மனு எண்:

'துணை மேலாளர் டாஸ்மாக்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:12  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:11  

அனுப்புநர் :த.பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்றத் தலைவா், வரிச்சியூர் கிராமம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வரிச்சியூர் கிராமம் மதுரை-சிவகங்கை சாலையில் அரசு மதுபானக்கடை வரிச்சியூர் பஸ் நிறுத்தத்தில் இருப்பதால் பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் பஸ்ஸில் ஏறமுடியாமல் அவதிபடுகின்றனர். மேலும் சமூக விரோதிகளால் தொந்தரவு ஏற்படுகிறது. இரவுகளில் ரோட்டில் வழிமறித்து கொள்ளையடிப்பதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் செய்வதால் மேற்படி கடையினை அகற்றும்படி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமன், குட்டிமேய்க்கிபட்டி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. ஐயா, எங்கள் அலங்காந‌ல்லூரில் உள்ள டாஸ்மாக்கில் விலை அதிகமாக விற்பனை செய்கின்றானர்.அதாவது ஒரு குவாட்டரின் விலையை விட கூடுதலாக ரூ5 /ம், ஆப் பாட்டிலின் விலையை விட கூடுதலாக ரூ 10/ம் வாங்குகின்றானர்.கேட்டால் அப்படிதான் விற்போம் என்று சொல்கின்றானர். தயவு செய்து தாங்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடை வேரு ஊருக்கு மாறறப்பட்டது. தற்சமயம் மேற்படி கடையை எங்கள் கிராமத்திற்க்கு கொண்டுவர முயற்ச்சி செய்கின்றனர்.மேற்படி கடையால் எங்கள் கிராமத்தில் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலும் ஊர்சண்டையும் சாதி சண்டையுமாக நிறையவாய்ப்புள்ளது. தற்சமயம் எங்கள் ஊர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லமுறையில் உள்ளது. இதே நிலை தொடர [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :செங்கப்படை கிராம அனைத்து மகளிர் குழுக்கள், மற்றும் பொதுமக்கள், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. செங்கப்படை கிராமத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு அரசின் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், தாய்மார்களின் ஒருமித்த கருத்தாகும். ஏனென்றால் இதனால் ஏற்படும் இன்னல்களும் பொருளாதார சீரழிவும் சொல்லெனா துயரத்திற்கு தினம் தினம் ஆளாகி கொண்டுவருகிறோம். தினம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் குடும்பங்களில் குடித்துவிட்டு வரும் வருவாய் ஈட்டாளர்களா் அவர்களின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், டி. பழையூர் கிராமம், மேலுர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுக்கடையே கிராம மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கிறது. பள்ளியில் படிக்கும் இளைஞர்களிடன் எதிர்காலம் அதிகமாக பாதிப்படைகிறது. தற்போது இயங்கி வரும் மதுக்கடையால் பள்ளி மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பெரியளவில் பாதிப்படைந்து வருகிறது. பெண்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மற்றும் பஸ்நிறுத்தம், மசூதி இப்படி பல்வேறு மக்களுக்கு பெரும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ்.பழனியப்பன் த-பெ.சுப்பையா கோனார் (லேட்) 14, ரெங்கசாமி சோ்வை சந்து, வடக்காவணி மூல வீதி, மதுரை-1. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. கதவு எண். 94-1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் எனக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அமைய உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பார் அனுமதியை ரத்து செய்து உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் இரண்டு பத்திர நகலையும் இணைத்துள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு, எஸ்.பழனியப்பன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ் முருகன் த-பெ சிருவிழி வரிச்சியுா் அஞ்சல் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா வணக்கம் எங்கள் ஊரின் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையுறு செய்கின்றனா் அதனால் மேற்படி மதுபானக் கடையை மாற்றி பொதுமக்களுக்கு இடையுறு இல்லாமால் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ் முருகன் த-பெ சிருவிழி வரிச்சியுா் அஞ்சல் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மோதிலால் நேரு தனிச்சியம் அஞ்சல் வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம் அ.கு எண் 625 221 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அன்னை தமிழக மாநிலத்தில் மக்கள் போதையால் சீரழிவதை தடுக்க எனக்கு தொிந்த கருத்துக்களை தொடுவானத்தின் மூலம் மனு எண் 7508 தேதி 28.11.2011 கொடுத்தேன். இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. தொடுவானத்தில் சென்று பாா்த்தால் சாியாண எண்ணை உள்ளிடுக என தகவல் வருகிறது. எனது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சமயநல்லூர் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பாத்திமாநகர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைஎண் 5234 ல் எல்லா மதுபானங்களுக்கும் சுமார் ரூ10 முதல் ரூ20 வரை கூடுதலாக விற்கின்றனர் ஏன் என்றால் அப்படித்தான் விற்போம் என்று கூறி அடியாட்கள் மூலம் மிரட்டுகின்றனர். தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212