மனு எண்:

'BDO – கள்ளிக்குடி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:7  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர் :வி.பழனிகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள், நேசநேரி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நேசநேரி கிராமத்தில் ஆதி திராவிடர் காலனியில் சுமார் 15க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில், சுமார் 50 ஆண்டுகள் பழமையான பயன்பாடற்ற பாழடைந்த கிணறு மக்களுக்கு பயனின்றி இடையூறாக உள்ளதை அகற்ற பணிவுடன் வேண்டுகிறோம். கிணற்றில் சிறிதளவு நீர் இருப்பதால் கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ளது. எனவே உடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மு. தண்டீஸ்வரன், மேல்நிலைத் தொட்டி இயக்குனர், கூடக்கோவில் ஊராட்சி, கள்ளிக்குடி ஒன்றியம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் கடந்த 05.08.2005-ம் ஆண்டு முதல் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம், கூடக்கோவில் ஊராட்சியில்6 குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். தற்போது கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள சித்துதார் ஊராட்சியில் ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக உள்ளது. நான் ஊராட்சி செயலர் பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியை பெற்றுள்ளேன். மேலும், கணினி கல்வி தகுதியும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செங்கப்படை கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது ஊரில் சுமார் ஒரு வருடங்களாக தெருக்களிலும்.பள்ளியின் முன்பும் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது.‌மேலும் பன்றிகள் இறந்து துர்நாற்றம் வீசிக்கொன்றிருக்கிறது.பன்றிகளின் உரிமையயாளர் யாரும் முன்வரவில்லை.இதனால் நோய் பரவும் நிலை உள்ளது .ஆதலால் உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு கானும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் பொது விநியோக கடையானது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி கடை கட்டிடம் மாறுதல் காரணமாக ‌பொதுமக்கள் பெரும் சிரமத்திற்க்குள்ளாகின்றனர். எ‌னவே அய்யா எங்கள் ஊராட்சிக்கு ஒரு பொதுவிநியோக கடை கட்டடிடம் வழங்கி பேருதவி புரியுமாறு பணிவுடன் கெட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊர் பொதுமக்கள், [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் நந்தவனம் அருகில் உள்ள ஒ.எச்.டி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டியது ஆகும் மேற்படி டேங் கட்டிய பொழுது அமைக்கபட்ட பேரர்வெல் மூலம் நீர் ஏற்றி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.மேற்படி போர்வெல் அமைத்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டபடியால் போர்வெல் வறண்டு விட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாரம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், எஸ்.கிருஷ்ணாபுரம் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் எஸ். பி .நத்தம் ஊராட்சி மன்றம்(எஸ்.பி.நத்தம் தாய் கிராமம்)எஸ்ஆதிபுரம்,எஸ்.பெருமாள்பட்டி, எஸ்.கிருஷ்ணாபுரம்,எஸ்.லட்சுமிபுரம்,எஸ்.சோளபுரம்,போன்ற ஐந்து சின்ன கிராமங்களை உள்ளடகியது.மொத்தமாக கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.மொத்தம் 1700 வாக்களர்கள் உள்ளனர்,கடந்த 19-10-2011 ஊராட்சி மன்ற தேர்தலில் திமுக சார்பில் மொத்தம் 407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஜோதிராமன் தற்பொழுது எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவராக [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமானுஜம். சீ, தலைவர், ‌செங்கப்படை ஊராட்சி, கள்ளிக்குடி ஊ.ஒ, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. ஐயா, ஊராட்சிகளில் காண்ட்ராகடர்கள் மூலம் போடப்படும் சிமெண்ட் சாலைகள் ஓரிரு ஆண்டுகளில் சிமெண்ட் மேற்பரப்பு பெயர்ந்து கற்சல்லிகள் கால்களை பதம் பார்க்கின்றன. ஆகையால் சிறிது செலவு அதிகமானாலும் பேவர்ஸ் ப்ளாக்குகள் மூலம் இடப்பட்டால் உறுதியாகவும் பார்ப்பதற்கு ‌நேர்த்தியாகவும் இறுக்கும் . மேலும் ‌ஏதாகிலும் ஒன்று பழுது பட்டாலும் அதைமட்டும் மாற்றி எளிதாக [...]

முழு மனுவைப் பார்க்க »