மனு எண்:

'ஆணையர், தொழிலாளர் நலநிதி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: அ. தங்கம்மாள் கீரிப்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது கணவர் திரு. அ. அய்யர்த்தேவர் இறந்தது தொடர்பாக மதுரை தொழிலாளர் அலுவலர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அவர்களிடம் விண்ணப்பம் செய்தேன். இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் எமது விண்ணப்பம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற விபரத்தை தங்களின் மேலான கவனத்திற்க்கு கொண்டுவருகிறேன். மேலும் இது தொடர்பாக பல முறை சம்மந்தபட்ட [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆனைமலை தேவர், த.பெ.மாயாண்டிதேவர், மேலதெரு,அக்கபட்டி கிராமம், நக்கலப்பட்டி, உசிலம்பட்டி மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நானும் என் மனைவியும் தமிழ்நாடு தொழிலாளர் நல மற்றும் சமூகப் பாதுகாப்பு பிரிவில் 1980 முதல் 2004 வரை சந்தா செலுத்தியுள்ளோம். என்அடையாள அட்டை எண்.832-2002.எம்.ஐ.எல்.ஆர். என். என் மனைவி அடையாள அட்டை எண்.834-2002 எம்.ஐ.எல்.ஆர்.என். விசாரணை செய்து நிவாரண நிதியிலிருந்து குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆவண செய்யுமாறு வேண்டுகிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சி.பெரியபொன்னன், த-பெ.சின்னபொன்னன், மாங்குளம் கிராமம்(அஞ்சல்), மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன். மாவட்ட தொழிலாளா் நலம் அதிகாரி அலுவலா் மூலம் உடல் உழைப்பு பணி செய்ய இயலாதவா் என்று வேண்டி மாத ஓய்வூதியம் வழங்கிடக்கோரி தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளா் வாரியம் மற்றும் சமூக பாதுகாப்பு பிரிவில் பதிவு பெற்ற உறுப்பினராக உள்ளேன். எனவே தாங்கள் ஓய்வூதியம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கு.குருசாமி, த-பெ.குட்டியப்பன், 36 கீரைதுரை மேலதோப்பு தாய்மானசாமிநகா் நாகம்மாள்மடம் மதுரை-1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக பி.எப். ரூ.10- வீதம் கட்டி ரசீது பெற்றுள்ளேன். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியம் சென்னை பதிவு எண்.22 எம்.எஸ்.ஓ.என்.-80461 யில் பதிவு செய்துள்ளேன். எனவே உடல்உழைப்பு பணி செய்ய இயலாத எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆவண செய்யுமாறு மிகபணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கு.குருசாமி.

முழு மனுவைப் பார்க்க »