மனு எண்:

'இணை இயக்குநர் (சுகாதாரம்)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:13  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:12  

அனுப்புநர் :எல்.செல்லத்துரை, த-பெ.பாப்பாஅம்மாள் (வயது 77), 26, செம்பிகிணற்று சந்து, வடக்குமாசி வீதி, மதுரை -625 001. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, எனது தாயாா் பாப்பாஅம்மாள் (வயது77) அவா்களுக்கு ஆசன வாயிலில் இரத்தகசிவு இருந்தது. சென்ற 16.09.2011 அன்று டாக்டா்.எஸ். ராஜேந்திரன் (விநாயகம் மருத்துவமனை, 74ஏ தானப்ப முதலிதெரு, மதுரை 625 001)அவா்களிடம் மருத்துவம் செய்வதற்காக சென்றோம். அங்கு இரத்த பாிசோதனை செய்தாா்கள். பிறகு டாக்டா்.எஸ். ராஜேந்திரன் பாிசோதனை செய்துவிட்டு கோலன்ஸ்கோப்பி [...]

முழு மனுவைப் பார்க்க »

எனது தாயாருக்கு புற்று நோய் இருப்பதாக டாக்டர் திலகவதி (ஜே.ஜே. மருத்துவமனை 785, அண்ணாநகர், மதுரை) தகவல் தந்தார்கள். அதை அடுத்து டாக்டர் மோகன் பரசாத் (புற்று நோய் சிறப்பு மருத்துவர்) இடம் சென்றபோது அவர் பாிசோதனை செய்துவிட்டு புற்றுநோய் இருப்பதாக கூறியும் மேலும் அதன்பிறகு மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திாியில் பாிசோதனை செய்தபோது புற்றுநோய் இல்லை என்று கூறினார்கள். எனவே எனது தாயார் மிகவும் மன உளச்சலுக்கு உள்ளானார்கள். இவ்வாறு மக்களை ஏமாற்றி நோய் இல்லாததை இருப்பதாக பாிசோதனை செய்தபின்பும் கூறி மன உளச்சலை உண்டாக்குகிறார்கள். இதனை தாங்கள் விசாாித்து தக்க நடவடிக்கை எடுகக் கேட்டல்.

அனுப்புநர் :எல். செல்லத்துரை தா.பெ எல்.பாப்பா அம்மாள் (வயது 77) 26 செம்பி கிணற்று தெரு, வடக்கு மாசி வீதி மதுரை 625 001. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது தாயாருக்கு ஆசன வாயினில் இரத்தம் கசிவு இருப்பதற்கு வைத்தியம் செய்வதற்காக தானப்ப முதலித்தெருவில் உள்ள விநாயக மருத்துவமனையில் டாக்டர் எஸ்.ராஜேந்திரன் இடம் சென்றோம். அங்கு கோலஸ்கோபி டெஸ்ட் செய்து, டிஸ்யுவை எடுத்து பையாப்ஸிக்கு சோதனைக்கு டாக்டர் திலகவதி ஜே.ஜே.மருத்துவமனைக்கு அனுப்பினார். அவர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இரா.செல்வக்குமார் மற்றும் கிராம பொதுமக்கள், வாசுகி தெரு, தேனூர்,மேற்கு ஊராட்சி ஒன்றியம், வடக்கு தாலுகா. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா, மேற்கு ஊராட்சியை சேர்ந்த தேனூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தில் சுற்றுசுவர் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் குடியிருக்கும் தலித் இன மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக ஆழ்குழாய் கிணறு உள்ளது. இப்பணி மேற்கொள்ளப்படுவதால் ஆழ்குழாய் கிணறு மூடப்படும். மக்களுக்கு தண்ணீருக்கு சிரமப்படும் நிலை உருவாகி விடும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் ஊர் துணை சுகாதார நிலையத்தில் சில ஆண்டுகளாக செவிலியர் இருப்பதில்லை.இங்கு செவிலியர் தங்குவதற்க்கு அரசு தங்குமிடம்,மின்சாரவசதி ஆகியவை செய்து கொடுத்துள்ளது.ஆனால் எங்கள் ஊரில் பணிபுரியும் செவிலியர் இங்கு தங்குவதில்லை,இங்கு உள்ள கர்ப்பினி பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதில்லை,தாங்கள் எங்கள் ஊருக்கு செவிலியரனுப்பி உதவுமாறு மிகவும் பணிவுடன் கேடடு கொள்கிறோம். நன்றி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மோ.முத்தம்மாள், க-பெ.மோஸஸ், ஆதிதிராவிடா் காலனி, தேனுார் ஊராட்சி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மேற்காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் இந்து-பறையா் வகுப்பைச் சார்ந்தவா்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு குடியிருந்து வருகிறோம். தற்பொழுது எங்கள் வீட்டின் முன்பு சுமார் 11/2 அடி இடம்விட்டு துணை சுகாதார நிலையத்திற்கு சுற்றுசுவா் கட்டப்படுகிறது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மா.மீனாட்சி, க-பெ.மாரியப்பன்(லேட்), ஆதிதிராவிடா் காலனி, தேனுார் ஊராட்சி. மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன். நாங்கள் இந்து பறையர் வகுப்பைச் சார்ந்தவா்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு குடியிருந்து வருகிறோம். தற்பொழுது எங்கள் வீட்டின் முன்பு சுமார் 11/2 அடி இடம்விட்டு துணை சுகாதார நிலையத்திற்கு சுற்று [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மோதிலால் நேரு இ.வ.பொ.இ.ச.இ தனிச்சியம் அஞ்சல்இ வாடிப்பட்டி வட்டம்இ மதுரை மாவட்டம். கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை.   அய்யா தனிச்சியம் கிராமத்தி்ல் செயல்பட்டுவந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது செயல்படாமல் உள்ளது. செவிலியர்களும் நிலையத்தில் தங்குவதே இல்லை. எனவே நிலையத்தில் தங்காத செவிலியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அரசு துணை சுகாதார நிலையம் செயல்படவும் தகுந்த நடவடிக்கை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : இரா.ஜெயலெட்சுமி, கஃபெ.பி.இராமசாமி, டி.இராமநாதபுரம், அஞ்சல், பேரையுா் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மதுரை மாவட்டம், பேரையுா் வட்டம், திருமாணிக்கம் பஞ்சாயத்து உட்கடை டி.இராமநாதபுரம் கிராமத்தில் வசிக்கிறேன். நான் டி.ராமநாதபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்தேன். அங்கு கடமையைச் செய்ய விடாமல் என்னை டாக்டா் தங்கராமு என்பவா் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். நான் தற்போது மிகவும் சிரமப்படுகிறேன். எனது குடும்பம் வறிய நிலையில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்.மதுரை மாவட்டம்,சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்,சின்னக்கட்டளை ஊராட்சியில் மொத்தம் 901 வீடுகள் உள்ளது சுமார் 2570 மக்கள் தொகை கொண்டது எங்கள் ஊராட்சிக்கு பொதுமக்கள் நலன் கருதி துணை சுகாதாரநிலையம் அமைக்குமாறு பணியுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் செவிலியர் சின்னக்கட்டளை கிராமத்திற்கு மட்டும் தனியாக போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பெரியபட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா. வணக்கம் . மது‌ரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டி ஊராட்சி காஞ்சரம்பேட்டை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் சுமார் 500 புற நோயாளிகள் பயன் பெறுகின்றனர் மாதம் சுமார் 35 பிரசவங்கள் நடைபெறுகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதியுடன் கட்டிடம் கட்டித்தருமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212