மனு எண்:

'திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:9  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:7  

அனுப்புநர் :15.பி. மேட்டுப்பட்டி, வார்டு உறுப்பினா்கள், கஜேந்திரன் மற்றும் பலா், 15பி, மேட்டுப்பட்டி, அலங்காநல்லுார். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, ஊராட்சி மன்ற தலைவி பசுமை புரட்சி திட்டம், இலவச ஆடு வழங்கும் திட்டம், நிதிமோசடி ஊரணியில் புளியமரம் வெட்டியது மின்மோட்டார் வைத்து தண்ணீா்தண்ணீா் எடுப்பது போன்ற முறைகேடுகளை தலைவி மற்றும் மகன் செய்துவருவதாக புகார்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, வார்டு உறுப்பினா்கள் கஜேந்திரன் மற்றும் பலா்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கே.கே.ரமேஷ் மானேஜிங்டிரஸ்ட்டி பி.ஐ.எல். 1959,டி.என்.ஹெச்.பி. மேலஅனுப்பானடி, மதுரை-09 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, இலவச வீட்டுமனை வழங்கிய இடத்தில் இலவச வீடு கட்டித்தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு கே.கே.ரமேஷ்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.எ.லெட்சுமிபெரியசாமி தஃபெ. ஆலிமிக்கிபொம்மான், ஒய். தேத்தாங்குளம், அரும்பனூர் ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சோ்ந்தவன். நான் ஆதிதிராவிடர் வகுப்பை சோந்தவன். எனது மனைவிக்கு 2008-2009ம் ஆண்டு திட்டத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2 தவணையாக 40 மூடை சிமெண்ட் கொடுக்கப்பட்டது. ஒரு தவணை தொகையை மட்டும் வழங்கப்பட்டது. வீடு பூசப்படாமல் உள்ளது. கட்டிடம் கட்ட முடியாமல் பாதியில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ. மொக்கமாயன் பூதிப்புரம் கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் பூதிப்புரம் கிராமத்தில் வசித்து வந்த திருமதி மொ. கச்சம்மாள் என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிட்டத்தின் கீழ் 06-10-2010 – தேதி வேலை பார்த்து கொண்டு இருந்த போது இறந்து விட்டார். அது குறித்து செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மதுரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சுந்தரபாண்டியன் தெற்குத்தெரு உச்சப்பட்டி கப்பலுார் திருமங்கலம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா உச்சப்பட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் இலட்சம் பெற்றுக் கொண்டு பசுமை வீடு மற்றும தொகுப்பு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைவரும் வசதியாக இருக்கிறார்கள் உண்மையான ஏழைகள் என்போன்றேரர் பாதிக்கப்பட பிடிஓவும் பஞ்சாயத்து தலைவரும்செயல்படுகிறார்கள் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பசுமை வீடு ஒதுக்கி தருமாறு பணிவுடன் கே ட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : J.S. குபேந்திரன், 4/688, வண்டியுா் மெயின்ரோடு, (மகாலெட்சுமி மாவுமில் அருகில்) சதாசிவ நகா், வண்டியுா், மதுரை – 625 020. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் ஒரு பிற்பட்ட சௌராஷ்டிரா சமூகத்தைச் சோ்ந்தவன். நான் தற்சமயம் வாடகை வீட்டில் மின் பற்றாக் குறையால் என குடும்பத்துடன் மிகவும் கஷ்டப்படுகிறேன். நான் மதுரையில் வண்டியுாில் தொடா்ந்து வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். ஆகையால் சமூகம் அவா்கள் கருணை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : சுந்தர பாண்டியன் தெற்கு தெரு உச்சப்பட்டி கிராமம், பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மிகவும் ஏழை.இன்றைய பஞ்சாயத்து தலைவர் பணம் வாங்கி கொண்டு வீடு ஒதுக்கீடு செய்கிறார். அதற்கு BDO -வும் உடந்தையாக செயல்படுகிறார்.எனவே என் போன்ற ஏழைகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர், சின்னக்கட்டளை கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சின்னக்ககட்டளை ஊராட்சி மன்ற அலுவலகம் 1980-81 ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது சின்னக்ககட்டளை ஊராட்சி மன்ற அலுவலகம் இடிந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே தற்போ து ஊராட்சி மன்ற அலுவலகம் மகளிர் சுய உதவி குமு கட்டிட வளாகத்தில் செயல்படுகிறது. மேலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு முன்மொழிவு சென்ற வாரம் தாங்களுக்கு வ.வ.அ [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம பொதுமக்கள் வண்டப்புலி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வண்டப்புலி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் வேண்டுவது என்னவென்றால் எங்களது இளைஞகர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை சீர்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »