மனு எண்:

'BDO – கொட்டாம்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:17  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:17  

அனுப்புநர்: சு.தேவேந்திரன், த/பெ.அ.ழ.சுந்தரம், கீழநாட்டார்மங்கலம் அஞ்சல், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் 625 101 ஊர் பொதுமக்கள், வஞ்சிநகரம் கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வஞ்சிநகரம் உட்கடைக் கிராமம், கீழநாட்டார் மங்கலத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தை அ.ழ.சுந்தரம் சுமார் 20 வருடங்களாக டீழகூ ஆபரேட்டர் வேலை வஞ்சிநகரம் ஊராட்சிக்குட்பட்ட கீழநாட்டார்மங்கலத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் 28.01.2010 [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வஞ்சிநகரம் கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கம்பாளிப்பட்டியில் சிமெண்ட் சாலை 75 மீ க்கு போடுவதாக இருந்தது, அதில் 40மீ மட்டும் போட்டுவிட்டு, மீதம் உள்ள 35 மீட்டர் போடாமல் பொய்யாக ரோடு போட்டு விட்டதாக கணக்கு எழுதி முடித்துவிட்டார்கள். ஆகவே அய்யா அவர்கள் மேற்காணும் சாலையை பார்வையிட்டு மீதமுள்ள 35 மீட்டர் வரை சிமெண்ட் சாலை போட [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னக்கொட்டாம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் சின்னக்கொட்டாம்பட்டி கிராமத்தில் சுமார் 600 மக்கள் வாழ்ந்து வருகின்றோம். போதுமான மோட்டார் வசதிகள் உள்ளது. வசதிகள் இருந்தும் 15 நாட்களுக்கு மேல் குடி தண்ணீர் வரவில்லை.இவற்றை பற்றி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்பொழுது இருக்கும் திருமதி. ப.நந்தினி பன்னீர்செல்வம் பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டோம் போதுமான பதில்கள் வரவில்லை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் ஊரில் முறையாக குடிநீர் வசதியும், தெருவிளக்கு வசதியும் முறையாக இல்லை, தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் மர்ம நபர்கள் சிலர் சட்டத்திற்கு புறம்பான சில வேலைகளை செய்து வருகின்றனர். ( மது பானம் விற்பனை ) இதை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும், கடந்த 10 நாட்களாக எங்களுக்கு இந்த இரண்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டியம்மாள், பா/க சந்தனம் கம்பூர் கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனக்கு திருமணமாகி 10 வயதில் ஜெயஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது. எனக்கு H.I.V நோய் பாதிப்பு உள்ளதால், எனது கணவர் என்னைவிட்டு சென்றுவிட்டார். எனது தந்தையும் இறந்துவிட்டார். எனது வயது முதிர்ந்த தாய் மற்றும் எனது மகளுடன் வறுமை நிலையில் வாழ்ந்து வருகிறேன். எனவே அரசு வழங்கும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: P. கேசவன், S/o. பிச்சன், மற்றும் பொது மக்கள் சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, சொக்கம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் நடுத்தெருவில் உள்ள நத்தம் புறம்போக்கு பொது பாதையை வீரன் மகன் பழனிச்சாமி என்பவா் ஆக்கிரமித்து அடுப்படி சுவர் கட்டி வருகிறார். இது சம்மந்தமாக சொக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலா் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அவா்களும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ந. தனபாக்கியம் கஃபெ. (லேட்) சல்லுச்சாமி கொன்னபட்டி கொடுக்கம்பட்டி அஞ்சல் கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலூர் மாவட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்காணும் முகவாயில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தாமான நிலத்தின் பட்டடா என் பி.841. இந்த இடத்தை அ்ததுமீறி ஆக்கிரமிப்பு செய்து பிரச்சனை செய்து வருகிறார்கள். எனக்கு இதை விசாரணை செய்து எனக்கும் என் குடும்பத்தார்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வே்ணடுமென்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஆதிதிராவிடர் கொடுக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌‌கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடூக்கம்ப‌‌ட்டி ஊராட்சிக்கு ஆதிதிராவிடர் பகுதிக்கு குடிநிர் பற்றாகு‌ை‌ற உள்ளதால் புதிய மினி குடிநிர் தொட்டி அமதைது கொடுக்க ஆவணம் செய்யுமாறு பணிவண்புடன் கேட்டுகொள்கிறோம். இப்படிக்கு கொடூக்கம்ப‌‌ட்டி ஆதிதிராவிடர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அம்பலக்காரன்பட்டி கிராமம், தும்பைப்பட்டி ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தும்பைபட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் பாறைக்குளம் மயாண கரையில் எரிமேடை மற்றும் அடிபம்பு அமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சூரப்பட்டி புதுார் சூரப்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, சூரப்பட்டி புதுார் கிராமத்தில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட இந்து பறையர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வணக்கத்துடன் தெரிவிப்பது. எங்கள் ஊருக்கு கிழக்கு புறம் ஒத்தக்கடை அருகே உள்ள மயானச் சாலைக்கு செல்ல வழி இல்லாமல் உள்ளது. ஆண்டியப்பன் குளம் களிங்கி கால்வாய் இருப்பதாலும் நான்கு வழிச்சாலையின் கீழ்புறம் பாலம் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212