மனு எண்:

'BDO – திருமங்கலம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:19  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:18  

அனுப்புநர் :பி.சுந்தரபாண்டியன், த-பெ.ஏ.பாண்டி தெற்குத் தெரு உச்சபட்டி கப்பலூா் அஞ்சல், திருமங்கலம் தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்கள் ஊரின் மெயின்ரோட்டிலிருந்து தெற்குத் தெருவுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்தும், வட்டாட்சியா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பாதையில் சிமெண்ட் தளம் அமைத்துத் தருமாறு மிக பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி.சுந்தரபாண்டியன் தஃபெ. ஏ.பாண்டி தெற்குத் தெரு உச்சப்பட்டி கப்பலூர் போஸ்ட் திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் அருந்ததி வகுப்பைச் சேர்ந்தவன். ஏற்கெனவே திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஊராட்சி அவர்களிடம் பசுமை வீடு கொடுக்க சொல்லியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யான அறிக்கை சமர்ர்ப்பித்துள் ளார்க்ள. இதை புலனாய்வு மூலம் விசாரணை செயது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் , பொக்கம்பட்டி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பொக்கம்பட்டி ஊராட்சியில் சின்ன பொக்கம்பட்டி மற்றும் பெரிய பொக்கம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலிருந்து புதுப்பட்டி கிராமத்திற்கு செல்வதற்கு தற்போது வண்டிப்பாதை மட்டுமே உள்ளது. அந்த வண்டிப்பாதையும் சில இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்த பாதையே காணாமல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சுந்தரபாண்டியன் தெற்குத்தெரு உச்சப்பட்டி கப்பலுார் திருமங்கலம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா திருமங்கலம் வட்டம் உச்சம்பட்டி கிராமத்தில் எல் வடிவ பாதையை ஒதுக்கி சிறப்பு நிதி மூலம் சிமெண்ட் தளம் அமைத்துத் தருமாறு பணிவுடன் கே ட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தங்களாச்சேரி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தங்களாச்சேரி ஊராட்சியிலிருந்து பொக்கம்பட்டி ஊராட்சிக்கு செல்வதற்கு வண்டிப்பாதை உள்ளது. அந்த வண்டிப்பாதை மிகவும் மோசமாகவும். ஆக்கிரமிப்புகள் நிறைந்தும் பாதையே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வண்டிப்பாதையை மீட்டுத் தரும்படியும், அதனை தார்சாலையாக மாற்றியும் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பொக்கம்பட்டி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பொக்கம்பட்டி ஊராட்சியில் பெரிய பொக்கம்பட்டி மற்றும் சின்ன பொக்கம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையில் செல்வதற்கு குறுக்கே பெரிய கண்மாய் உள்ளது. தற்போது இந்த இரண்டு கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் செல்வதென்றால் கண்மாய் வழியாக குறுக்கே தான் நடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் இந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், எம்.வீரப்பட்டி, மதிப்பனூர் ஊராட்சி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பனூர் ஊராட்சி எம்.வீரப்பட்டி அங்கன்வாடி மையம் பழுதடைந்து இருப்பதால் குழந்தைகள் உட்க்கார்ந்து சாப்பிடுவத‌ற்கு சிரமாக உள்ளது எனவே அங்வாடிமையத்தை பழுநீக்கம் செய்து தறும்படி கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வடகரை கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வடகரை ஊராட்சியில் தற்பொழுது மின்சார தட்டுப்பாடு காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு போக்க கீ்ழ்கண்ட மூன்று இடங்களில் போர்போட்டு சின்டெக்ஸ் அமைத்து தர வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 1. வடகரை புதூர் கிராமத்தில் 2. சி்ன்னவடகரை கிராமத்தில் பொற்காலநகர் பகுதியில் 3. சின்னவடகரை கிராமத்தில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இரா.தனுஷ்‌கோடி, தலைவர், ஊராட்சி அலுவலகம், கீழக்கோட்டை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. 2011-2012ம் ஆண்டுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி – திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் – கீழக்கோட்டை ஊராட்சி – கீழக்கோட்டை ஆதி திராவிடர் குடியிருப்பு சமுதாயக் கூடம் கட்டும் பணியை மாற்றி மனமகிழ் மன்றம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்குவது சம்பந்தமாக

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், எம்.கல்லுப்பட்டி மதிப்பனூர் ஊராட்சி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எம்.கல்லுப்பட்டி கிராமத்தில் (30000)லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல் நிலை நீர்த் தேக்க தொட்டிஅமைத்து தரும்படி கேட்டுக்கொள்கின்றோம்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212