மனு எண்:

'BDO அலங்காநல்லூர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் :ஜெ.ராஜாராம், த-பெ.ஜெயமணி, சின்னஇலந்தைகுளம், மாரியம்மாள்குளம் அஞ்சல், வாடிப்பட்டிவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.நான் மிகவும் ஏழை குடியை சோ்ந்தவன். நான் ஏற்கனவே தொடுவானம் மூலம் மனுஅளித்துள்ளேன். பதில் கிடைத்துவிட்டது. அலங்காநல்லுார் ஒன்றிய உயா்திரு ஆணையாளா் அவா்கள் காலியிடத்தை நிறைவு செய்ய ஆணையிட மறுக்கிறார். ஊராட்சி மன்றத்தில் காலியாக உள்ள எழுத்தா் பணியிடங்களை நிரப்பி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :J.ராஜாராம் த.பெ. ஜெயமணி சின்ன இலந்தைகுளம் மாியம்மாள்குளம் அஞ்சல் வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம் 625 221 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் சின்ன இலந்தைகுளம் கிராம ஊராட்சியைச் சோ்ந்தவன், நான் மிகவும் ஏழை குடியை சோ்ந்தவன். நான் இந்து பறையன் வகுப்பைச் சாா்ந்தவன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் வேளாண்மை டிப்ளமோ , டேலி படித்துள்ளேன். நான் வேலையில்லாமல் கஷ்டப்படுவதால் எனக்கு சின்ன இலந்தைகுளம் ஊராட்சியில் காலியாக உள்ள எழுத்தா் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மோதிலால் நேரு தனிச்சியம் அஞ்சல் வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம் அ.கு. எண் 625 221 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தனிச்சியம் பிாிவிலிருந்து தனிச்சியம் வரும் வழியில் இருந்த ஊரணி நான்கு வழிச்சாலைக்காக பெரும்பகுதி கையகப்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது ஆக்கிரமிப்புகள் ஆரம்பித்துவிட்டன. அதனால் மீதுமுள்ள இடத்தில் தேசிய ஊரக வேலை உறுதி்த் திட்டத்தின் கீழ் ஊரணி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டல். அவ்விடத்தில் அரசியல் கட்சி கொடி அமைக்கப்பட்டுள்ளதால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அ.ஆறுமுகம், கோட்டைமேடு, வடக்குகாலனி, அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியம், வாடிப்பட்டி வட்டம்‘2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். எனக்கு குடியிருப்பு இல்லாததால் கோட்டைமேடு கிராமத்தில் வடக்கு காலனியில் இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டத்தில் வீடுகட்ட அனுமமதி வழங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வீடுகட்ட ஆரம்பித்தேன். இந்த திட்டம் 2009-2010 இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்டமாகும். எனக்கு முதலாவது ஒரு பில் கண்ட தொகை வழங்கப்பட்டது. எனக்கு மீதம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நிஜாமுதீன், எம்.காம்., தஃபெ.காதர்மைதீன், 22, பாத்திமாஜின்னா தெரு, 54 வது வார்டு மதுரை – 09. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மாற்றுத்திறனாளி. ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவன். எம்.காம் மற்றும் டிப்ளேமா மற்றும் கம்ப்யுட்டர் படிப்பு ப‌டித்துள்ளேன். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு அய்யா அவர்கள் கருணை கூர்ந்து ஊரக வளர்ச்சி துறை சுகாதார ஒருங்கிணபை்பாளர் பணி கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு நிஜாமுதீன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எஸ்.சுந்தரம் நாகம்மாள் கோவில் குறுக்குத் தெரு, நேதாஜி நகர், அலங்காநல்லுார் மதுரை-625501 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.எங்கள் ஊரில் குடிதண்ணீர் பிரச்சினை மற்றும் குடியிருப்பு மத்தியில் பன்றிகள் வளர்ப்பதால் தெருவில் வசிக்கும் மக்களுக்கு வியாதிகள் ஏற்படும் அபாயம் உள்ளகாரணத்தினால் தாங்கள் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, எஸ்.சுந்தரம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சூரி என்ற பெருமாள் ஊர் பொதுமக்கள் சார்பாக கோடாங்கிபட்டி வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா அலங்காநல்லுர் ஒன்றியம், கோடாங்கிபட்டி கிராமம் காஞ்சிரங்குளம் கண்மாய் சுமார் 15 ஏக்கர் சுற்றளவு கொண்டது. இதற்கு மழைநீர் கொண்டுவர ஆக்கிரமிப்பினை அகற்றி துார்வாரும்படி கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு சூரி என்ற பெருமாள் கிராம பொதுமக்கள் சார்பாக கோடாங்கி்பட்டி

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 212