மனு எண்:

'செயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:9  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:9  

அனுப்புநர் :திரு.கே.கருப்பசாமி, த-பெ.கூடலிங்கம், 12, வாசுகி தெரு, அவனியாபுரம், மதுரை-12 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை, அவனியாபுரம், 12 வாசுகி தெருவைச் சோ்ந்த திரு.கே.கருப்பசாமி என்பவா் தனக்கு வீடு எதுவும் இல்லையாதலால் தனக்கு இராஜாக்கூா் திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கக் கேட்டல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.என்.ராஜேஸ்வரன், பிளாட் எண்.17, தந்தை பெரியார் 2வது தெரு, அண்ணாநகா், மதுரை-18 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்படி அண்ணாநகா், பாத்திமா கல்லூாரி எதிர்புறம் உள்ள அண்ணாநகா் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முழுமையான வரி செலுத்திய பின்பும், நீண்ட காலமாக பட்டா வழங்கவில்லை. பலமுறை முயற்சித்தும் பலனில்லை. ஆகவே, மேற்கண்ட பகுதிக்கு பட்டா வழங்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஏ.ரத்தினவேல், த-பெ.(லேட்)ஆண்டிசெட்டியார், செல்லையாநகர் 1வது தெரு,11-1-7 கூடல்நகர்,மதுரை-18, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள ஒரு பரம ஏழை(எண்.38836) வயது 70. கூலி வேலை செய்து வருகிறேன். மதுரைமாவட்ட ராஜாக்கூாில் ஜவஹர் திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் ஒரு வீடு கேட்டு முதல்வர் அவர்களுக்கும் தங்களுக்கும் விண்ணப்பித்திருந்தேன். அம்மனு தங்களுக்கு அனுப்பியுள்ளதாக பதில் வந்துள்ளது. எனவே எனக்கு ராஜாக்கூர் அல்லது வேறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி. ரவிக்குமாா் த.பெ. லேட் போஸ் 3/120 கே.எம். காலேஜ் தெரு உத்தங்குடி வாா்டு எண் 28/120 மதுரை மாநகராட்சி மதுரை வடக்கு வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேற்கண்ட முகவாியில் குடியிருந்து வருகிறேன். மிகவும் ஏழை. எனக்கு வடக்கு வட்டம் ராஜாக்கூா் அல்லது இடையபட்டி கிராமங்களில் உள்ள குடிசை மாற்று வாாியம் அமைந்துள்ள ஊா்களில் வீடு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கே.ஜெ. சாந்தாராம், த-பெ‌. கே.ஆர்.ஜெயராம், 14-ஏ மணிமேகலை தெரு, (வாசுகி தெரு) கணபதி நகர், வில்லாபுரம், மதுரை-12. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் வசிக்கும் 150 பேர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் எங்களுக்கு அவனியாபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள காலியாக உள்ள தொகுப்பு வீடுகளில் வீடு ஒதுக்கீடு செய்து தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சாந்தாராம் த-பெ ஜெயராம் 14ஏ மணிமேகலை தெரு கணபதி நகர் வில்லாபுரம் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா என்னுடன் சேர்த்து மொத்தம் 135 நபர்கள் மேற்கண்ட பகுதியில் சொந்த வீடுகள் இல்லாது குடியிருந்து வருகிறோம். ஏற்கனவே பலமுறை மனு கொடுத்துள்ளோம். எனவே தாங்கள் தயவு செய்து குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நிரந்தரமாக வீடுகள் கட்டித்தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு பொதுமக்கள் சார்பாக சாந்தாராம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கே.ஜே.சாந்தாராம், மணி‌மேகலை நகர், கணபதி நகர், வில்லாபுரம், மதுரை – 12. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வில்லாபுரம் மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் வாழும் மனுவில் கண்ட நபர்களுக்கு வீடுகள் வழங்குவது தொடர்பாக பலதடவை மனுச் செய்துள்ளோம். எனவே தயவு செய்து எங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இலவச வீடுகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு கே.ஜே.சாந்தாரம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம்.பி.சேது(எ)எம்.சேதுமாதவன் 37 முதல் பாப்டிஸ்ட் சர்ச் தெரு புது எல்லீஸ் நகர் மதுரை.10 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். நான் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறேன். எனது தந்தை முன்னாள் இராணுவ வீரர் ஆவார். அதற்கான ஆதாரங்கள் வைத்துள்ளேன். ஆதலால் ராஜாக்கூரில் கட்டி முடித்துள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏதேனும் ஒரு வீடு வழங்கி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கே. லதா க-பெ ஆர் கேசவன் பழனியாண்டி செட்டியார் கண்ணத்தா காம்பவுன்ட் நேதாஐி நகர் யா. ஒத்தக்கடை மதுரை பெறுநர்: பொது மேலாளர் குடிசைமாற்று வாரியம் மதுரை அய்யா நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்துவருகிறேன் . நான் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன் எனக்கு ராஐாக்குரில் உள்ள குடிசைமாற்று வாரியத்தில்கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »