மனு எண்:

'EE (டுவாடு)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:9  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:9  

அனுப்புநர்: தலைவர் அம்பலகாரன்பட்டி, மேலூர்ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அம்லகாரன்பட்டி கிராம‌த்தில் அமைந்துள்ள அரசுபல்வகை தொழில்நுட்பக்கல்லூரியில் சுமார் 700 மாணவர்கள் பயில்கின்றனர்.மாணவர்கள் குடிநீர் தேவைக்காக சுமார் 2கி.மீ சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.மாணவர்கள் சிரமத்தை போக்க புதிய போர்வெல் போட்டு 60,000லி கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைத்துத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி தங்கள் உண்மையுள்ள தலைவர் அம்பலகாரன்பட்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மதிப்பனூர் கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பனூர் ஊராட்சியில் உள்ள 8 உட்கடை கிராமங்களுக்கு கடந்த ஒரு மாதமாக வைகை கூட்டு குடிநீர் திட்டதின் மூலமாக குடிநீர் வரவில்லை,மேட்டுப்பட்டிலிருந்தாவது குடிநீர் வழங்க கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பெரியபட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌பெரியபட்டி ஊராட்சி காஞ்சரம் ‌பேட்டை கிராமம் எம்.பி்.ஆர் இராஐலெட்சுமி நகரில் புதிய மினி டேங் அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஐயா !

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வேளாம்பூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது ஊராட்சி உட்கடை கிராமமான வி.குச்சம்பட்டி கிராமத்தில் ஏற்கனவே 15000 லிட்டர் நீர்நிலை தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.த‌ற்பொழுது இந்த நீர்நிலை தேக்கத்தொட்டியிலிறருந்து எங்களது கிராமமக்களுக்கு (மக்கள் தொகை 1860) போதுமான குடிநீர் வழங்க இயலாத காரணத்தினால் எங்களது கிராமமக்களுக்கு 60000 லிட்டர் ஓ.எச்.டி டேங்க் கட்டுவதற்கு ஆவண செய்து தருமாறு மிகவும் பணிவுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செட்டியார்பட்டி கிராமம், தும்பைப்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தும்பைப்பட்டி ஊராட்சியின் செட்டியார்பட்டியில் சுமார் 45 குடும்பங்கள் உள்ளது. எங்கள் ஊரில் போர் மற்றும் OHT டேங் இருந்து பயன்பாட்டில் இல்லை. அதனால் ஊர் அருகில் போர் அமைத்து டேங் கட்டி தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தாமரைப்பட்டி கிராமம், தும்பைப்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தும்பைப்பட்டி ஊராட்சி, தாமரைப்பட்டி வடக்கு தெருவில் தண்ணீர் வசதி குறைவாக உள்ளது. அதனால் எங்கள் தெருவில் மட்டும் OHT டேங் அமைத்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் . சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சின்னக்கட்டளை ஆதிதிராவிடர் காலனியில் 30 ஆயிரம் கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி 1 வருடம் முன்பு கட்டப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த மேல்நிலை தொட்டிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தலைவர் சின்னக்கட்டளை ஊராட்சி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கட்டக்கருப்பன்பட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கட்டக்கருப்பன்பட்டி கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை சமாளிக்க கூடுதலாக 30000 லீட்டர் கொள்ளலவு கொண்ட மேல் நிலைத்தண்ணீர் தொட்டி கட்டித்தரும்படி கேட்டுக்கொள்கிறாம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கூடக்கோவில் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, 1.ஒத்தவீடு பகுதியில் ஒரு மேல்னிலைத்தொட்டி. 2.K.கிருஷ்ணாபுரம் பகுதியில் சத்துணவுகூடம். 3.ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஒரு மேல்னிலைத்தொட்டி. நன்றி

முழு மனுவைப் பார்க்க »