மனு எண்:

'EE (பொதுப்பணித்துறை)Gundar Div' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: தலைவர் ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சி, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சியில் உள்ள கிருதுமால் நதி வாய்க்கால் துார்வாரப்படாமல் உள்ளதால் வரத்து நீர் செல்வதற்கு தடையாக உள்ளது. எனவே இவ் ஊராட்சி பகுதியில் செல்லும் கிருதுமால் நதி வாய்க்காலை துார்வாரித் தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வண்டப்புலி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் சதுரகிரி மலையில் இருந்துவரும் வரத்துக்கால்வாயில் வண்டப்புலி,குடிப்பட்டி,கேத்துவார்பட்டி,ஜம்பலப்புரம்,குப்பல்நத்தம், திரளி ஆகிய கண்மாய்களுக்கு பயன்பெறும் பாசனநீரில் அணைக்கரைப்பட்டி அருகில்சமரணை கட்டப்பட்டுள்ளது.இந்தகால்வாய் மூலம்பயன்பெறும் நீரினைக்கொண்டு விவசாயம் முக்கியத் தொழிலாக நடைபெறுகிறது.இந்த கால்வாயில் கட்டப்பட்டுள்ள சமரணையை இரவோடு இரவாக 29.11.11 அன்று சலுப்பட்டி கிராம மக்கள் கடப்பாறை,சம்மட்டி ஆகிய பொருட்களை கொண்டு மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வராமல் உடைத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வி். கண்ணன் த-பெ கே. வீரணன் தனிச்சியம் அஞ்சல் வாடிப்பட்டி தாலுகா மதுரை 625221 பெறுநர்: உதவி செயற்பொறியாளர் பொதுபணித்துறை அய்யா வாடிப்பட்டி வட்டம் தனிச்சியம் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது .நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை பலமுறை போராடியும் அகற்றமுடியாததால் ஆட்சியர் அவா்கள் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி வடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன் பொது பணித்துறை எச்சரிக்கை கடிதம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆணை பஞ்சாயத்து ஆணை மூன்றும் உள்ளது இதன்மீது உரிய நடவடிக்கை கோருதல்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம்,பேய்க்குளம் கண்மாய் மதகு பழுதடைந்து விட்டதால், மழை காலம் ஆரம்பமாகி விட்டது. எனவே அய்யா கண்மாயில் மதகை சரிசெய்தால் தான் தண்ணிர் நிற்க்கும்,100 எக்கர் நெல் விவசாயம் செய்ய முடியும் என்வே அய்யா என்கள் கிராம்மதின் கண்மாயில் மதகை உடனடியாக தாங்கள் ஆனையிட்டு பராமரித்து உதவிடுமாறு கேட்டுகோள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »