மனு எண்:

'நேர்முக உதவியாளர்(வளர்ச்சி)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:9  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:8  

அனுப்புநர் :இரா.தினேஷ்குமார் இளநிலை உதவியாளா், (காத்திருப்போர் பட்டியல்) (9943620075) மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து எனது சொந்த காரணங்களுக்காக பணி மாறுதல் வேண்டியிருந்தேன். அதனை தொடர்ந்து எனது பணியிடம் 4 மாதங்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. எனவே எனது பெயரை காந்திருப்போர் பட்டியலிலிருந்து நீக்கி, எனக்கு கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு பணிமாறுதல் வழங்க வேண்டுமாய் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஜெ. சாந்தாலெட்சுமி, க-பெ. எம்.ஜெயச்சந்திரன் லேட், 38, அய்யனார் கோவில் மெயின் ரோடு, செல்லூா். மதுரை-2. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனது கணவா் எம். ஜெயசந்திரன் 14.8.1995- அன்று இறந்துவிட்டார். இறக்கும் போது வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி ஒன்றியம், வாடிப்பட்டி அலுவலகத்தில் ஊர் நல அலுவலராக பணியாற்றினார். எனது மகன் ஜெ. செந்தில்குமார் என்பவருக்கு வாரிசு வேலை வழங்கிட கோரி 14.8.1996-ல் மனு கொடுத்தேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அனுப்புநா் திரு. ஆா்.சார்லஸ் மாநில செயலாளா், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சியில் செயலாளர்கள் பணிபுரிகிறார்கள். இவா்களில் தகுதியான ஊராட்சி செயலாளர்களுக்கு 2010-2011,2011-2012 ஆண்டிற்கு 20% அரசு ஆணைப்படி பதவி உயா்வு வழங்குவதற்கு தகுதியான செயலார்களை தேர்வு செய்து தமிழ்நாடு தேர்வாணைய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் ்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.இரா.தினேஷ்குமார், இளநிலை உதவியாளா், காத்திருப்போர் பட்டியல் மதுரை மாவட்டம், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மண்டல ஊரக வளா்ச்சி நிறுவனத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து பணியிட மாறுதலில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டேன். எனது குடும்ப சூழ்நிலை மற்றும் எனது போக்குவரத்து வசதிக்காக உசிலம்பட்டி உதவிக் கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பம் செய்திருந்தேன். நாளது தேதி வரை எனக்கு உதவி கோட்டப்பொறியாளா் அலுவலகத்திற்கு பணியிட [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : அனுப்புநா் திருமதி. ஹேமலதா, க-பெ.சிவலிங்கம், கொ்டுக்கம்பட்டி , கொட்டாம்பட்டி ஒன்றியம், மேலூர் வட்டம், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, 2011 அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வாக்கு பெட்டிகளில் வாக்கு சீட்டுகளை மாற்றியது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலர்-இஒபி – என்பவரும்,கொடுக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவியின் கணவா் முனியாண்டி என்பவரும் மற்றும் சிலரும் விடுமுறை நாட்களில் வாக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இரா.தினேஷ்குமார், இளநிலை உதவியாளர், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை-2. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை-20 நான் எனது குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சொந்த காரணத்திற்காகவும் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிய முடியாத சூழ்நிலையில் உள்ளேன். எனவே எனது பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு உசிலம்பட்டி உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி மாறுதல் செய்து தரவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : இரா.தினேஷ்குமார், இளநிலை உதவியாளா், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை-2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் கடந்த 27.3.2007 முதல் நாளது தேதிவரை ஊரக வளா்ச்சி துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். நான் மேற்கண்ட ஊரக வளா்ச்சி துறையில் பணிபுரிய விருப்பம் இல்லாத நிலையில் உள்ளேன். எனவே என்னை தமிழ்நாடு அரசு தலைமை செயலுகத்தில் உரிய பிரிவில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ந.நாகேந்திரன், அலுவலக உதவியாளா், மண்டல ஊரக வளா்ச்சி நிறுவனம், தே.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் பணிபுரிந்து வருகிறேன். நான் சுமார் நான்கு வருடங்களாக மண்டல ஊரக வளா்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.எனது குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கு திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உதவி கோட்டப்பொறியாளா் அலுவலகம் உதவி செயற்பொறியாளா் அலுவலகம் உசிலம்பட்டி இவற்றில் ஏதேனும் ஒரு அலுவலகத்திற்கு மாறுதல் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெ. முருகன் த-பெ ரா. பெரியகருப்பன் 3-123 மேலத்தெரு துவரிமான் அஞ்சல் மதுரை 19 பெறுநர்: ஊரக வளா்ச்சித் துறை நேர்முக உதவியாளா் மதுரை அய்யா நான் மேற்படி கிராமத்தில் வசிக்கிறேன் துவரிமான் ஊராட்சியில் ஊராட்சி உதவியாளா் காலி பணியிடம் வேண்டி மாவட்டட ஆட்சியர் மதுரை அவா்களிடம் 28.9.2011 அன்று விண்ணப்பித்தேன். துவரிமான் ஊராட்சித் தலைவா் ்அவா்களிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவா்களிடமும் விண்ணப்பித்தேன் இது நாள் வரையிலும் பதில் ஏதும் கிடைக்கபெற வில்லை இதற்கிடையில் [...]

முழு மனுவைப் பார்க்க »