மனு எண்:

'BDO – மதுரை மேற்கு' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:32  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:2  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:30  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வைரவநத்தம் கிராமம்,சிறுவாலை, வயலுர்,அம்பலத்தாடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌ஐயா, மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா மதுரை விளாங்குடி கொண்டமாரி பாசன கால்வாய் தற்போது நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ9.50 கோடியில் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாயின் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதை அறிகிறோம். பலப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்ட கரையில் போக்குவரத்திற்கு ஏதுவாக சாலை அமைத்துக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கிராம பொதுமக்கள், பூ.பெருமாள்பட்டி, பூதகுடி, அஞ்சல், மதுரை-17 மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்.2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நாங்கள் மேற்குறிப்பிட்ட முகவரியில் குடியிருந்து வருகின்றோம். பல ஆண்டுகளாக பூதகுடி பிரிவு முதல் பெருமாள்பட்டிமடக்கரை வரை மின்விளக்கு எரியாமல் இருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் நடந்து வர அச்சமாக இருக்கின்றது. இரு மின்கம்பங்கள் பழுதடைந்து இருக்கின்றது, அதை சரி செய்து மின் விளக்கை எரியச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு தங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : கிராம பொதுமக்கள், பெருமாள்பட்டி, பூதகுடி, அஞ்சல், மேற்கு ஊராட்சி ஒன்றியம், ஆணையூர் வழி, மதுரை-17 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நாங்கள் மேற்குறிப்பிட்ட முகவரியில் குடி இருந்து வருகிறோம். பூதகுடி பிரிவு முதல் பெருமாள்பட்டி வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அரசு பேருந்து நின்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. மேலும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரும் கீழே விழுகின்றார்கள். ஆதலால் பூதகுடி பிரிவு முதல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ.அழகா் த-பெ.அப்பாவு (லேட்) 2-9, மேலத்தெரு தேனூர், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யாஈ எனக்கு குழு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டி ஊரக வளா்ச்சி அலுவலகத்தில் மனுச் செய்திருந்தேன். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு விரைந்து குழு காப்பீட்டுத் தொகையை அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, ஏ.அழகா்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: லோகசுந்தரி சோனைமுத்து பி.எஸ்ஸி தேனுார் பஞ்சாயத்து தலைவர் தேனுார் ஊராட்சி மதுரை மேற்கு மதுரை 625 402 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா தேனுார் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் இ்ன்றி நெடுச்சாலை யை பயன்படுத்துகின்றனர் அதனால் மகளிருக்கு பெரும் இன்னல்கள் ஏற்படுகின்றன.ஆகவே கிராம மக்களின் கேரரிக்கையினை ஏற்று மகளிர் சுகாதார வளாகம் உடனடியாக அமைத்துத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சமயநல்லூர் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய ஐய்யா வணக்கம். சமயநல்லூர் ஆரம்பசுகாதார நிலையம். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்பகுதியை சுற்றியுள்ள பல கிராம மக்களூக்கு மிகவும் பயனுள்ளதாக குறிப்பாக கற்பினி தாய்மார்களுக்கு, முதியவர்களுக்கும் மிகவும் பயணுள்ளதாக உள்ளது. அபபடிபட்ட இடத்திற்கு தார்சாலை குண்டும் குழியுமா உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கற்பிணி பெண்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம்.ஜெயக்குமார் த-பெ.முருகேசன் வீரபாண்டி காலனி திருமால்புரம் அஞ்சல் மதுரை-14 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டி ஊராட்சி ஊராட்சி உதவித் தலைவா் ஏ.பாண்டி த-பெ ஆறுமுகக்கோனார் அவரும் அதே ஊரே சேந்த என்.கோபால் த-பெ நல்லமாடக் கோனார் ஆகிய இருவரும் தனது வீட்டினுள் 6 அடி பள்ளம் தோண்டி அதற்குள் ஊராட்சி குடித்தண்ணீா் குழாயிலிருந்து மின் மோட்டார் மூலம் குடித் தண்ணீரை திருடி டீக்கடைக்கு விற்றும், மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சீமான் த-பெ பாண்‌டி பாரைப்பட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பாரைப்பட்‌டி கிராமம் காளியம்மன் கோவில் முதல் பழைய ஆதி திராவிடர் காலனி முடிய உள்ள பகுதி தாழ்வாக உள்ளதால் அந்த பகுதிக்கு புதிய சிமெண்ட் சாலை அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பாரைப்பட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பெரியபட்‌‌டி ஊராட்சி நத்தம் சாலை முதல் பாரைப்பட்டி கிராமம் ஆதி திராவிடர் காலனி முடிய உள்ள தார் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் (சுமார் 2 கி.மீ) புதிய தார் சாலை அமைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஐயா.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பெரியபட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பெரியபட்‌‌டி ஊராட்சி நத்தம் சாலை முதல் பெரியபட்‌டி கிராமம் சுடுகாடு முடிய உள்ள தார் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் (சுமார் 1.5 கி.மீ) க‌ழிவு நீர் வசதியுடன் கூடிய புதிய தார் சாலை அமைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஐயா.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123