மனு எண்:

'BDO – திருப்பரங்குன்றம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:42  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:40  

அனுப்புநர்: எஸ். இராமசாமி 5-373/228 திருவள்ளுவர் நகர் தணக்கன்குளம் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எஸ். இராமசாமி ஆகிய நான் 5-373/228 திருவள்ளுவர் நகர் என்ற முகவரியில் வசித்து வருகிறேன்.எனது வீட்‌டின் கிழக்கு பகுதியிலும் மற்றும் மேற்கு பகுதியிலும் உள்ள நபர்களுக்கு தண்ணீர் வசதி கிடைத்துள்ளது. எனது வீட்டுற்கு மட்டும் தண்ணீர்வசதி செய்து தரப்படவி்ல்லை. இது சம்மந்தமாக தணக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நிலையூர் பிட்1 கிராமம், *(கைத்தறி நகர்)* திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம், ஊர் பொதுமக்கள், சார்பாக, 1. எங்கள் பகுதியில் சுகாதாரம் மிக மிக குறைவாக உள்ளது, குப்பை போட கூட வசதி கிடையாது. (குப்பை தொட்டி கிடையாது.) தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. 2. பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. சரியான நேரத்திற்கு பஸ் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: R. குமார், நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் நாகமலைபுதுக்‌கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் சித்தடிக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி பலமுறை புகார் செய்தும் வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனுஅடித்தும் நடவடிக்கை இல்லை. தாங்கள் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையை மேம்படச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு. எஸ்.ராஜீ, வட்டார வளா்ச்சி அலுவலர், (கிராம ஊராட்சி) ஓய்வு, திருப்பரங்குன்றம், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் எனக்கு 02ஃ2012 முதல் 03ஃ2012 ஆகிய மாதங்களுக்கு ஓய்வூதியம் வழங்கபப்டவில்லை. எனவே எனக்கு ஓய்வூதியம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மொ.பெரியசாமி த.பெ.மொக்கைச்சாமி மற்றும் கிராமப்பொதுமக்கள் வலையங்குளம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் மதுரை ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா நான் திருப்பங்குன்றம் ஒன்றியம் வலையங்குளம் கிழக்கு பகுதியில் வசிக்கிறேன்.வலையங்குளம் உயர் நிலை பள்ளியின் பின்புரம் உள்ள ஒடையின் வழியாகவே பொதுமக்கள் சென்று வந்தனர் இந்தநிலையில் 2009-10ம் ஆண்டு ஊராட்சி நிதியிலிருந்து முன்னாள் தலைவர் க.மு.முத்து அவர்களால் ரூபாய்ஒரு லட்சம் மதிப்பில் ஒடையின் தென்புறம் முத்தரையர் மக்களின் மயானம் முதல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர்,தோப்பூர் ஊராட்சி-மற்றும் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூர் கிராமத்தில் சுமார் 5யிரம் பேர் வசக்கின்றனர்.இப்பகுதியில் ஓரு 1 லட்சம் கொள்ளளவு உள்ள ‌மேல்நிலை ஒன்று உள்ளது. அதற்கும் போதிய நீர் ஆதாரம் இல்லை. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. நீர் ஆதாரம் ஆராய்ந்து ஆழ்குழாய் அமைத்து கூடுதலாக ஒரு மேல்நிலை தொட்டி ஒன்று [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரா.ஜெயக்குமார் ஊராட்சி மன்ற உதவி தலைவர் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூர் ஊராட்சி பகுதியில் மூன்று மேல்நிலை தொட்டிகள் உள்ளது. அதற்கு போதிய நீர் ஆதாரம் இல்லாததால் சிரான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு நீர்நிலை உள்ள இடங்களில் ஓன்றிய பொது நிதியில் இருந்து மூன்று ஆழ்குழாய் ‌அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஏற்குடி அச்சம்பத்து கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உயர்திரு கலெக்டர் சகாயம் அவர்களுக்கு எங்களது ஊரில் து.புதுக்குடி பஞ்ஜாயதுக்கு உட்பட்ட பகுதியில் பல காலமாக இருந்து வந்த க்ரிதுமால் நதி கால்வாய் காலபோக்கில் மண் மேடேரி கழிவு நீர் செல்கிறது. 2 வருடங்களுக்கு முன்பு அரசு பொது பணி துறை அதிகாரிகள் வந்து அந்த கால்வாய்யை தூர் வாரினார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அ. ஆதிவளவன் த.பெ. அம்மாவசி 1/69 ஆதி திராவிடா் காலனி (மற்றும் பொதுமக்கள்) சி. புளியங்குளம் மதுரை தெற்கு வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சி. புளியங்குளம் ஊராட்சியில் சா்வே எண் 90ல் கட்டப்பட்டுள்ள பொிய கண்மாய் பல ஆண்டுகளாக ஏலம் விடாமல் விலை மதிப்புள்ள பல்வகையான மரங்கள் உள்ளது. அவை அழிந்து போகும் நிலையில் உள்ளதால் கண்மாயில் உள்ள மரங்களை பொது ஏலம் விடுமாறும் கண்மாயினை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அ. ஆதிவளவன் த.பெ. அம்மாவசி 1/69 ஆதி திராவிடா் காலனி சி. புளியங்குளம் மதுரை தெற்கு வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி. புளியங்குளம் ஊராட்சியில் 1,2 ஆகிய வாா்டுகளில் சுமாா் 750 ஆதி திராவிடா் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் சுத்திகாிக்கப்பட்ட குடிநீா் கிடையாது. மற்ற வாா்டுகளில் சுத்திகாிக்கப்பட்ட குடிநீர்் வசதி உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவாிடம் கேட்டபோது சாியான பதில் கிடைக்கப்பெறவில்லை. எங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 512345