மனு எண்:

'மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:41  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:41  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வைரவநத்தம் ஊராட்சியின் வழியாக செல்லும் நெடுஞ்சாலை வைரவநத்தம் முதல் விட்டங்குளம் வழியாக மேலசின்னனம்பட்டி வரை சுமார் 5 கீ.மீ துரம் உள்ளது. இந்த சாலை அகலம் குறைவாக உள்ளதால் பல வருடங்களாக வைரவநத்தம் ஊராட்சியின் உட்கடை கிராமமான விட்டங்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது. கோட்டப் பெறியாளர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் ஆகிய ஊர்களிருந்து, எங்கள் ஊர் வழியாக அலங்காநல்லூர் வரை பேருந்து சென்றது. சில நாட்களாகவே வரவில்லை.ஆனால் மற்ற பேருந்துகள் மதுரையிலிந்து வருகின்றது. எங்கள் ஊர் ரோடு போடுவதால் வரவில்லை என்று நினைத்தோம்.ஆனால் matal road போட்டு முடித்துவிட்டனர். தயவு கூர்ந்து எங்கள் ஊருக்கு வாடிப்பட்டி மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கி. ரமேஷ்குமார் 5/179 மசக்காளிப்பாளையம் ரோடு கோயம்புத்தூர் 642 105 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். கடந்த ஏப்ரல் 29, 2012 மதியம் இரண்டு மணியளவில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு மதுரைக் கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து எண் டி.என்.58 என் 1672 என்ற பை-பாஸ் ரைடர் பேருந்தில் நானும் என் குடும்பத்தினரும் பயணம் செய்தோம். எனது இரண்டு மகன்களுக்கு தலா 10 வயது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கருமாத்தூர் கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம்.டித பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. ஜயா. நான் முடக்குசாலையில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வருகிறேன். அண்ணா பஸ் நிலையம் செல்வ்தற்கு குறைவான எண்ணிக்கை பஸ்களே உள்ளது. எனவே 1. அரசு பஸ்கள் மாட்டுத்தாவணிக்கு செல்வதற்கு ஆரப்பாளையம் சுற்றி வருகிறது. அந்த பஸ்களை அரசரடி. புது ஜெயில் ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் சென்று மாட்டுத்தாவணிக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சாப்டூர் கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எங்களது கிராமத்தில் இருந்து சுமார் இரு நூறு குழந்தைகள் அத்திபட்டி மற்றும் கோட்டைபட்டியில் அமைந்து இருக்கும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட அந்த வழிதடத்தில் எங்களது ஊருக்கு உசிலமபட்டியிலிந்து வந்து செல்லும் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கபட்டு வருகிறது. அந்த பேருந்தும் காலை 6:45 க்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஜவகர் BABL மற்றும் NMS நகர் பொதுமக்கள் சிச்சிலுப்பை ஆலாத்தூர் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலாத்தூர் ஊராட்சி சிச்சிலுப்பை கிராமம்,NMS நகரில் குடியிருந்து வருகிறோம். ஊமச்சிகுளம் இருந்து கடச்சனேந்தல் வழி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து சென்று வருகிறது இடைபட்ட ‌நேரத்தில் பேருந்த வசதி இல்லை. ஆட்டோவில் அப்பகுதிக்கு செல்ல ரூ50- [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ராஜலெட்சுமி, க-பெ. முத்துஇருளன் (லேட்), மேலத்தெரு, பனையூர் கிராமம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் எம்.முத்து இருளன் என்பவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்  (மதுரை கோட்டம்-ஐ) மதுரை 10 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில்  காவலராக (வாட்மேன்) வேலை பார்த்து  விபத்தில் இறந்துவிட்டார். நான் வயதான நிலையில் உதவி செய்வதற்கு யாரும் இல்லை. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம பொதுமக்கள், நாகமலை புதுக்கோட்டை, கரடிபட்டி, பல்கலைநகர், மதுரை தெற்குதாலுகா, மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நாகமலைபுதுக்கோட்டை, கரடிபட்டி, பல்கலைநகர் ஆகிய பகுதிகள் மொத்தம் 40,000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு இரவு ‌பேருந்து இல்லாத காரணத்தினால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். வெளியூர் சென்று இரவு 10.00 மணிக்குமேல் திரும்புவதால் ஆட்டோவில் அதிக கட்டணம் செலுத்தி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே ‌எங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா ‌எங்கள் ஊராட்சிக்கு கள்ளிக்குடியிலிருந்து பேய்க்குளம் வரை சிற்றுந்து இருந்தது தற்சமயம் அப்பேருந்து நிறுத்தப்பட்டு விட்டதால் எங்கள் ஊராட்சிக்கு திருமங்கலம் முதல் ‌பேய்க்குளம் வரை கள்ளிக்குடி வழியாக ஒரு பேருந்து இயக்கி எங்கள் ஊர் மக்களின் போக்குவரத்திற்க்கு வசதி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.ஆா்.சீனிவாசன், 11,வெப் சா்ச் தெரு, பொன்னகரம், மதுரை-16 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, ஆரப்பாளையத்திலிருந்து அரசு இராசாசி மருத்துவமனை, மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகம் மற்றும் அரவிந்த கண் மருத்துவமனை ஆகிய மக்கள் அதிகமாக சென்று வரக்கூடிய இடங்களாகும். ஆனால், ஆரப்பாளையத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சோ்ந்தாற்போல் மூன்று பேருந்துகள் வருகிறது. பிறகு அடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு தான் பேருந்து வருகிறது. ஆகையால் ஆரப்பாளையத்திலிருந்து அண்ணாநகா் வரை [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 512345