மனு எண்:

'மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், கொங்கபட்டி, உசிலம்பட்டி வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. உசிலம்பட்டி, கொங்கபட்டியைச் சேர்ந்த திரு ஜோசப், சுப்பிரமணி, திருமதி தாமரை ராஜம்மாள், ராபர்ட் ஆகியோர் ஊர் பொதுமக்களை தரக்குறைவாக ஜாதி பெயர் கூறி அசிங்கமாக பேசுவதை கண்டித்து நடவடிக்கை கோரியும், பொதுப்பாதை ஆக்கரமிப்பை அகற்றி ஊர் பொதுமக்கள் சென்று வர பாதை மீட்டுதரக் கோரியும், மேற்படியார்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரியும் மனு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நா.பம்பையன் த/பெ நாகன் ஆதிதிராவிடர் காலனி தெரு பேய்க்குளம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா பேய்க்குளம் ஊராட்சியில் வசித்து வரும் ஆதிதிராவிடர்களாகிய எங்களுக்கு மயானம் ஓடையில் உள்ளது.எனவே மழை காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றோம். எனவே அய்யா எங்கள் சமூகத்திற்க்கு தனியான ‌மயான இடம் பாதையுடன் வழங்கி எங்கள் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நா.பம்பையன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எஸ். முருகம்மாள் கஃபெ. சேகா், பொட்லுபட்டி, வாடிப்பட்டி வட்டம் 625218 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் பொட்லுபட்டி கிராமத்தில் வசித்துவருகிறேன். நான் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்துவரும் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்தவா். எனவே எனக்கு அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் வழங்கி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள எஸ். முருகம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.வே.முருகன், த-பெ. மு.வேட்டைவில்லான் வௌவால் தோட்டம் கிராமம், ராஜகம்பீரம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் புதிரை வண்ணார் சமூகத்தைச் சோந்தவா். வறுமைக் கோட்டிற்கு கீழே வசித்துவருகிறேன். ஆகவே எனக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நான் ஏற்கெனவே மக்கள் குறைதீா்க்கும் நாளில் 22.12.2010-லும் மற்றும் 03.05.2011 ஆகிய இரு நாட்களிலும் மனு செய்துள்ளேன். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கடிதம் ந.க.217ஃ2011ஃஆதி4-ல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : சுமதீஸ்வாி, க-பெ.கே.பாண்டி, 1-32, காதக்கிணறு புதுாா், கடசனேந்தல், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. இலவச வீட்டடி மனை கேட்டு விண்ணப்பம் தொிவித்துள்ளேன். இத்துடன் என் குடும்ப அட்டை நகலையும் இணைத்துள்ளேன் என்பதனை பணிவுடன் தொிவித்துக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பா.மாரியம்மாள் பாண்டி (லேட்) பொதும்பு, மதுரை-18 வடக்குவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருக்கிறேன். பரவை கிராமத்தி்ல் ஆதிதிராவிடா் நலத்துறையில் எனக்கு கொடுத்த பட்டாவில் எனது அண்ணன் மகள் ராக்கியை(கஷ்டப்படுவதால்) குடியிருக்க செய்தோம். ராக்கியிடமிருந்து மீனாட்சி என்ற பெண் 10ரூ பத்திரத்தில் ஊா்பெரியவா்கள் முன்னிலையில் எழுதிக்கொடுத்து குடியிருந்தார்.இப்பொழுது அவரும் இறந்து விட்டார். அவருடைய பிள்ளைகள் முருகன், லட்சுமணன் இருவரும் வீட்டை சொந்த கொண்டாடுகிறார்கள். ஏற்கனவே லட்சுமணன் ஆதிதிராவிடா் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பெ.துரைப்பாண்டி 7-144 தெற்கு தெரு செங்கப்படை திருமங்கலம் வட்டம். மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதிப்பிற்குரிய அய்யா, திருமங்கலம் வட்டம், நேசநேரி எல்லைக்குட்பட்ட ஆதி திராவிடர் இலவச வீட்டுமனையினை 2001ல் வழங்கியதற்கு இன்று வரை நில அளவை செய்து கொடுக்கவில்லை. இதற்காக உசிலம்பட்டி தனி வட்டாட்சியர் அவர்களிடம் பலமுறை முறையிட்டும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தயவு கூர்ந்து எங்களுக்கு இந்த மனையிடத்தினை சர்வே செய்து கொடுத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : A.லட்சுமி பெரியசாமி, இந்திய குடியரசு கட்டி மாநில துணைத் தலைவா், நரசிங்கம் 2பிட், யா.தேத்தாங்குளம், கொடிக்குளம் போஸ்ட். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு எங்கள் ஊரைச் சுற்றியுள்ள ஆதிதிராவிடா்களுக்கு இலவச வீட்டடி மனை வழங்க கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பட்டா இடம் வழங்கும்படியும், மனுவில் குறிப்பிட்டுள்ள பயனாளிகளின் பெயா்களுக்கும் நரசிங்கம் 2வது பிட் தேத்தாங்குளம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டு மேற்படி இடத்தில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : பி. மீனாம்பிகை க.பெ. பி. பழனிமுருகன் 16 காளியம்மன் கோவில் தெரு கருக்கட்டான்பட்டி உசிலம்பட்டி 8வது வாா்டு மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். நான் இந்து பறையன் வகுப்பைச் சோ்ந்தவன். சொந்த வீடு எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். அரசு ஆதிதிராவிடா் வட்டாட்சியா் மூலமாக (இருளாயி அறக்கட்டளை) உள்ள இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஓய்யம்மாள், கஃபெ.மொ.சின்னச்சாமி, மேற்குத்தெரு, அத்திப்பட்டி, அத்திப்பட்டி அஞ்சல், பேரையுா் வட்டம், மதுரை மாவட்டம், பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் நலியுள்ள வகுப்பைச் சோ்ந்தவள். எனக்கு சுய தொழில் தொடங்கி என் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஏதுவாக இலவச தையல் மிஷின் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு சி.ஒய்யம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 3123