மனு எண்:

'EE(PWD Periyar Vaigai Basin)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:7  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:7  

அனுப்புநர் :வி.ஆர்.பி.மோகன்ராஜ் , 3-5 பூக்காரத் தெரு, வடக்காவணி மூல வீதி மதுரை -1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். செல்லூா் ஓடைக்கரையில் உள்ள எனது பட்டா இடத்திற்கு செல்லும் பாதையை மறைத்து 1.வெள்ளைக்சாமி என்ற ராஜேந்திரன், 2.முத்துராமன் 3.மணிமுத்து 4.ராஜா ஆகிய நால்வரும் எங்கள் இடத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து இடத்திற்கு செல்ல விடாமல் இடையூறு செய்கிறார்கள் இவா்களுக்கு ஏற்கனவேஇடத்தை அகற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சரவணக்குமரன் தெற்குவாசல் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அன்புள்ள ஐயா, மதுரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பொழுதுபோக்கிற்க்கு இடம் இன்றி தவித்து வருவது உங்களுக்கு நன்கு தெரிந்ததே. விரகனூர் அணை அருகாமையில் அமைக்கப்பட்ட பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் உபயோகிக்க இயலாத நிலையில் உள்ளன. அது மட்டுமல்லாமல், அங்கே சமூக விரோதிகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். நன்றி. இவண் – சரவணக்குமரன் தெற்குவாசல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.பாரதிதாசன் ஒன்றிய விவசாய அணி இணைச்செயலாளா், வாடிப்பட்டி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், கச்சைகட்டி கிராமத்தில் உள்ள தோட்டம் அருகில் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீா்தேக்க தடுப்பணை கடந்தாண்டு பெய்த கனமழையால் அாிபு் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் 50 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே நீா்தேக்க தடுப்பு அணையை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆர் . ரகுநாத திருச்செல்வம் 1-275 குலமங்கலம் அஞசல் மதுரை 17 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா குலமங்கலம் கன்மாய் பெரிய மடை யிலிருந்து சர்வே எண் 29 ல் உள்ள கன்மாய் மற்றும் சர்வே எண் 58லிருந்து 70 வரை உள்ள பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளது மேற்படி வாய்க்காலை அளந்து சர்வே செய்து துார்வாரி பாசனத்திற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. எங்களது ஊராட்சியில் மஞமலை என்ற காட்டாறு ஓடுகிறது அதில் மழைகாலங்களில் வரும் தண்னீர் வீணாக எங்களது ஊருக்கு பயன்படாம்மல் செல்லுகிறது எனவே ஆற்றின் குருக்கே சிரிய தடுப்பு சுவர் அமைத்தால் ஆற்றில் வரும் தண்ணீர் கண்மாய்க்கு செல்லும் இதனால் கண்மாய் நிரம்பி நிலத்தடி நீர் உயர்வதுடன் விவசாயிகள் பயன்பெருவார்கள் எனவே [...]

முழு மனுவைப் பார்க்க »

மதுரை மாநகரின் மாதிரி நகரமாக திட்டமிடப்பட்டுள்ள எங்களது ஜே.ஜே. நகர் / கூடல்புதூர் பகுதிக்கு அருகாமையில் பாசனப் பயன்பாடின்றி உள்ள தத்தனேரி கண்மாயின் மீதமுள்ள 45.34 ஏக்கர் காலி நிலப்பரப்பில், அதிகபட்ச மழைநீர் சேமிக்கும் வகையில் கரைகள் பலப்படுத்தி, சுற்றிலும் மரக்கன்றுகள் வைத்து சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீர் வளத்தையும் பாதுகாப்பதற்குரிய விரைவு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்வதற்கு ஆவன செய்திடுமாறு வீட்டு உரிமையாளர்கள் பொதுநலச் சங்கம், கூடல்புதூர் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறது.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கோவில்பாப்பாகுடி கிராமம், கோவில்பாப்பாகுடி கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். வரத்து வாய்க்கால் சீர் செய்து தர வேண்டும்.

முழு மனுவைப் பார்க்க »