மனு எண்:

'BDO – வாடிப்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:10  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:10  

அனுப்புநர் : பி. சுசிலா கஃபெ. பால்சாமி மற்றும் 44 நபர்கள் அய்யப்பநாயக்கன்பட்டி குருவித்துரை அஞ்சல் வாடிப்பட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த மக்களாகிய நாங்கள் வாடிப்பட்டி தாலுகா அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் 2007ஆம் வருடத்தில்  மன்னாடிமங்கலம் கிராமத்தில்  இலவச வீட்டுமனைப் பட்டா வாங்கி உள்ளோம். ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு இலவச வீடு கட்டித் தர [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி.பத்மாவதி, க-பெ. சேகர்,மற்றும் பொதுமக்கள், 97, ஏ, நாயுடு தெரு, கருப்பட்டி. வாடிப்பட்டி தாலுகா. மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வாடிப்பட்டி வட்டம், கருப்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் பிரமண சமுதாய மக்கள் மற்றும் நாயுடு சமூகத்தார் சார்பாக எங்கள் கிராமத்திற்கு சுடு கூறை கட்டித் தரவேண்டி, 27.6.2011, மற்றும் 23.1.2012 ஆகிய தேதிகளில் மக்கள் குறை தீரக்கும் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனுச்செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாலமுருகன்.மு திடிர் நகர் தெரு பாலகிருஷ்ணாபுரம் இரும்பாடி ஊராட்சி வாடிப்பட்டி வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌ஐயா வணக்கம் நான் இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருகிறேன் எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகி விட்டது 2 குழந்தைகள் எனக்கு குடி இருக்க வீடு இல்லை எனக்கு சொந்தமாக காலி இடம் இருக்கிறது அதில் தொகுப்பு வீடு கட்டி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் ‌கொள்கிறேன் இப்படிககு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :L.பாரதிதாசன் அ.இ.அ.தி.மு.க ஒன்றிய விவசாய அணி இணைச்செயலாளா் வாடிப்பட்டி மதுரை புறநகா் செல்-8124792653 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி கிராமத்தில் விவசாய விளை பொருட்கள் பெரிய வாகனங்களில் கொண்டு செல்லவும் இறந்தவா்களை ஏற்றிச் செல்லும் அமரா் ஊா்தி வாகனம் செல்லவும் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு கீழ்கண்ட இடங்களில் புதிய பாலம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 1. சுடுகாடு அருகில் உள்ள பாலம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் வா‌டிப்பட்டி ஒன்றியம் நாச்சிகுளம் ஊராட்சி நரிமேடு கிராமத்தில் மழைக்காலங்களில் மழை நீர் ஊருக்குள் வந்து வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பல விஷ பூச்சிகள் வந்துவிடுகிறது. மேலும் பல கொடுய நோய்களும் பரவுகின்றது. கழிவு நீர் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஊர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் நாச்சிகுளம் ஊராட்சி நாச்சிகுளம் கிராமத்தில் திண்டுக்கல் சோழவந்தான் சாலையில் கருப்பட்டி விலக்கில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அவ்விலக்கில் ‌பேருந்திற்காக நிற்கும் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ‌அவ்விடத்தில் நிழற்குடை அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஊர் பொதுமக்கள்,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், விராலிபட்டி கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. விராலிபட்டி கிராமம் சிவனாண்டி தோட்டமுதல் அய்யனார் கோவில் வரை தார் சாலை அமைத்து கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.சி.சந்திரன், யாதவா் தெரு, கச்க்கட்டி, வாடிப்பட்டி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வாடிப்பட்டி ஒன்றியம், கச்சக்கட்டி கிராமத்தைச் சோ்ந்த திரு.சி.சந்திரன் என்பவா் தனது குடும்பத்திற்கு சொந்தமான புல எண்.1748-20-ல் உள்ள இடத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த லேட்.வேலம்மாள் மகன்கள் திரு.மகேந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் பொய்யான தகவலை ஊராட்சிக்கு அளித்து அரசு தொகுப்பு வீடு கட்ட முயற்சிப்பதை தடுப்பது தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி. லெட்சுமி நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா எங்கள் ஊரில் கழிப்பறை சிமெண்ட் சாலை கழிவுநர் வாய்க்கால் போன்றவை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: து.‌சேது புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர், (ஐக்கிய விவசாயிகள் சங்கம்) சோழவந்தான். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். வாடிப்பட்டி வட்டத்திலுள்ள தென்கரை கண்மாய் துார் வராமல் இருப்பதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே மேற்படி கண்மாய் துார் வாரி கரைகளை வலுப்படுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு து.சேது

முழு மனுவைப் பார்க்க »