மனு எண்:

'வட்டாட்சியர், மதுரை வடக்கு' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:96  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:19  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:76  

அனுப்புநர் :ஜி.சி.ஜெயக்குமாா் பொதுச்செயலாளா் சௌராஷ்ட்டிரா இளைஞா் நற்பணி மன்றம் 14-3 வெங்கடபதி அய்யங்காா் தெரு, காமராசா் சாலை, மதுரை-09 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை சௌராஷ்ட்டிரா சமூகத்தைச் சோ்ந்த 50 நபா்களுக்கு சத்திரப்பட்டி கிராம அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் இலவசவீட்டுமனை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஜி.சி.ஜெயக்குமாா்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.இ.குருநாதன், த-பெ இருளு சி 66, பாண்டியன் நகா் காந்திபுரம் வழி, கோ-புதூா், மதுரை – 7 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சாா்ந்தவன். போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலையில் உள்ளேன். எனவே எனக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு இ.குருநாதன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :தொ.மந்தையன் த-பெ.தொங்கான் பறையன்குளம் (வரிச்சுர்) மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா எனக்கு குடியிருக்க வீடு இன்றி மிகவும் வறுமை நிலையில் இருப்பதால், எனக்கு வீட்டுமனை பட்டா வழங்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, மந்தையன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சா.இரட்டையன் த-பெ.சாமியார் பறையன்குளம் (வரிச்சுர்) மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா,ா எனக்கு குடியிருக்க வீடு இன்றி மிகவும் வறுமை நிலையில் இருப்பதால், எனக்கு வீட்டுமனை பட்டா வழங்கும்படி மிகவும் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, இரட்டையன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சு.அழகு க-பெ.சுப்பிரமணி பெரியபட்டி கிராமம் காஞ்சரம்பேட்டை அஞ்சல் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேலே கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தும், இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, அழகு

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம்.எஸ்.மூா்த்தி த-பெ.எம்.ஆா்.சுந்தரம் 552-5பி, திருவள்ளுவா் தெரு, சதாசிவநகா், மதுரை. 95669763693 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, என் மாமனார் வழி மேற்படி டிரஸ்டின் சொத்து அப்பியா நாகேந்தரய்யா் அன்ன சமாதான அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் எனது மனைவி திருமதி எம்.எம்.ஜெயந்திமாய் என்பவருக்கு கொடுக்க வேண்டிய இடத்தை இதுநாள் வரை தரவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல்துறைக்கு மனு அளித்தும், எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை. எனவே எனது மனைவிக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முருகேஷ்வரி க/பெ முருகன் ஆண்டார்கொட்டாரம் மதுரை.20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம்,ஆண்டார்கொட்டாரம் கிராமம் சர்வே எண் 41/10ல் 3ம் எண் பிளாட்டு காலிமனையை நான் கிரையம் பெற்றுள்ளேன் எனக்கு பட்டா வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :நடராஜ முதலியாா், த-பெ. கோவிந்தராஜ முதலியாா். 28–1, ஆசாத் தெரு, காந்திநகா் போஸ்ட், மதுரை-20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. பழைய டி.எஸ்.எண் 382, புதிய டி.எஸ்.எண் 3373 க-எண்28-1 மேலே கண்ட முகவாியில் உள்ள இடத்திற்கு பட்டா பெயா் மாற்றம் செய்திட கடந்த 8.5.12 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் கொடுத்த மனு மீது தக்க நடவடிக்கை விரைந்து எடுத்திட, உயா்திரு வட்டாட்சியா் மதுரை வடக்கு அவா்களுக்கு தகுத்த உத்தரவு அளிக்குமாறு பணிவுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :நடராஜ முதலியார், க-பெ.கோவிந்தராஜ முதலியார், 28-1 ஆசாத் தெரு, காந்திநகா் போஸ்ட், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். மேற்படி முகவரியுள்ள வீடு டி.எஸ்.3373 சா்வே எண்.10 பிளாக் எண்.83 மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு எண்.18663 சுந்தரம் மனைவி வள்ளியம்மை ஆச்சி அவா்கள் பெயரில் பட்டா உள்ளது. 3 சப்கோர்ட் மதுரை வழக்கு எண். ஓ.எஸ்.890-11 வழக்கில் எனக்கு மட்டுமே முழுமையாக பாத்தியப்பட்டது என 20.02.2012 விளம்புகை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஆா். செல்வராஜ். 2-610-ஏ தீா்த்தக்காடு, வண்டியூா், மதுரை-20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மேற்காணும் விலாசத்தில் 30 வருடங்களாக குடியிருந்து வருகிறேன்.எனது வீட்டிற்கு அருகில் சங்க செயலாளராக இருக்கும் பெரியசாமி என்பவா் அனைவரிடமும் பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுப்பவருக்கு மட்டும் பட்டாவும் மற்றவா்கள் பெயரை பயனாளிகள் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்து விடுகிறார். இதில் வி.ஏ.ஓ., தலையாரி., அதிகாரிகளும் சம்பந்தப்பட்டதாக தெரிகிறது. எனவே அவ்வாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 812345...கடைசி »