மனு எண்:

'BDO அலங்காநல்லூர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:17  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:17  

அனுப்புநர்: ம.வெள்ளைத்தாய் மருதமுத்து, உப தலைவர், அழகாபுரி ஊராட்சி, அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எங்கள் ஊரின் கிழக்கில் உள்ளே செல்லும் கண்மாய் ஓடையில் மரகன்றுகள்,வீட்டின் கழிப்பறை வசதி செய்தும் இருக்கின்றனர். அதனால்மழைகாலங்களிலும், விவசாய உபரி நீர் அதிகமாக வரத்து இருப்பதால் ஊருக்குள் நீர் புகும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.இந்த‌ ஆக்கிரமிப்புகளை உடனே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மோதிலால் நேரு, தனிச்சியம் (அஞ்சல்) வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். (9585773633) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எங்கள் கி்ராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் இடிக்கப்பட்டு, தற்போது ஊா்க் கடைசியில் ஒரு மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. எங்கள் கிராமத்து மக்கள் தொகைக்கு ஒரு மையம் போதுமானதாக இல்லை. மேலும் பிஞ்சுக் குழந்தைகள் மையத்திற்கு செல்லும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம பொதுமக்கள் அச்சம்பட்டி ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அச்சம்பட்டி ஊராட்சியின் பெரியகண்மாய் மண் வெட்டி ஆழப்படுத்த வேண்டுதல். பாசன கால்வாய் வழியாக விவசாயத்திற்கு நீர் பயன்படுத்தப்படுகிறது. என‌வே 253 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்மாய் பள்ளங்கள் மண்ணால் மெத்தப்பட்டுள்ளது. எனவே கண்மாயில் மண்ணை அள்ளி ஆழப்படுத்து பாசனத்திற்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், குலமங்கலம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குலமங்கலம் முதல் பன்னைகுடி வரை உள்ள கிராமச்சாலை மிக மோசமான நி‌‌ை‌‌லயில் உள்ளதால் அதில் பயனிக்கும் குலமங்கலம் மற்றும் காயாம்பட்டி கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால்இச்சாலையினை சீரமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னை இலந்தைக்குளம் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தேசிய ‌ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2011-12 ல் ஏற்கனவே 50 நாள்கள் மேல் பணிபுரிந்த ஆதரவற்ற முதியோர் உதவி தொகை ரூ1000 பெறும் பயனாளிகளுக்கு வேலை அளிக்கப்படுமா ? என்ற விபரம் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னை இலந்தைக்குளம் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா மேற்கண்ட ‌ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிய ஏற்கனவே பணிபுரிந்த ஆதரவற்ற முதியேரர் உதவி ரூ1000 பெறும் பயனாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கிராமத்தில் பெரும் சச்சரவுகள் ஏற்படுகிறது. எனவே அய்யா அவர்கள் தக்க நடவடிக்கை மேற் கொள்ள ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர்.ஆதிதிராவிடர் காலனி ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. எங்களது கிராமத்தில் ஆதிதிராவிடர் [பறையன்] குடுபத்தார்கள் சுமார் 150 குடுபங்கள் வசித்து வருகின்றோம். இதுவரை சமுதாய கூடம் என்களது ஊராட்சியில் அமைக்கப்படவிலிலை. எனவே எங்களது ஊராட்சியில் அரசு மூலம் எங்களது தெருவில் சமூதாய கூடம் அமைத்து கொடுக்குபடி பனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ.ஜெயரமன், த/பெ மு.அழகர் சாமி அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் ஊரில் நான்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளன.முறையே 60000லிட்டர் தொட்டிகள் இரண்டும், 10000லிட்டர் தொட்டிகள் இரண்டும் உள்ளன.இதுகளிருந்து வரும் குடிநீர் ஒருசில தெருக்களுக்கு குடிக்க ஏற்றாதகவும்(நல்ல குடிநீர்), மாற்ற தெருக்களுக்கு குடிக்க முடியதளவு (உப்பு தண்ணீர்) உள்ளது.தயவு கூர்ந்து தாங்கள் இந்த பிரச்சனைகளை தீர்த்து உதவுமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கூ.ஜகன்நான் த/பெ.கூலு AD colony ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா. நான் ராஜாக்கள்பட்டி ஆதீதிராவிடர் இனத்தை சேர்ந்தவன் எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் நான் வறூமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கிறோம் எங்களூக்கு குடியிற்க்க வீடு இல்லை எனவே அரசு வழங்கு இலவச வீட்டு திட்டத்தில் என்க்கு வீடு வழங்க ஆவனம் செய்யுமாறூ பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அ.மலைச்சாமி, தேவேந்திர குலமக்கள் சார்பாக,த-பெ.அழகுமலை, கே.காந்திகிராமம், அலங்காநல்லூர் அஞ்சல், வாடிப்பட்டி தாலுகா,மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நாங்கள் மேலே கண்ட விலாசத்தில் 70 ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். தேவேந்திர குலமக்களுக்கு மட்டும் மயானக்கூறை இல்லை. பலமுறை மனுச்செய்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மற்ற எல்லா சமூக மக்களுக்கும் மயானக்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி இடம் கல்லணை பஞ்சாயத்து இடம் நத்தம் புறம்போக்கில் ஓடைக்கரையில் உள்ளது மற்றும் அலங்காநல்லூர் டவுன் பஞ்சாயத்து இடையில் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212