மனு எண்:

அனுப்புநர் :
வசந்தகுமார்
கிடாரிபட்டி
மேலூா் வட்டம்,
மதுரைமாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
கடந்த 3.1.2012 அன்று தொடுவானம் மனுஎண் 7884- கிடாரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நீா்பிடிப்பு கண்மாய்களின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புகார் மனு அளித்திருந்தேன். 20.1.12 அன்று ஊராட்சிதலைவருக்கு கண்மாய்களை சா்வே செய்ய கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிந்து கொண்டேன். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுவின் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
வசந்தகுமார்

One Response to “நீர்பிடிப்பு கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி”

 1. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  கிடாரிப்பட்டி ஊராட்சியில் 33 கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நில அளவை செய்ய 09.02.2012-ல் ரூ.2640/- ஊராட்சி மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளது. நில அளவைத் துறை மூலம் அளந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாக தாமதம் ஏற்படுகிறது. தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் மேற்கண்ட பணி மேற்கொள்ளப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

  ——————
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்