மனு எண்:

'BDO – மதுரை கிழக்கு' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:10  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:10  

அனுப்புநர்: எ. ஆறுமுகம் த-பெ அழகன் அரும்பனுார் புதுார் அரும்பனுர் ஊராட்சி மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகிறேன் எனக்கு சொந்த வீடு இல்லை விவசாய கூலி வேலை செய்து வருகிறேன் அதனால் எனக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ.லட்சுமி பெரியசாமி, துணை தலைவா் தமிழ்நாடு, யா. தேத்தாங்குளம், யா.கொடிக்குளம், மதுரை வடக்கு வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, அரும்பனூா் ஊராட்சியில் 5000 வாக்காளா்களை உடைய பெரிய ஊராட்சியாகும். ஊராட்சி எழுத்தா் வேலை காலியாக இருந்தது. அந்த காலியிடத்தை அரசின் விதிமுறையினை மீறி தன்னிச்சையாக மேலூா் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரை நியமனம் செய்துள்ளதாக அறிந்து 1.5. 2012 அன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் ஆட்சேபனை மனு கொடுத்து விவாதித்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ. பொன்னுச்சாமி த.பெ அய்யங்காளை சோழம்பதி புதுத்தாமரைப்பட்டி மதுரை 625 107 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை வடக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் புதுத்தாமரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழம்பதி கிராமத்தில் பொது மக்கள் பயன் பாட்டிற்கு தேவைப்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் அரசு வழங்கும் இலவச வீடுகள் கட்டுவதற்கு ஊராட்சி தலைவர், பயனாளிகளை தேர்வு செய்து ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10000- முதல் ரூ.20000- வரை பயனாளிகளிடம் வசூல் செய்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு. சையது அப்துல்காதா், 6 வது வாா்டு உறுப்பினா் (ஐயப்பன் நகா்) யா.கொடிக்குளம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட ஊராட்சியில் 6 வது வாா்டு உறுப்பினராக உள்ளேன். கடந்த 26.01.2012 அன்று நடந்து கிராம சபை கூட்டத்தில் என்னையும் 9 வது சாா்டு உறுப்பினராகிய திரு.சசி என்பவரையும் கூட்டத்தில் புறக்கணித்து விட்டு பதிவேட்டில் கையெழுத்தும் வாங்கவில்லை.மேலும் அந்த கூட்டத்தில் ஊராட்சி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சையது அப்துல்காதர், பிஎஸ்சி., 6வது வார்டு உறுப்பினர், கொடிக்குளம் ஊராட்சி, மதுரை கிழக்கு செல் எண்.9894101134 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்களது ஊரில் குடிநீரை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தொடுவானத்தில் மனு எண்.8162 நாள்.9.2.2012ல் மனுச் செய்திருந்தேன். ஆனால், எனக்கு கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்த பதில், இதனை விசாரித்தோம் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அய்யா தாங்கள் இதற்கான ஆவன [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அனுப்புநர் சி.சசிகுமார்,பி.இ., த/பெ. எம். சின்னப்பாண்டி, 9வது வார்டு மெம்பர், மலையளத்தான்பட்டி, விவசாயக்கல்லுரி போஸ்ட், கொடிக்குளம் கிழக்கு செல் எண்.9047615650 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்களது ஊரான மலையளத்தான்பட்டி வார்டு 9 பகுதியில் பலதரப்பு மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் எண்பது குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்களது அனைத்து தரப்பினைச் சேர்ந்த பெண்களும் மற்றும் ஆண்களும் (அனைத்து வயதினரும்) பாரபட்சமின்றி கழிப்பிட வசதி இல்லாத காரணத்தினால் நான்கு வழிச்சாலையில் விபத்து பகுதி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கொடிக்குளம்-மதுரை கிழக்கு கிராமம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை, கொடிக்குளம் ஊராட்சி, ய. ஒத்தக்கடை, ஐயப்பன் நகர் முதலாம் தெருவில் வசிக்கும் நான், எங்கள் தெருவில் ரோடு வசதி மற்றும் தெரு விளக்கு இல்லாததால், இத்தெருவில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் பேரில் எத்தனையோ மனுக்கள் ஊராட்சி அலுவலகம் மூலம் கொடுத்து பலன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அப்துல்காதா், செல் 98941 01134 ஐயப்பன் நகா் 3-வது தெரு, கொடிக்குளம் பஞ்சாயத்து, யா.ஒத்தக்கடை அஞ்சல் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, ஐயப்பன் நகா் 3-வது தெருவில் வசிக்கும் நாகு என்ற நாகராஜ் பஞ்சாயத்து குடிநீரை முறைகேடாக தான் கட்டும் வீட்டு வேலைக்காக வீணாக பயன்படுத்துவதை தவிர்க்கவும், மேற்படி ஏரியாவில் இவா் அதிகளவு குடிதண்ணீரை முறைகேடாக பயன்படுத்துவதால் குடிதண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுவதையும் தடுத்து நிறுமாறு வேண்டுகிறேன். இப்படிக்கு அ.காதா்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ராமகிருஷ்ணன் செம்பியானேந்தல் அழகா்கோவில் வழி காதக்கிணறு அஞ்சல் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்கள் கிராமத்தில் அம்மா அவா்கள் கொண்டு வந்த பசுமைப்புரட்சி திட்டத்தின் கீழ் வீடுகள் விதவை, மாற்றுத்திறனாளிகள், வீடு இல்லாத ஏழை குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய திட்டம். ஆனால் இதற்கு மாறாக ஏற்கனவே வீடு வழங்கியவா்களுக்கே தற்போதும் வீடு வழங்க உள்ளனா் . எனவே சம்பந்தமான அதிகாாிகளிடம் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அய்யா, வணக்கம் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம்,அரும்பனூர் உள்வட்டடம், அயிலாங்குடி ஊராட்சி சிதம்பரம்பட்டி கிராமம் புல எண் 157-14ல் திரு.ஜெயராஜ் என்பவர் வீட்டின் மேற்கு பகுதியில் 2அடி ஆக்கிரமிப்பு செய்து மாடிப்படி எடுத்துள்ளார். அதனை அகற்ற வட்டாட்சியர் 4.11.2011ல் ஓ.மு.எண். 14105-2011-சி2-ல் அகற்ற உத்தரவு செய்தும் இன்னும் மாடிப்படி அகற்றப்படவில்லை. இதனால் மக்களுக்கு நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. ஆதலால் தயவு கூர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு ஆ.மலையாயி மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »