மனு எண்:

'வட்டாட்சியர், மேலூர்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:41  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:38  

அனுப்புநர் :மலைச்சாமி, த-பெ.சுப்பன், கல்லம்பட்டி கிராமம், மேலுார், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் துப்பாக்கி உரிமம் கோரி (SBBL) உரிமத்தினை புதுப்பிக்க கோரி 31.12.2011-பிறகு 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தருமாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனுச் செய்தும் புதுப்பிக்க வில்லை. எனவே தாங்கள் இம்மனுவினை பரீசிலனைசெய்து லைசன்ஸ் புதுப்பித்து வழங்கிட பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. மலைச்சாமி.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு. I. இளஞ்செழியன், த/பெ. M. இருளப்பன் 5/51, இந்திரா காலனி, அண்ணாநகா், மதுரை-20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, மேலூா் டவுன் T.S.No. 26/6B பிளாக் எண் 7-ல் பிளாட் எண் 13-ல் சென்ட் 5. சென்ட் 5. சதுர அடி 48 கிறையம் பெற்று அனுபோகம் செய்து வருகிறேன் இதற்கு உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவரா் அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :க.பூங்கொடி, த/பெ. கருப்பன், புலிப்பட்டி (காலனி) மேலூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, நான் புலிப்பட்டி கிராமத்தில் சர்வே எண் 138/4,5 -ல் பிளாட் எண் 38-ஐ கிரையம் பெற்று அனுபோகம் செய்து வருகிறேன். பட்டா மாறுதல் சம்பந்தமாக, கடந்த ஜமாபந்தியில் மனு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இம்முறை இம்மனுவிற்காவது உட்பிரிவு செய்து எனது பெயரில் தனிப்பட்டா தாக்கல் செய்து தருமாறு மாவட்ட ஆட்சித் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் எங்கள் பள்ளி அருகில் குப்பையை கொட்டி தீவைபது குறித்து நாங்கள் இருமுறை மனு அனுப்பியுள்ளோம்.அந்த மனுவிற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் மட்டும் தான் வந்தது நாங்கள் அனுப்பிய மனு எண் 6515 8510 25/02/2012 இந்த மனுவவை பார்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம். தங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வெள்ளலூர் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வணக்கம். எங்கள் ஊரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று சிறப்பாக இயங்கி வருகின்றது. மாணவர்களுக்கு நல்ல நிழல் தரக்கூடிய பெரிய வேப்பமரமும் பள்ளி காம்பவுண்டும் உள்ளது. மதியம் வெயில் நேரத்தில் அந்த நிழலில் தான் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி ஆசிரியர்களும் மாணவர்களும் பாதுகாத்து வருகின்றனர்.11.05.2012 அன்று [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :க.பெருமாள் 9வது வார்டு உறுப்பினா் மற்றும் ஆதி திராவிடப் பொது மக்கள் கொங்கம்பட்டி (அஞ்.) மேலூா் வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேலுா் வட்டம், கொங்கம்பட்டி கிராமத்தில் கோவில் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து தனிநபருக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொது கோவில் இடத்தை தனி நபருக்கு பட்டா வழங்குவதை தடுக்க வேண்டுமாய் பணி்வுடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு ஊா் பொதுமக்கள் கொங்கம்பட்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம்.சின்ன எழுவி க-பெ முருகன் 2-361 கோட்டை வேங்கைபட்டி கண்ணமங்கலபட்டி அஞ்சல் திருப்பத்துார் சிவகங்கை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் ்அய்யா மேலுார் வட்டம் 25 கொங்கம்பட்டி கிராமத்தில் சர்வே எண்.327-1 என்ற அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். மேற்படி இடத்திற்கு நிலவரி செலுத்திவருகிறேன். எனவே மேற்படி இடத்திற்கு பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கோபாலகிருஸ்ணன் சாம்பிராணிபட்டி விவசாயிகள் சங்கத் தலைவர் கிடாரிபட்டி அஞ்சல் மே லுார் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா எங்களது ஊரான சாம்பிராணிபட்டியில் உள்ள முருகக்கோன்கண்மாய் மற்றும் சேங்கை வெள்ளிமலையாண்டி கோவில் மற்றும் புதுக்கண்மாய் கரை அய்யாணார் கோவில் தவறாக பட்டா மாறுதல் ்செய்து விற்று கிரைய ஒ்பபந்தம் செய்திருக்கிறார்கள் ஆகையால் எங்களுடைய வாழ்வு ஆதாரமும் வழிபாடு முறையும் பாதிக்கப்படுகிறதுஇதனை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழ.ச‌ந்திர‌ன்,த/பெ அழ‌க‌ப்ப‌ன், முத்துச்சாமிபட்டி,செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். செம்மணிப்பட்டி ஊராட்சி நத்தம் சர்வே எண்717/11ல் கதவு எண் 2/123ல் கூரை வீடு கட்டி குடியிரிந்து வருகிறேன். மேற்படி வீடி மற்றும் வீட்டு மனைக்கு இதுவரை பட்டா இல்லை தொடுவாணம்8811/ 10-03-2012மூலம் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தேன், அதற்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: , அ.பில்லப்பன், த/பெ அழகப்பன், 4/147 கோட்டநத்தம்பட்டி , மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது தகப்பனார் இறந்து பல வருடம் ஆகி விட்டது.அவர் பெயரில் பட்டா பெற்று அனுபவித்து வந்த ஓட்டு வீடு(சர்வே எண் : 903/22 நத்தம் ) மற்றும் காலியிடத்தை அவர் மகன்களான 1.பில்லப்பன் 2.கண்ணன் இருவரும் அனுபவித்து வரி செலுத்தி வருகிறோம். இப்போது வீடு இடிந்து விழும் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 41234