மனு எண்:

'காவல்துறை ஆணையர், மதுரை நகர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:33  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:32  

அனுப்புநர் :கே. சுப்புலெட்சுமி த-பெ கே. எஸ் பழனி 3-190கே. எஸ் .பி இல்லம் கப்பலுார் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வணக்கம் எனது தகப்பனாரைஅண்ணாநகா் காவல் நிலைய அதிகாரி எந்த வித விசாரணையும் செய்யாமல் காவலில் ்வைத்துள்ளனா்.எங்களது கடையை காலிபண்ணச்சொல்லியும் வியாபாரம் நடத்தக்கூடாது என்று மிரட்டியும் காவல் துறை அதிகாரிகள் தொந்தரவு செய்கின்றனா். தற்போது எனது தந்தையை காவலில் வைத்துள்ளனா் எனவே எனது தந்தையை விடுவிக்க வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி.ஐெயபிரபாவதி க-பெ பாலமுருகன் 5 கோவிந்தன் செட்டி சந்து சிம்மக்கல் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா நான் மதுரை மூலக்கரை பஸ் நிறுத்தம் ்அருகில் உள்ள எனது நிலம் சர்வே எண் 23-5 எயில் உள்ள காலிமனையிடத்த மதுரை பசுமலையைச் சேர்ந்த சுப்புலெட்சும் மற்றும் மகாதே வன் என்பவர்கள் இரண்டாவதாக போலிப்பத்திரம் பதிந்து எங்கள் இடத்ததை அபகரித்துள்ளனர். எனவே மேற்படி நிலத்தை வீடு கட்டுவதற்காக அவர்களிடமிருந்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஜி. கோவிந்தராஜ், த/பெ. ஏ. கோபால், 201/பி. ரெயில்வேகாலனி, மதுரை 625 016. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் கடந்த சனவரி மாதம் தென்மேற்கு இரயில்வே உதவி ஓட்டுனர் வேலைக்கு தேர்வாகி பயிற்சி மேமாதம் 7-ந்தேதியுடன் முடிக்கப்பட்டு விட்டது. பயிற்சி காலம் முடிக்கப்பட்டும் நாளது தேதிவரையில் முன்னுரிமை அடிப்படையில் எனக்கான உத்தரவு கிடைக்கப்பெறாததினால் முன்னுரிமை, விடுமுறை சலுகை மற்றும் ஊதியம் எதுவும் கிடைக்கப்பெறாத காரணத்தினால் மன உளைச்சல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : முத்துப்பிள்ளை ராஜ்ஆசாரி காம்பவுண்ட் மாட்டுக்காரத் தெரு செல்லுர் மதுரை ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேலகண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் நான் இராளுவத்தில் 15 ஆண்டுகலாக பணியாற்றி ஒய்வு பெற்றேன் தற்போது எனது குடும்பத்தார்கள் அனைவரும் என்னை அசிங்கமாக பேசி அடிக்க வருகிறார்கள் மேலும் சாப்பாடு போட மறுக்கிறார்கள் எனது பென்சன் பரித்துக் கொள்கின்றனர் ஆதலால் தக்க நடவடிக்கை எடுக்க [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.கே.எஸ்.அய்யம் பெருமாள், மனை எண்.11, தாமிரபரணி தெரு, வேல்முருகன் நகா், பைபாஸ் ரோடு, மதுரை-16 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, 06.12.2009 முதல் 11.12.2011 முடிய மதுரை பைபாஸ் ரோடு, வேல்முருகன் நகா் குடியிருப்போர் நலச்சங்கத்தில் பொறுப்பிலிருந்த சங்கச் செயலாளா் திரு.ஜி.சிட்டிபாபு மற்றும் சங்கப் பொருளாளா் திரு.ஆா்.ராம கிருஷ்ணன் ஆகிய இருவரும் சங்கப்பணத்தை வங்கியில் செலுத்தாமல் அவா்களது கையில் வைத்து தன் இஷ்டம் போல் செலவு செய்திருக்கிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மேரிலீலா பாத்திமா   க-பெ அழகு(லேட்)   காமாட்சிநகர்   பழையவிளாங்குடி ரோடு      மதுரை. தற்போதைய முகவரி      c/o.