மனு எண்:

'செயற் பொறியாளர் – மின்சாரம் – கிராமம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஆணையூர் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா மதுரை 2வது வார்டு ஆணையூரில் 40வீடு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். இபி போல் நம்பா் 14-20 மூன்று இணைப்பு வயா்கள் 10அடி உயரத்தில் இருக்கின்றன எனவே வீடுகளுக்கு எந்த பொருளும் கொண்டு செல்ல இயலவில்லை. பலமுறை மின்வாரியத்திடம் புகார் செய்தும் பலனில்லை இப்படிக்கு பொதுமக்கள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் ஊராட்சி மன்றம் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்.மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சியில் ஊர்நுழைவுவாயில் கட்டாரபட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சங்கரபாண்டி என்பவர் செங்கல் காளவாசல் வைத்துள்ளார், மின் இணைப்பு பெற்றுள்ளார் ஆனால் ஊராட்சியிடம்.வீட்டுவரி ரசீது பெறாமல்மின் இணைப்புவழங்கி உள்ளார்கள் எனவே இதன்மீது நடவடிக்கை எடுத்து ஊராட்சியிடம் ரசீது பெற ஆவணசெய்யுமாரு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது கிராமத்தில் நடப்பில் இருக்கின்ற மின் இணைப்புகளுக்கு போதிய Voltage இல்லாத மின்மாற்றி இருப்பதால் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் மோட்டர்கள் இயங்காமல் மக்கள் அவதி பட்டுவருகினறனா் எனவே அல்லிகுண்டம் கிரமத்திற்க்கு கூடுதலாக மின் மாற்றி அமைத்து தர வேண்டுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அல்லிகுண்டம் கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் காரனமாக பொருவாரியான தெருமின்விளக்குகள் எரியாமலும் குடிநீர்மோட்டார்கள் இயங்காமலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதலாக மின்மாற்றி அமைத்து தர வேனுமாய் மிகவும் பணிவோடு கேட்டுகெள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அய்யா, ஆணையுா் கிராமம், குலமங்கலம் கிராமத்தில் 3வது வார்டு,எனக்கு சொந்தமான இடமான புலஎண்.242ஃ1ன் வழியாக மின்கம்பங்களை கொண்டு செல்வதற்கு எனது அனுமதியில்லாமல் திரு.அம்மாக்கண்ணு என்பவர் அனுமதி கேட்டு  கொடுத்துள்ள மனுவின் பேரில் மின்சார வாரியம் அனுமதி கொடுத்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செ.சின்னதாய், க.பெ.செல்வராஜ் சந்தைபேட்டை 6வது வார்டு, உசிலம்பட்டி மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஏற்கனவே தரப்பட்ட மின் இணைப்பினை துண்டித்து விட்டதால் வீட்டில் குழந்தைகள் படிக்க இயலவில்லை. எனவே மீண்டும் மின் இணைப்பு பெற்றுத்தரும்படி கோருதல்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ப.குரு, 5/3, கத்தப்பட்டி, சிட்டம்பட்டி அஞ்சல், வெள்ளரிப்பட்டி ஊராட்சி, மேலுார் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கத்திற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எங்களது கிராமம் வெள்ளரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கத்தப்பட்டி உட்கடை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே P.W.D. அலுவலகம் பின்புறமுள்ள குடியிருப்பில் வரும் மின் இணைப்பு Transform-ல் அடிக்கடி Fuse பழுதடைந்துவிடுகிறது. இதனால் எந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எஸ். சுப்பிரமணியன் 1/355-5 தாமிரபரணி மெயின் தெரு (கிழக்கு) 1 வது வார்டு, ஸ்ரீ நகர், நாகனாகுளம் ஊராட்சி மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிட்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். முறையாக வீட்டு வரி கட்டி வருகிறேன். என் வீட்டு அருகாமையில் மின் கம்பம் இல்லை. ஆகையால் ஒரு தொலைவுக்கு அப்பாலிருந்து மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி மின் தொய்வு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அல்லிகுண்டம் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அல்லிகுண்டம் கிராமத்தில் மின்மாற்றி பழுதாகி இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் குடிநீர் மோட்டார் இயங்காமல் குடிநீர் கிடைக்காமலும். தெருவிளக்குகள் எரியாமலும் உள்ளது. எனவே சமூகம் அவர்கள் மேற்படி மின்மாற்றியை பழுதுநீக்கம் செய்துதரவேனுமாய் மிகவும் பணிவோடு கேட்டுகொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 212