மனு எண்:

'உதவி இயக்குநர் (Employment)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:26  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:24  

அனுப்புநர் :டாக்டா். எஸ் பாபுஐி 80 முருகன் காம்பவுண்ட் பாரதியார் ரோடு மதுரை11 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வணக்கம் நான் கடந்த 36 வருடங்களாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடா்ந்து புதுப்பித்து வருகிறேன். என்னுடைய வேலை குறித்து தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தினை அனுகியபோது பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் என்று கடந்த 36 வருடங்களாக கூறுகின்றனா் எனவே எனது வேலை குறித்து முடிவான பதிலை வழங்குமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அக்கினி சிறகுகள் சமூக சேவை அமைப்பு, 7/4, மேலத்தெரு, மேலூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனைத்து பகுதியில் நடக்கவிருக்கும் அங்கன்வா‌டி மற்றும் சத்துனவு பனியாளர்கள் ‌தேர்வினை தங்களின் ‌நேரடிக் கண்கானிப்பில் எடுத்துக்கெள்ளும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் இதனால் பல ஏழை எளிய மக்கள் பயனடய வாய்ப்புகள் அதிகம் உள்ளது…. நன்றி! அக்கினி சிறகுகள் சமூக சேவை அமைப்பு மேலூர்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஜி.நாகசௌந்தரி, க/பெ. தெய்வேந்திரன், மேட்டுர், அச்சம்பட்டி போஸ்ட், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் பிஎஸ்சி., பட்டாதாரி திருமணமாகி எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் கால் ஊனமுற்றவர். தற்போது நான் வேலைவாய்ப்பு இன்றி கணவர் மற்றும் குழந்தைகளுடன் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறேன். எனவே, எனது கணவர் மற்றும் எனது குழந்தைகளின் நலம் மற்றும் எனது குடும்ப நலம் கருதி கல்வித்தகுதி முன்னுரிமை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எஸ்.பாபுஜி த-பெ.ஏ.சண்முகம்பிள்ளை 80, முருகன் காம்பவுண்டு பாரதியார் ரோடு ஜெய்ஹிந்திபுரம் மதுரை 11. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 36 வருடங்களாக தொடா்ந்து புதுப்பித்து வருகிறேன். எனக்கு இதுவரை எவ்வித நோ்முகத் தோ்விற்கும் அழைப்பு வரவில்லை. வேலையும் கிடைக்கவில்லை. நான் ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்ததற்கும் எவ்வித பதிலும் வரவி்ல்லை. எனவே எனது மனுவிற்கான தக்க பதில் அளிக்க வேலை வாய்ப்பு அலுவலத்திற்கு பரிந்துரை செய்யுமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.எம்.பாலகிருஷ்ணன், 7-140, அணைந்தமாடன் பச்சேரி, தருவைக்குளம் போஸ்ட், ஒட்டப்பிடாரம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் பி.பார்ம் படித்துள்ளேன். தற்போது மருந்தாளுநா் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமனம் செய்ய அறிவிப்பு வந்துள்ளது. தற்சமயம், நான் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகிய போது, டி.பார்ம் முடித்தவா்களுக்கு தான் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். நான் பி.பார்ம் படித்து முடித்து சென்னையில் பதிந்து, மதுரையில் புதுப்பித்துள்ளேன். எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :க.சிலம்பரசி த-பெ.க்ககப்பன் 1-15 வ.உ.சி தெரு தெற்குத் தெரு அஞ்சல் மேலூா் வட்டம், மதுரைமாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருக்கிறேன். எனக்கு அப்பா கிடையாது நாங்கள் ஏழு பேரும் பெண்குழந்தைகள். ஆண்குழந்தை கிடையாது.எங்கள் குடும்பம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளது. எங்கள் வீட்டில் நான் தான் கல்லூரி சென்று படித்துள்ளேன். அனைவருககும் கல்வி இயக்கம் அலுவலகத்தில் எழுத்தா் பணி காலியிருப்பதாக அறிந்து அதற்கு மனு செய்துள்ளேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ். ஜெயந்தி க-பெ.(லேட்)மலா்க்கொடி அழகப்பகோன்பட்டி நல்லத்தேவன் பட்டி வழி (ஊராட்சி) போத்தம்பட்டி தபால், உசிலம்பட்டி வட்டம், மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் ஒரு ஆதரவற்ற விதவை, எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் பிளஸ்-டு வரை படித்துள்ளேன். தட்டச்சில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலையில் தேர்வு பெற்றுள்ளேன். ஆதலால் எனக்ககுஏதாவது ஒரு வேலைவாய்பபு கொடுத்தது என்னையும் எனது குழந்தைகளையும் காப்பாற்றுமாறு தங்களை பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். இப்படிக்கு எஸ்.ஜெயந்தி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.தா.உஷாராணி, க-பெ. செ.மதியழகன், 39, கற்பக விநாயகா் கோவில் தெரு, தீக்கதிர், கோ.சாலைபுதூா், தத்தனேரி போஸ்ட், மதுரை-18 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மனுதாரா் ஆதரவற்ற விதவை சான்று பெற்று மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் 01.03.2011-ல் பதிவு செய்துள்ளதை, தவறாக வேலைவாய்பப்கத்தில் 20.01.2012 என்று பதிந்துள்ளதை மாற்றக் கேரரியும், கருணை அடிப்படையில் வேலை வேண்டுதல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சி.லதா க-பெ. ஆர்.இராமசாமி 18-7சி விவேக் இல்லம் திருவள்ளுவர் நகர் மெயின்தெரு பழங்காநத்தம், மதுரை-3 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தேன். தற்சமயம் நான் மதுரைக்கு மாற்றித்தரும்படி கேட்டிருந்தேன் அவா்களும் மாற்றி விட்டதாக தபால் அனுப்பி யிருந்தார்க்கள். ஆனால் இப்பொழுது என்னுடைய பெயா் மதுரை மாவட்ட வேலை வாயப்பு அலுவலகத்தில்ல இல்லை என்று சொல்கிறார்கள். இதை ஆய்வு செய்து தாங்கள எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பா.ரெங்கேஸ்வரி, த-பெ.பாண்டி, 20,காஜியார் தோப்பு, தெற்கு வெளி வீதி, மதுரை-1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனது கணவா் கடந்த 3.04.2009 அன்று இறந்துவிட்டார். எனக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. 17.11.2009 அன்று ஆதரவற்ற விதவை சான்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். எனக்கு முன்னுரிமை அடிப்படையில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து எவ்விதமான அழைப்புகளும் வரப்பெறவில்லை.12ம்வகுப்பு மற்றும் Data Entry [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123