ஆர்.பேபிராஜன், 6இ, புதுமகாளிப்பட்டி ரோடு, மதுரை.1. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பழைய விளாங்குடி ரோடு,    காமாட்சி நகர்   முகவரியில் நான் முன்பு குடியிருந்தேன்.  10 வருடங்களாக  நான் அந்த வீட்டை  சிந்தாமணிநாடார் மனைவி விஜயா என்பவருக்கு ரூ.18000-க்கு ஒத்தி வைத்து பணம் வாங்கியிருந்தேன். அவர்கள் மராமத்து பார்த்த வகையில் செலவு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மித்ரா,எஸ். க/பெ.வே.வல்லையப்பன், க.எண்.18 1வது மாடி, 1வது தெரு, ராம்நகர், பைப்பாஸ்ரோடு, மதுரை 625 010 செல்போன் எண்.9842166533 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான், மதுரை பல்கலைநகரில் 3வது வடக்குத்தெருவில் இருக்கும் கதவு எண்.2/216, 2/217, 2/218, 2/219 மற்றும் 2/220 உள்ள வீடுகள் எனது சகோதரி கோகிலவாணி என்பவருக்குச் சொந்தமானது. எனது சகோதரி 22.06.2010ம் தேதி இறந்து விட்டார். மேற்படி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் திரு.சுதாகர் என்பவர் மேற்படி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எல். சுந்தரராஜன் மதுரை (பொது மக்கள் சாா்பாக) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம், அண்ணா பேருந்து நிலையத்தில் திருவள்ளுவா் சிலை அருகில் வாகன நொிசல் அதிகமாக உள்ளது. காலை நேரங்களில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்பவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் அஞ்சலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், எம்.ஏ.வி.எம்.எம். பள்ளி மற்றும் மருத்துவக்கல்லுாாி போன்ற முக்கிய இடங்கள் அமைந்திருப்பதால் மக்கள் அடா்த்தி அதிகமாக உள்ளது. இந்நிலையில் நான்கு திசைகளிலும் இருந்து வாகனங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.கே.ஜெயசீலன் மேனேஜிங்டிரஸ்டி, மற்றும் பக்தா்கள், நிர்வாகிகள். 3-329 கிருஷ்ணா நகா் 2வது குறுக்குத் தெரு, திருப்பாலை, மதுரை-14 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, தல்லாகுளம் நவநீதன்கிருஷ்ணன் கோவிலில் தட்சணையை எதிர்பார்த்து வேலை பார்க்கும் அா்ச்சகா் கண்ணன் என்பவா் நிர்வாகத்தின் ஒரு பிரிவினரை சேரத்துக் கொண்டு காவல் துறை மூலம் பொய்புகார் கொடுத்து எங்களை துன்புறுத்துகின்றார்கள். இதன் காரணமாக கோவில் நடை சாற்றப்பட்டதால் காவல்துறையினா் மக்களையும், பெண்களையும் துன்புறுத்துகிறார்கள். மேற்படி மூத்த குடிமகனான [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ.முருகன், த-பெ.ஆண்டியப்பன் (லேட்) முடுவார்பட்டி வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் பிழைப்புக்காக மதுரை கீழவாசல் அருகில் கோல்டன் பிளாசா காம்ப்ளக்ஸில் கொய்யாப்பழ வியாபாரம் செய்து வருகிறேன். பக்கத்துக் கடைக்காரா் வக்கீல் என்பதால் என்னிடம் மாமூல் கேட்டு மிரட்டி வருகிறார். இதனல் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு பிழைப்பு நடத்த முடியவில்லை. எனவே அய்யா அவா்கள் எனக்கு நியாயம் கிடைக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 41234