்ளது. பலமுறை உதவி தொகை கேட்டும் பலன் இல்லை. உதவி தொகை வழங்க ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மெய்யன் 4/91 சுமதிபுரம் செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு எந்த வருவாயும் இல்லை. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டுமாய் ஆவண செய்ய கேட்டு கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தீபா, க/பெ. ஜெயக்குமார் வலையன்குளத்துபட்டி சொக்கம்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். எனது கணவர் இறந்துவிட்டபடியால், வறுமையால் மிகவும் சிரமப்படுகிறேன். தாங்கள் தயவு கூா்ந்து எனக்கு விதவை உதவி தொகை வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கரு.நாகம்மாள், சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனது கணவர் இறந்துவிட்டபடியால், எவ்வித ஆதரவுமின்றி மிகவும் சிரமப்படுகிறேன். தாங்கள் தயவு கூா்ந்து எனக்கு விதவை மற்றும் முதியோர் உதவி தொகை வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆராயீ , க/பெ பூசாரி, வடக்கு நாவினிப்பட்டி கிராமம், நாவினிப்பட்டி ஊராட்சி, மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், நான் நாவினிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு நாவினிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு எந்த வேரு ஒரு எந்த வருமானம் இல்லாத காரனத்தினால் நான் மிகவும் சிரமப்பட்டு வருகின்றேன். ஆகையால் எனக்கு முதியோற் உதவி தொகை வழங்குமாறு மிகவும் பணியுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெ. சின்னசாமி s /o ஆ .பெருமாள் கோண், தும்பைப்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா நான் மதுரை மாவட்டம் , மேலூர் தாலுகா , தும்பைபட்டி கிராமத்தில் வசிக்கிறேன்.எனக்கு வயது 55 ஆகிறது .நான் ஒரு ஊனமுற்றவன் , எனக்கு இரண்டு காதுகளும் கேளாது.ஆகவே எனக்கு உதவி தொகை மற்றும் இதர சலுகைகள் கிடைக்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கே.பாப்பா, க-பெ.கருவாயன்,(லேட்), சுப்புராமன் தெரு, தெற்குத் தெரு அஞ்சல், மேலூா் தாலுகா. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவா் இறந்து பல வருடங்கள் ஆயிற்று. நான் ஆதரவு இன்றி மிகவும் வறுமையில் வாடுகிறேன். அய்யா அவா்கள் கருணை கூா்ந்த எனக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சதாசிவம் கோட்டநத்தம்பட்டி ஊராட்சி மேலூர் ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் முதியோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை வேண்டி பல முறை மனு செய்துள்ளேன். இதுவரை எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அய்யா தற்போது தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து முதியோர் உதவி வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123