மனு எண்:

'திட்ட அலுவலர் ஐசிடிஎஸ்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர் :பி.வீரணசிங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மதுரை மாவட்ட தலைவர், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, மதுரை மேற்கு ஒன்றிய குழு உறுப்பினர், 3-15-64, தெற்கு தெரு, ஆனையுர், மதுரை-17. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 2007ம் ஆண்டில் 30 பணியாளர் பணியிடம் நிரப்புவதற்கு 557 மனுக்களும், 2007ம் ஆண்டு 18 உதவியாளர் பணியிடத்திற்கு 123 மனுக்களும், 2009ம் ஆண்டு 12 உதவியாளர் பணியிடத்திற்கு 124 மனுக்களும், [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அம்பலக்காரன்பட்டி கிராமம், தும்பைப்பட்டி ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தும்பைபட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம் இல்லாமல், கலையரங்கத்தில் வைத்து நடத்துகிறோம். ஆகையால் எங்கள் ஊரில் அங்கன்வாடி மையக்கட்டிடம் அமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கே.அமிர்தவள்ளி, த-பெ.கரந்தமலை, 1-47ஆதிதிராவிடர்காலனி, வல்லக்குளம் வைரவநத்தம் ஊராட்சி, மதுரை வடக்கு, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்த திருமதி.எம்.ஜெயக்கொடியம்மாள் என்பவர் பணியிலிருக்கும்போது இறந்ததால், கருணை அடிப்படையில் வாரிசுவேலை வேண்டி விண்ணப்பம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆர்.சரஸ்வதி க.பெ செல்வகுமார் எல் 1-2 டி.என்.கெச்.பி.காலனி செக்டார் நான்கு, இரயிலார் நகர் மதுரை-18 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு அங்கன்வாடி உதவியாளர் பணி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஆர்.சரஸ்வதி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம பொது மக்கள் வண்டப்புலி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஒன்றியம் வண்டப்புலி கிராமத்திற்கு அங்கன்வாடி கட்டிடம் இல்லை.தற்பொழுது மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தில் இயங்கி வருவதால் அதற்குரிய கட்டிடம் கட்டித் தர அனுமதி வழங்குமாறு பணிவண்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர்,ஊராட்சி மன்றம் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி பழையூரில் இரண்டு ஊட்டச்சத்து மையம்,உள்ளது.ஊட்டச்சத்து மையம் 1 கட்டிடம் உள்ளது.ஊட்டச்சத்து மையம் 2 வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.எனவே இம்மையத்திற்கு அரசு கட்டிடம் கட்டித் தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »